இளைஞர்களே "தலகாணியை" வைத்துக் கொள்ளாதீர்கள்.. உயிர் போய்விடும்.. டாக்டர் அட்வைஸ்!
சென்னை: பான் மசாலா, குட்கா போன்ற போதை பொருட்களில் இருந்து இளைஞர்கள் விலகியே இருக்க வேண்டும் என மருத்துவர் பரூக் அப்துல்லா அறிவுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து டாக்டர் பரூக் அப்துல்லா தனது பேஸ்புக் பக்கத்தில் கூறியிருப்பதாவது: பான் மசாலா, குட்கா போன்றவை புகையிலை கொண்டு தயாரிக்கப்படுபவை.
நிகோடின் மூலம் போதைத் தன்மையை உருவாக்குபவை. இத்தகைய மெல்லும் வகையில் அல்லது வாய்க்குள் ஒதுக்கி வைத்துக் கொள்ளும் பான் மசாலா வகைகள் பற்களின் ஈறுகளில் புண்ணைத் தூண்டி எதிர்காலத்தில் புற்று நோயை உருவாக்கவல்லவை.

மேலும் தலகாணி / பில்லோ என்று இளைஞர்களால் செல்லமாக அழைக்கப்படும் வடிகட்டப்பட்ட புகையிலை ப்ராண்ட்டை வாய்க்குள் ஒதுக்கி வைத்துக் கொண்டு அதற்கு அடிமையாகிக் கொண்டிருப்பதையும் அறிய முடிகிறது. பள்ளி செல்லும் சிறார் முதல் கல்லூரி செல்லும் இளங்காளையர் வரை நடுத்தர வயதினர் முதல் முதியோர் வரை இத்தகைய பான் மசாலா, குட்கா , பில்லோ போன்றவற்றை பயன்படுத்தி வருவதை அறிய முடிகிறது.
இந்தப் போக்கு ஆபத்தானது. போதையின் பக்கம் இழுத்து கல்வியின் மீதும் செய்யும் தொழில் மீதும் நாட்டமற்றவர்களாய் மாற்றி கொள்கையோ எதிர்காலமோ அற்றவர்களாக மாற்றும் தன்மை கொண்டது. நிகோடின் என்பது இதய மற்றும் மூளை ரத்த நாளங்களில் சுருக்கத்தை ஏற்படுத்தி அடைப்பை உண்டாக்கி மரணத்தை விளைவிக்கலாம். பான் மசாலா/ குட்கா / பில்லோ போன்றவற்றால் வாய் மற்றும் தொண்டைப் பகுதி புற்று நோய் ஏற்படும் வாய்ப்பு அதிகம்.
தற்போதைய ஐபிஎல் போட்டிகளில் பான் மசாலா விளம்பரங்களில் கிரிக்கெட் ஜாம்பவான்கள் கபில் தேவ் , கவாஸ்கர், சேவக், க்ரிஸ் கெய்ல் போன்றோர் இடம்பெறுவது உள்ளபடி ஏமாற்றத்தையும் சலிப்பையும் கவலையையும் ஏற்படுத்துகிறது. இத்தகைய விளம்பரங்களை நாடு முழுவதும் உள்ள பள்ளி செல்லும் சிறார், சிறுமியர் இளையோர் பார்ப்பார்கள் என்ற பொறுப்பு அவர்களிடம் இல்லை என்பது உள்ளபடி வருத்தமளிக்கிறது.
இது போன்ற விளம்பரங்களுக்கு சுகாதாரத் துறை தடைவிதித்தாலும் நன்றே.
எனினும் இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி ஆபத்தை எடுத்துரைக்கும் பொறுப்பு நமக்கு இருக்கிறது. பான்மசாலா , குட்கா , பில்லோ , புகையிலை , சிகரெட், பீடி, சுருட்டு என அனைத்திலிருந்தும் விலகி இருப்பதே ஆரோக்கியம். இவ்வாறு டாக்டர் பரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications