மூலிகை மாமருந்து மாசிக்காய்.. அல்சரை போக்கும் மாசிக்காயின் எண்ணெய்.. மாசியின் மகத்துவ மருத்துவம்
சென்னை: நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கக்கூடிய ஜாதிக்காய், மாசிக்காய், வசம்பு, கடுக்காய், பெருங்காயம், இந்த 5 பொருளையும் வாங்கி, நெருப்பில் சுட்டு பவுடர் செய்து வைத்து கொள்ள வேண்டும். இதிலிருந்து சிறிது எடுத்து, தேங்காய் எண்ணெய் குழைத்து குழந்தைகள் குளித்ததுமே நெற்றி, கன்னம், உள்ளங்கை உள்ளங்கால்களில் பொட்டு வைத்தால் கண் திருஷ்டி அகலும்.. அதனால்தான் மாசிக்காயை குழந்தைகளின் நண்பன் என்பார்கள். ஆனால், குழந்தைகளுக்கு மட்டுமல்ல அனைவருக்குமே மருத்துவ நன்மை தரக்கூடியது இந்த மாசிக்காய்.. அவைகளை சுருக்கமாக பார்க்கலாம்.
மாசிக்காயில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம். மாசிக்காய் மரத்தில் பூச்சிகள், துளையிட்டால், மர கிளையிலிருந்து பால் போல வடிந்து வரும்.. அது உறைந்து திரண்டு கெட்டிப்பட்டுவிடும்.. இதனைதான் மாசிக்காய் என்கிறோம்.

உதிரப்போக்கு - வெள்ளைப்போக்கு
பெண்களுக்கு மிகச்சிறந்த மருந்து என்றால் இந்த மாசிக்காய் எனலாம்.. உதிரப்போக்கு அதிகமாக இருந்தால், வெள்ளைப்போக்கு பாதிப்பு இருந்தால், மாசிக்காயை தேனில் குழைத்து தினந்தோறும் 3 வேளை சாப்பிடலாம்.
நீர் நிறைந்த பாத்திரத்தில் மாசிக்காயை சேர்த்து காய்ச்சி அந்த நீரை குடித்து வந்தாலும் மேற்கண்ட பிரச்சனைகள் தீரும். மாசிக்காயை தூளை பாலில் கலந்தும் குடித்து வரலாம். இதனால் மாதவிடாய் சீராவதுடன் கருப்பையிலுள்ள அழுக்குகள், நச்சுக்கள் வெளியேறிவிடும்.
ஆண்மை கோளாறுகள்
மாசிக்காய், கடுக்காய், ஜாதிக்காய், ஆவாரம்பசை, கிராம்பு, ஏலக்காய், வல்லாரை இலை போன்ற தூள்களை நாள்தோறும் நெய்யில் கலந்து சாப்பிட்டாலே நரம்புகள் வலிமை பெற்று ஆண்மை கோளாறுகளும் விலகிவிடும்.
அதேபோல பற்களில் தொந்தரவு இருந்தால், மாசிக்காயை தண்ணீரில் போட்டு வாய் கொப்பளித்து வரலாம். இதனால் ஈறுகளில் ரத்தக்கசிவு நின்று, ஈறுகள் பலம்பெறும். பல் வலி இருந்தாலும் தீரும்..
மூல பாதிப்புகளுக்கு நிவாரணம் மாசிக்காய்
முகப்பரு இருந்தால், ஜாதிக்காயுடன் சேர்த்து குழைத்து, சிறிது எலுமிச்சம்பாச்சாறு கலந்து தடவலாம்.. மாசிக்காய், ஜாதிக்காய், கிராம்பு மூன்றையும் தூளாக்கி முகத்தில் தடவி ஊறவைத்து கழுவிவரலாம்.
கடுமையான மூல பாதிப்புகளுக்கும் மாசிக்காய் மருந்தாகிறது.. இதனை நீரில் இழைத்து, ஆசனவாயில் வைக்கும்போது, மூல பாதிப்பு குறைகிறது.. தீக்காயங்கள், சேற்றுப்புண்கள், உடலிலுள்ள கட்டிகள், புண்களுக்கு குளிர்ச்சி நிறைந்த மாசிக்காயை பயன்படுத்தலாம். காயங்கள் காரணமாக ரத்தம் வெளியேறினால் மாசிக்காயை இழைத்து தடவுவதால், நிவாரணம் கிடைக்கும்.
மாசிக்காய் மகத்துவம்
பச்சிளம் குழந்தைகளுக்கு மூச்சுத்திணறல், இளைப்பு, வயிற்றுப்போக்கு, சுவாசக்கோளாறு, தொண்டை தொந்தரவு என அத்தனைக்குமே மருந்தாவது மாசிக்காய் மட்டுமே.
வசம்பு, அதிமதுரம், கடுக்காய், ஜாதிக்காய், சுக்கு, திரிகடுகம், சித்தரத்தை, ஜாதிக்காய் பொடிகளுடன், கற்பூரவல்லி சாற்றை கலந்து வெயிலில் காயவைத்து உருட்டி எடுத்துக் கொள்ள வேண்டும். மந்தம், வயிறு உப்புசம் போன்ற தொந்தரவு இருந்தால், இந்த உருண்டையில் சிறிது எடுத்து தாய்ப்பால் கலந்து குழந்தைகளுக்கு நாக்கில் தடவி விட்டால் தீர்வு கிடைக்கும்.
வாய்ப்புண், நாக்குப்புண், குடல் புண், வயிற்றுப்புண் போன்ற புண்களுக்கு சித்த மருத்துவத்தில் உதவுவது இந்த மாசிக்காய்தான். மாசிக்காயைவிட, இதன் எண்ணெயை பயன்படுத்துவது இன்னும் பாதுகாப்பானது என்கிறார்கள் மருத்துவர்கள். அதாவது தேங்காய்ப்பாலுடன் சேர்த்து மாசிக்காய் எண்ணெய் தயாரிக்கப்படுகிறதாம்,. இதனை அல்சருக்கு மருந்தாக சாப்பிடும்போது, வயிறு, குடலுக்கு நன்மையை தருகிறது.
மாசிக்காய் எண்ணெய் எப்படி தயாரிப்பது
மாசிக்காய் பொடி கடையிலிருந்தோ அல்லது அரைத்தோ வைத்து கொள்ள வேண்டும்.. ஒரு மூடி தேங்காயை மிக்ஸியில் போட்டு நீர் ஊற்றி விழுதாக அரைத்து பால் எடுக்க வேண்டும். பிறகு அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து, அரைத்த தேங்காய் பாலை ஊற்றி, மாசிக்காய் படவுரையும் கொட்டி, குறைந்த தீயில் கொதிக்கவிடவேண்டும்.
தேங்காய் பாலில் இருந்து எண்ணெய் பிரிந்து வரும் வரை கொதிக்கவிட வேண்டும். இறுதியில், இந்த எண்ணெய்யை ஆற வைத்து, ஒரு பாட்டில் ஊற்றி வைத்துக்கொள்ளலாம். இதனை ஆறவைத்து ஒரு பாட்டிலில் ஊற்றிவைக்கவும்.
இந்த எண்ணையை தினமும் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் 10 மில்லி அளவு சாப்பிட்டு வரவேண்டும்.. 30 நாட்களுக்கு சாப்பிட்டு வந்தால், அல்சர் புண்கள் ஆறிவிடும்.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு












Click it and Unblock the Notifications