முகத்தில் பளபளப்பு.. தங்கம் போல மினுமினுப்பு.. ஆரஞ்சு பழத்தோலை இப்படி யூஸ் பண்ணுங்க.."பெஸ்ட்" பவுடர்
சென்னை: கமலா பழம் என்று சொல்லக்கூடிய ஆரஞ்சு பழத்தின் நன்மைகள் பலரும் அறிந்ததுதான்... உடலுறுப்புகளுக்கு பல நன்மைகளை தரும் இதே ஆரஞ்சு பழம்தான், சரும அழகுக்கும் பேருதவி புரிகிறது. எப்படி தெரியுமா?
ஆரஞ்சு பழத்தில், வைட்டமின் A, C, B, B1, B2 ப்ரோடீன், நார்ச்சத்துக்கள், போலெட்ஸ், தையாமின், பொட்டாசியம், கால்சியம், மெக்னீசியம், சுண்ணாம்புச்சத்தும், இரும்புச்சத்தும் நிறைந்துள்ளன.

புற்றுநோய்: ஆன்டிஆக்ஸிடண்ட்ஸ் நிறைந்துள்ள பழம் என்பதால், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்வதில் இந்த பழத்துக்கு பெரிய பங்கிருக்கிறது.
வைட்டமின் C, நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்துவதால், சிறுநீரக மற்றும் கல்லீரல் பிரச்னைகள் தீர இந்த பழம் உதவியாக இருக்கிறது.. நம்முடைய உடலிலுள்ள செல்களை பாதிக்கும் "ஃப்ரீ ராடிக்கல்ஸ் என்ற பொருளைக் கட்டுப்படுத்தும் தன்மைகொண்டது.. புற்றுநோய் ஏற்படாமல் காக்க செய்கிறது ஆரஞ்சு பழங்கள்.. தினமும் இந்த பழத்தை சாப்பிட்டு வந்தாலே பெண்களுக்கு 50 சதவீதம் புற்றுநோய் வரும் ஆபத்து குறைகிறதாம்.
ரத்த அழுத்தம்: ரத்த அழுத்தமும் கட்டுக்குள் உள்ளன.. முடி கொட்டுதலை தடுத்து நிறுத்தி, முடி வளரவும் வழி வகுக்க செய்கிறது. உடலிலுள்ள பித்தத்தை நீக்குகிறது. காய்ச்சலாக இருக்கும்போது, குடிக்கக்கூடிய ஒரே ஜூஸ் இந்த ஆரஞ்சுதான்.
செரிமானத்தை அதிகப்படுத்தி, தேவையற்ற கலோரிகளை எரித்து, உடல் எடையை குறைக்க உதவுகிறது. சிறுநீர் கோளாறுகள் இருந்தாலும், இரவில் அரை டம்ளர் கமலாப்பழம் ஜூஸ் குடித்தாலே நிவாரணம் கிடைக்கும்.
செரிமானம்: அதேபோல, சருமத்துக்கு இந்த பழம் எப்படி கை கொடுத்து உதவுகிறது தெரியுமா? சருமத்தை மென்மையாக வைத்திருக்க தூண்டுகிறது இந்த ஆரஞ்சு பழம்.. அதனால்தான் அழகுசாதன பொருட்களின் பல தயாரிப்புகளில் ஆரஞ்சுப்பழம் சேர்க்கப்படுகிறது...
- கமலா ஆரஞ்சுச்சாறு, தக்காளிச்சாறு, பசுநெய் இந்த மூன்றையும் முகத்தில் தடவி வந்தால், கருமை நிறம் மறைந்து முகம் பிரகாசமடையும்.
- ஆரஞ்சு தோலை வெயிலில் காயவைத்து, பொடி செய்து வைத்து கொள்ள வேண்டும். அதேபோல, பாதாம் பருப்பையும் நன்றாக அரைத்து பொடி செய்து கொள்ள வேண்டும். இரண்டிலும் ஒரு ஸ்பூன் எடுத்து பசும் பாலுடன் சேர்த்து முகத்தில் மசாஜ் செய்து 10 நிமிடம் முதல் 15 நிமிடம் வரை வைத்து கழுவினால் சருமம் பொலிவு பெறும். பளிச்சென காணப்படும்.
- ஆரஞ்சு தோல் பவுடரை, பசும்பால், தேங்காய் எண்ணெய் போன்றவற்றுடன் சேர்த்தும் முகத்தில் தேய்த்து கழுவி வரலாம். இதனால், கரும்புள்ளிகள், பருக்கள் நீங்கி, சருமத்தில் வறட்சி இல்லாமம்ல இருக்கும்.
ஆரஞ்சு பழத்தோலுடன், வேப்பிலையும் சேர்த்து விழுதாக அரைத்து, அதனுடன் தேங்காய் எண்ணெய் கலந்தும் தேய்த்து வந்தாலும், கொப்புளங்கள், சருமங்கள் நீங்கும்.
- ஆரஞ்சு தோல் பவுடருடன் சந்தன தூள், ரோஸ்வாட்டர், எலுமிச்சை சாறு கலந்தும் முகத்தில் தேய்த்து கழுவி வரலாம்.
- ஆரஞ்சு தோல் பவுடரை சிறிது தயிர் சேர்த்து முகத்துக்கும், கழுத்து, கைகளுக்கும் தேய்த்து வந்தால், பொலிவு கிடைக்கும். கண்களுக்கு கீழே கருவளையம் இருந்தாலும், சருமத்தில் சுருக்கம் இருந்தாலும் போய்விடும்.,
- ஆரஞ்சு ஜூஸ் 2 ஸ்பூன், ஓட்மீல் - 1 டேபிள் ஸ்பூன் இவைகளை பேஸ்ட் போல கலந்து, முகத்தை சுற்றிலும் ஸ்க்ரப் போல செய்து 10 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவினால் சருமம் பொலிவு கிடைக்கும்.
- - ஆரஞ்சு பழ பவுடரில் டீ தயாரித்து குடித்து வந்தாலும், சருமத்துக்கு மிகப்பெரிய ஆரோக்கியம் கிடைக்கும்.
- ஆரஞ்சு பழ தோல்களில் வினிகரை கலந்து வீட்டை சுத்தம் செய்தால், தரையிலிருக்கும் எண்ணெய் பசைகள் நீங்கிவிடும்..!!
-
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு












Click it and Unblock the Notifications