Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சேப்பங்கிழங்கு.. சர்க்கரை நோயாளிகளின் "சஞ்சீவி மருந்து" சேப்பங்கிழங்கு இலை.. ஆயுசை கூட்டும் இலைகள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சேப்பங்கிழங்கைவிட, சேப்பங்கிழங்கின் இலைகளில் நிறைய மருத்துவ குணங்கள் உள்ளதாம்.. இந்த இலைகளின் நன்மைகள் என்னென்ன தெரியுமா?

சேப்பங்கிழங்கினை, சிலர் சேனை என்பார்கள்.. சிலர் சோம்பு என்பார்கள்.. சிலர் சாமைக்கிழங்கு என்பார்கள்.. சிலர் சேமங்கிழங்கு, சேமைக்கிழங்கு என்பார்கள்.. 132 கிராம் வேகவைத்த ஒரு கப் சேப்பங்கிழங்கில் 187 கலோரிகள் இருக்கிறதாம்..

Excellent Health Benefits of Seppankizhangu Do you know Taro Root Leaves is the Best food for Diabetics

சத்துக்கள்: பீட்டா கரோட்டின் போன்ற ஆன்டிஆக்சிடெண்ட் இந்த சேப்பங்கிழங்கில் அதிகம் உள்ளதால், கண் பார்வையை சிறப்பாக்குகிறது. அத்துடன், கண்புரை போன்ற பாதிப்புகளையும் தடுத்து நிறுத்துகிறது. பெருங்குடல் புற்றுநோய் மற்றும் அழற்சி குடல் நோய்க்கு எதிராகவும் பாதுகாக்கிறது. இதிலுள்ள பாஸ்பரஸும், கால்சியமும், பற்களுக்கும் எழும்புகளுக்கும் அதிக வலுவை தருகிறது.. நார்ச்சத்து அதிகம் இருப்பதால் செரிமான கோளாறு பிரச்சனைகள் ஏற்படாமல் தடுக்கிறது..

குடல் புண்கள் இருப்பவர்கள், வாரம் 2 முறையாவது சேப்பங்கிழங்கு சாப்பிட்டால் நிவாரணம் கிடைக்கும்.. நரம்பு தளர்ச்சி மற்றும் ஆண்மை குறைபாடு உள்ளவர்களுக்கு இந்த கிழங்கு ஒரு வரப்பிரசாதம் என்றே சொல்லலாம். சேப்பங்கிழங்கில் வைட்டமின் A, E சருமத்தில் ஏற்படும் சுருக்கங்கள் வரவிடாமல் பாதுகாக்கிறது.

இலைகள்: இவைகள் எல்லாம் இந்த கிழங்கின் குணங்கள் என்றாலும், இதன் இலைகள் கிழங்குகளைவிட பலன்தரக்கவை. இந்த இலையை பார்ப்பதற்கு இதய வடிவில், அடர்ந்த பச்சை நிறத்தில் காணப்படும்.. சமைத்து சாப்பிட்டால் ருசி அபாரமாக இருக்கும்.

இந்த இலையில், வைட்டமின் C மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்திருப்பதால், புற்றுநோய் செல்களை வளர விடாமல் தடுக்கிறது. அதிலும் குடல் புற்றுநோயை தடுக்கும் ஆற்றல் இந்த இலைகளுக்கு உண்டு.. பெண்களுக்கு வரும் மார்பக புற்று நோய் வராமல் தடுக்கவும் இந்த இலை துணைபுரிகிறது.

வழக்கமாக கீரைகள் என்றாலே கண்களுக்கு வலிமை தரக்கூடியது. அதிலும் இந்த கிழங்கின் கீரை, கண் ஆரோக்கியத்தை காக்கிறது.. வயதாகுவதால் ஏற்படும் கண் புரைகளை சரியாக்குகிறது.

உயர் ரத்த அழுத்தம் பிரச்சனை உள்ளவர்கள் இந்த இலையை உணவில் சேர்த்து கொள்ள வேண்டும். காரணம், சமீபத்தில் இந்த இலைகளின் சாற்றை வைத்து, எலிகளுக்கு தந்து ஆராய்ச்சி செய்திருக்கிறார்கள். அப்போது, அதன் ஆண்டிஹைர்பெர்ட்டென்சியஸ் மற்றும் கடுமையான டையூரிக் தன்மை, எலிகளின் உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துவது தெரிய வந்துள்ளது. எனவே, ரத்த அழுத்த பிரச்சனை உள்ளவர்களுக்கு இந்த இலை மிகச்சிறந்த உணவாக திகழ்கிறது.

சர்க்கரை நோயாளிகள்: அதேபோல, இந்த இலைகள், நீரிழிவு நோயாளிகளுக்கு மிகச்சிறந்த மருந்தாக உதவுகிறது.. இந்த சேப்பங்கிழங்கு இலைகளிலிருந்து பெறப்படும் எத்தனாலை, சர்க்கரை நோய் உள்ள எலிகளுக்கு தந்து பரிசோதித்திருக்கிறார்கள். அப்போது, ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு குறைந்திருப்பது ஆய்வில் தெரியவந்ததாம். இந்த இலைச்சாறு நீரிழிவு நோயாளிகளுக்கு சஞ்சீவி மருந்து என்றே சொல்கிறார்கள்.
காரணம், சேப்பங்கிழங்கு இலையின் சாறை தொடர்ந்து குடித்து வந்தால், ரத்தத்தில் சர்க்கரை அளவு உடனடியாக குறைவதுடன், திடீரென அதிகரிக்கவும் செய்யாதாம். எடையை குறைக்க நினைப்பவர்களும், இந்த கீரையை தாராளமாக பயன்படுத்தலாம்.. காரணம், ஏகப்பட்ட நார்ச்சத்துக்கள் இதில் உள்ளன..

நார்ச்சத்துக்கள்: இந்த நார்ச்சத்துகள் நிறைந்த இலையை உணவில் தவறாமல் சாப்பிட்டு வந்தால், மலச்சிக்கல் தீர்ந்து குடலும் ஆரோக்கியமாக இருக்கும். அனிமியா பிரச்சனை உள்ளவர்கள், இந்த சேப்பங்கிழங்கு இலைகளை அடிக்கடி சமைத்து சாப்பிட வேண்டும். இந்த சேப்பங்கிழங்கு இலைகளை கழுவி சுத்தம் செய்து, தண்ணீரில் போட்டு கொதிக்க வைக்க வேண்டும். பிறகு, அந்த நீரை வடிகட்டிவிட்டு, வேக வைத்த இலைகளை உணவில் சேர்த்து சமைக்கலாம்.

பச்சையாக இலையை உண்ணக்கூடாது.. வடமாநிலங்களிலும், கேரளாவிலும், இந்த இலையை கழுவி சுத்தம் செய்து, தேங்காய்ப்பாலில் வேகவைத்து சூப் போல செய்து சாப்பிடுவார்களாம். பாம்புக்கடி, தேள்கடி போன்ற விஷத்தன்மையை முறிக்கும் தன்மை இந்த இலைக்கு உண்டு.. வைட்டபின் B உள்ளதால் நரம்புத்தளர்ச்சி உள்ளவர்களும் இந்த கிழங்கின் இலையை பயன்படுத்தலாம்

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+