யூரிக் ஆசிட் லெவல் குறைக்கும் திரிபலா சூரணம்.. ஆரோக்கிய கொத்தமல்லி.. சர்னு யூரிக் அமிலம் இறங்கிடும்
சென்னை: உடலில் யூரிக் ஆசிட் அதிகமாக உள்ளதா? இதை குறைக்க உணவு முறைகளில் என்ன வழி இருக்கிறது? கொத்தமல்லி & திரிபலா சூரணத்தின் முக்கியத்துவம் என்ன? இவைகளை எப்படி பயன்படுத்துவது? சுருக்கமாக பார்ப்போம்.
நம்முடைய கல்லீரலில் சுரக்கும் மற்றும் சிறுநீர் வழியாக வெளியேற்றம் செய்யப்படும் யூரிக் அமிலத்தின் அளவானது எப்போதுமே சீரானதாக இருக்க வேண்டும். ஒரு நபருக்கு யூரிக் அமிலம் ஒரு டெசிலிட்டருக்கு 3.5 முதல் 7.2 மில்லிகிராம் என்ற வரம்பில்தான் இருக்க வேண்டும்.

யூரிக் அமிலம்: இந்த அளவிலிருந்து தாண்டினாலோ அல்லது குறைந்தாலோ உடல்நல பாதிப்புகளுக்கு ஆளாகிவிட நேரிடுகிறது. யூரிக் அமிலத்தின் அளவு குறைவானால், மூட்டு வலி, வீக்கம் ஏற்படும். யூரிக் ஆசிட்டின் அளவு அதிகமானால், கீழ்வாத பிரச்சனை, சிறுநீரகத்தில் கல், சிறுநீரக செயலிழப்பு, எலும்புகள் முறிவு போன்றவை ஏற்படலாம்.
அதிக எடை, முதுமை மற்றும் மரபியல் போன்றவையும் யூரிக் பிரச்சனைகளை ஏற்படுத்தும். அதிக, அன்னாசி, அதிக சப்போட்டாப்பழம், அதிக மது, அதிக இனிப்பு, அதிக பதப்படுத்தப்பட்ட உணவு, அதிக ரெடிமேட் உணவு இவையெல்லாம் ப்யூரின் அளவை அதிகரிக்க செய்யும். ஒருவேளை யூரிக் அமிலம் அதிகமாகிவிட்டால், உணவு முறையில் உடனடியாக மாற்றம்கொண்டு வர வேண்டும். வாத, பித்த, கபம் சமநிலையில் வைக்ககூடிய உணவுகளை தேர்ந்தெடுக்க வேண்டும்.
காய்கறிகள்: அதுமட்டுமல்ல, யூரிக் அமில பாதிப்பை பொறுத்தவரை ஆரம்பக்கட்டத்திலேயே குணப்படுத்தலாம். எனினும், ஆரம்பத்திலேயே இதற்கான அறிகுறிகள் வெளியே தெரியவதில்லை. இந்த பாதிப்பு தீவிரம் அடையும்போதுதான், அறிகுறிகளும் தீவிரமாக இருப்பதாக சொல்கிறார்கள். எனவே, சரியான உணவுகளை தேர்ந்தெடுப்பதுதான், இந்த பாதிப்பை தடுக்கக்கூடிய சிறந்த வழி.
ஆரஞ்சு, சாத்துக்குடி, தர்பூசணி, பூசணிக்காய், புடலங்காய், பீர்க்கங்காய், செள செள, வெண்டைக்காய், சுரைக்காய், கறிவேப்பிலை: பாதாம், வால்நட், புதினா, பிரிஞ்சி இலை, கொத்தமல்லி என காய்கறி, பழங்களை அதிகமாக சாப்பிட வேண்டும். வாரம் 2 முறையாவது புதினா, கறிவேப்பிலை, கொத்தமல்லி சட்னி அரைத்து சாப்பிடலாம்.
கொத்தமல்லி: இதில் கொத்தமல்லியை பொறுத்தவரை, யூரிக் ஆசிட் பிரச்சனையை நீக்குவது மட்டுமின்றி, அவைகளை உடலிலிருந்து வெளியேற்றவும் உதவுகிறது. ஆன்டிஆக்ஸிடன்ட்கள், ஆன்டிஇன்ஃபிளமேட்டரி பண்புகள் ஏராளமாக கொத்தமல்லியில் நிரம்பியிருக்கிறது.. அதுமட்டுமல்ல, சிறுநீருடன் யூரிக் ஆசிட்டை வெளியேற்றும் குணம் கொத்தமல்லிக்கு நிறையவே உள்ளது..
எனவே, உடலில் யூரிக் ஆசிட் அதிகம் இருந்தால், கொத்தமல்லி துவையல், கொத்தமல்லி டீ, அல்லது கொத்தமல்லியை வெறுமனே நீரில் ஊறவைத்தும் குடிக்கலாம்.
இதில், திரிபலா சூரணம் மிகவும் முக்கியம் வாய்ந்த மூலிகையாக உள்ளது.. என்பது, கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் ஆகிய மூன்று மூலிகைகளின் கலவையே திரிபலா சூரணம் ஆகும்..
திரிபலா பலன்கள்: பாரம்பரிய ஆயுர்வேத மருத்துவத்தில் முக்கியமானதாக கருதப்படும் இந்த சூரணம், ஆன்டி-ஆக்ஸிடன்ட், ஆன்டிபாக்டீரியல் மற்றும் ஆன்டி இன்ஃபிளமேட்டரி பண்புகளை பெற்றிருக்கிறது.. யூரிக் ஆசிட் அளவை குறைக்க பேருதவி புரிகிறது.. தினமும் காலையில் வெறும் வயிற்றில் ஒரு ஸ்பூன் திரிபலா பொடியை ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான தண்ணீரில் கலந்து சாப்பிடுவதால், யூரிக் அமிலம் கட்டுக்குள் வரும்.












Click it and Unblock the Notifications