"பீடி vs சிகரெட்.." இரண்டில் எது அதிக ஆபத்தானது..மருத்துவர்கள் தரும் விளக்கம்.. அதிர்ச்சி முடிவுகள்!
டெல்லி: பொதுவாக சிகரெட்டை காட்டிலும் பீடிகளில் ஆபத்து குறைவு என்றே பலரும் கருதிய நிலையில், ஆனால் அதற்கு நேர்மாறான ஒரு ஷாக் தகவல் இப்போது புதிய ஆய்வில் தெரிய வந்துள்ளது.
புகைபிடிப்பது ஆபத்தானது என்று நாம் தொடர்ச்சியாக விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். இந்தியா மட்டுமின்றி உலகெங்கும் புகைபிடித்தலுக்கு எதிரான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

இதன் காரணமாகவே ஒவ்வொரு ஆண்டும் புகைப்பிடிப்போர் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது. இது மட்டுமின்றி புகைபிடிப்பது எந்தளவுக்கு ஆபத்தானது என்பது குறித்து ஆய்வுகளும் தொடர்ந்து நடந்து வருகிறது.
அதிக ஆபத்து: ஆனால், இங்கே பொதுவாக ஒரு நம்பிக்கை இருக்கிறது. அதாவது சிகரெட்டை காட்டிலும் பீடிகளில் குறைந்த அளவில் மட்டுமே புகையிலை இருப்பதால் ஒப்பீட்டளவில் பீடி குறைவான ஆபத்தானது என்று அவர்கள் நம்புகிறார்கள். ஆனால், சமீபத்தில் வெளியான ஆய்வு முடிவுகள் அதற்கு நேர்மாறாக இருக்கிறது. அதாவது சிகரெட்டை விடப் பீடிகள் எட்டு மடங்கு அதிக ஆபத்தானதாக இருப்பதாக அதில் கூறப்பட்டுள்ளது.
அதில் பயன்படுத்தப்படும் புகையிலை இலைகள் மற்றும் ஆழமாக அதை உள்ளிழுக்க முடிவதே இதற்குக் காரணமாகும். நோ ஸ்மோக்கிங் டேவை முன்னிட்டு புகைப்பிடித்தலுக்கு எதிராக விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கேஜிஎம்யூ என்ற அமைப்பு பல்வேறு நிகழ்வுகள் நடத்தி வரும் நிலையில், அதில் தான் இந்த ஆய்வு முடிவுகள் வெளியிடப்பட்டன.
பீடிகள்: பொதுவாகப் பீடிகளின் விலை குறைவு என்பதால் குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நபர்கள் பீடியைத் தான் அதிகம் வாங்கி பயன்படுத்துகிறார்கள். டெல்லியில் உள்ள வல்லபாய் படேல் செஸ்ட் இன்ஸ்டிடியூட்டின் முன்னாள் இயக்குநர் பேராசிரியர் ராஜேந்திர பிரசாத் இது குறித்துக் கூறுகையில், "முதலில் ஒன்றைத் தான் தெளிவாகச் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். பீடி, சிகரெட் என இரண்டும் உடலுக்கு அதீத ஆபத்தைத் தரும். எனவே, இரண்டையும் யூஸ் பண்ணாதீங்க.
அதேநேரம் ஒப்பீட்டளவில் சிகரெட்டை விட பீடி தான் அதிக தீங்கு விளைவிக்கிறது. புகையிலையை இலைகள் மூலம் சுற்றியே பீடியை தயாரிப்பார்கள். எனவே, இலைகளைச் சுற்றி வடிவமைக்கப்பட்ட பீடிகள் அதிக புகையை உருவாக்குகிறது. பீடியில் உள்ள இலைகள் அணையாமல் எரிய வேண்டும் என்பதற்காக அதை அவர்கள் ஆழமாக உள்ளிழுப்பார்கள் அது நுரையீரலுக்கு மிகவும் கடுமையான சேதத்தை ஏற்படுத்தும்.
பீடிகளில் சிகரெட்டை விட நான்கு மடங்கு குறைவான புகையிலை இருந்தாலும் அதில் தான் ஆபத்து அதிகம். அதேநேரம் சிகரெட்டில் இருக்கும் அதே அளவுக்குப் புகையிலையைப் பீடியில் பயன்படுத்தினால் அவை எட்டு மடங்கு ஆபத்தானதாக மாறும்" என்று அவர் தெரிவித்தார். மேலும், இந்த மாநாட்டில் புகையிலை ஏற்படுத்தும் பாதிப்புகள் குறித்து மருத்துவர்கள் விளக்கினர்.












Click it and Unblock the Notifications