கோடை காலத்தில் ஆஸ்துமா அதிகரிக்கும்! பாதுகாப்பாக இருக்க என்ன செய்யணும்.. மருத்துவர்கள் விளக்கம்!
டெல்லி: கோடைக் காலத்தில் அதீத வெப்பத்தால் ஆஸ்துமா பாதிப்பு அதிகரிக்கலாம். இந்த நேரத்தில் ஆஸ்துமா நோயாளிகள் என்ன செய்ய வேண்டும் என்பதை மருத்துவர்கள் விளக்கியுள்ளனர்.
உலக ஆஸ்துமா தினம் ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் முதல் செவ்வாய்க்கிழமை கடைப்பிடிக்கப்படுகிறது. ஆஸ்துமா குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தவும், இதன் பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தவும் இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது. அதன்படி இந்த ஆண்டு உலக ஆஸ்துமா தினம் இன்று மே 7 செவ்வாய்க்கிழமை அனுசரிக்கப்படுகிறது.

எச்சரிக்கை: இதற்கிடையே இந்தியாவில் கோடை வெப்பம் அதிகரிக்கும் நிலையில், ஆஸ்துமா உள்ளவர்கள் முன்னெச்சரிக்கை உடன் இருக்குமாறு நுரையீரல் நிபுணர்கள் கேட்டுக்கொள்கிறார்கள். ஒவ்வொரு ஆண்டும், கோடைக்காலத்தில் வெப்ப அலைகளால் ஆஸ்துமா நோயாளிகள் மருத்துவமனையில் சேர்வது 5% அதிகரிப்பதாக மருத்துவர்கள் கூறுகிறார்கள். கடுமையான வெப்பம் என்பது சுவாசக் கோளாறு உள்ளவர்களுக்கு மிகப் பெரிய ஆபத்தை ஏற்படுத்துகிறது.
உலகெங்கும் நடத்தப்பட்ட பல்வேறு ஆய்வுகளில் இதை உறுதி செய்துள்ளனர். எனவே அதீத வெயில் இருக்கும் போது ஆஸ்துமா நோயாளிகள் கவனமுடன் இருக்க வேண்டும்.
இது தொடர்பாக மருத்துவர்கள் கூறுகையில், "ஒவ்வொரு ஆண்டும் கோடைக் காலத்தில் வெப்ப அலை ஏற்படும் மாதங்களில் ஆஸ்துமா நோயாளிகள் மருத்துவமனையில் அனுமதியாவது அதிகரிக்கிறது. இந்தியாவில் சுமார் 3 கோடிக்கும் அதிகமான ஆஸ்துமா நோயாளிகள் உள்ளனர். அவர்களுக்கு வெப்ப அலை சவாலாக மாறுகிறது" என்றார்.
இது தொடர்பாக டாக்டர் பிரிதா ஹஸ்ரா "வெப்பமான கோடை மாதங்களில் காற்றில் இருக்கும் ஈரப்பதம் தான் ஆஸ்துமா நோயாளிகளுக்கு முக்கியமான பிரச்சினையாக மாறுகிறது. வெப்பமான கோடை மாதங்களில், ஈரப்பதம் அதிகரிப்பது ஆஸ்துமா போன்ற சுவாசக் கோளாறுகள் உள்ளவர்களுக்குச் சவாலாக உள்ளது. வறண்ட காற்று, காற்றில் இருக்கும் மகரந்தம், தூசி, பூஞ்சை ஆகியவற்றின் கலவை நிலைமையை மோசமாக்குகிறது. இவை ஆஸ்துமாவை மேலும் மோசமாக்கும். கோடை காலத்தில் காற்றின் மூலம் சுவாச வைரஸ்கள் பரவவும் வாய்ப்புகள் அதிகம்" என்றார்.
வெப்பத்திற்கும் ஆஸ்துமாவிற்கும் உள்ள தொடர்பை டாக்டர் அருணேஷ் விளக்குகையில், "அதிக வெப்பம சுவாசப்பாதைகளை எரிச்சலூட்டும். மேலும் வீக்கத்தை ஏற்படுத்தும். எனவே, வெப்பம் அதிகமாக இருக்கும் போது ஆஸ்துமா நோயாளிகள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்" என்றார். கோடைக் காலத்தில் ஆஸ்துமா நோயாளிகள் பாதுகாப்பாக இருக்க என்ன செய்ய வேண்டும் என்பதையும் அவர் விளக்குகிறார்.
என்ன செய்யணும்: மருத்துவர்கள் அளித்த மருந்துகளை முறையாகவும் தவறாமலும் எடுத்துக் கொள்ளுங்கள். நீரிழப்பைத் தடுக்க நாள் முழுவதும் தொடர்ந்து தண்ணீர் குடியுங்கள்.. நீரிழப்பு ஏற்பட்டால் ஆஸ்துமா மோசமாகும். பகல் நேரத்தில் வெளியே செல்ல வேண்டாம். காலை அல்லது மாலை நேரங்களில் மட்டுமே வெளியே வந்த கடினமான வேலைகளைச் செய்யுங்கள்.
திடீரென ஆஸ்துமா அதிகரித்தால் நிலைமையைச் சமாளிக்க எப்போதும் கையில் இன்ஹேலரை எடுத்துச் செல்லுங்கள். மேலும், ஆஸ்துமா அதிகரித்தால் வெயிலில் இருந்து விலகி உடனே குளிர்ச்சியான இடங்களுக்குச் செல்லுங்கள். இருமல், மூச்சுத்திணறல் அல்லது மார்பு வலி அதிகரித்தால் உடனடியாக மருத்துவமனைக்குச் செல்லுங்கள். வெப்ப அலை குறித்த அறிவிப்புகளைக் கவனமாகக் கேட்டு அதற்கேற்ப உங்கள் பிளான்களை அமைத்துக்கொள்ளுங்கள்.
தவிர்க்க வேண்டியவை: குளோரின் நீரில் நீந்துவதைத் தவிர்க்கவும்.. அதேபோல புகைபிடிக்கும் பகுதிகளிலிருந்து விலகி இருக்கவும்.. வீடுகளைத் தூய்மையாக வைத்து இருங்கள்.. ஸ்டாராங்கான பெர்பியூம்களை தவிர்க்கவும்.. வீடுகளில் Humidifiers மற்றும் Air Purifiersகளை பயன்படுத்தலாம். ஆஸ்துமா பாதிப்பு தீவிரமாக இருந்தால் N95 அல்லது KN95 மாஸ்க்குகளை கூட பயன்படுத்துங்கள்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications