இட்லி மாவு சீக்கிரமா புளிச்சு போகுதா? "இந்த" ஒரு பொருளை சேர்த்து பாருங்க.. தோசை மாவு கெடவே கெடாது
சென்னை: இட்லி, தோசை மாவு புளித்துவிடுகிறதா? அப்படியானால் இந்த குட்டி டிப்ஸை பயன்படுத்தி பாருங்கள்.
1 இட்லியில் 65 கலோரிகள், 2 கிராம் புரோட்டீன், 2 கிராம் நார்ச்சத்து, 8 கிராம் கார்போஹைட்ரேட் உள்ளதாலும், கொழுப்புச்சத்து இல்லாமல் உள்ளதாலும், இட்லி மிகச்சிறந்த உணவாக கருதப்படுகிறது.

தசைகள்: எளிதில் ஜீரணமாகக்கூடிய உணவு என்பதுடன், தசைகளை வலிமையடைய செய்கின்றன இட்லி.. ரத்தத்தை உற்பத்தி செய்வதில் இட்லிக்கு பெரும் பங்கு உள்ளது.. மூளையில் உள்ள செல்களுக்கு சுறுசுறுப்பை தருவதால், தினமும் இட்லி சாப்பிடுவது நல்லது.. இதனால், வயிற்றிலுள்ள புண்களும் ஆறிவிடும்.
ஆனால், அரிசியுடன் சத்து நிறைந்த தானியங்களை பயன்படுத்தியும் மாவு அரைக்கலாம்.. அல்லது அரிசிக்கு பதிலாக கேழ்வரகு, ஓட்ஸ், கொள்ளு போன்றவற்றை பயன்படுத்தியும் மாவு அரைத்து இட்லி, தோசை சுடலாம். குறிப்பாக, பாசிப்பருப்பு அல்லது கருப்பு உளுந்து இதில் ஏதாவது ஒன்றை சேர்த்து அரைக்கும்போது, நோய் எதிர்ப்பு சக்தி உடலில் அதிகமாகும். பயன்படுத்தினால் அதிக நன்மை கிடைக்கும்.
புளிப்பு மாவு: மாவு புளிக்கும்போது, புரோ பயாடிக்குகளை உருவாக்குகிறது.. செரிமானம் மேம்படவும், நுண்ணூட்டச்சத்துக்களை பலப்படுத்தவும் இந்த புளிப்பு மாவு தேவையானதாக உள்ளது. அதற்காக நாள்கணக்கில் உள்ள இட்லி மாவினை பயன்படுத்த கூடாது.
ஃபிரிட்ஜில் நீங்கள் இட்லி மாவு வைத்தாலும், அதன் தன்மை மாறிவிடும்.. விரைவில் மாவு கெட்டுப்போய்விடும்... மாவில் எப்போதுமே பாக்டீரியாக்களின் உற்பத்தி அதிகரிக்கும்போது, மாவு கெட்டுப்போக ஆரம்பித்துவிடும்.
தோசை மாவு: எனவே, தோசை மாவு கெடாமல் இருக்கவேண்டுமானால், 100 கிராம் அளவு இட்லி மாவுக்கு 1 மில்லி என்கிற விகிதத்தில் கடுகு எண்ணெய்யை கலந்து வைத்தால் போதும்.. ஃபிரட்ஜில் 20 நாள் வைத்தாலும் கெடாமல் இருக்குமாம்.. காரணம், இந்த கடுகு எண்ணெய்யானது, இட்லி மாவில் உற்பத்தியாகும் கெட்ட பாக்டீரியாக்களை குறைக்கிறதாம்.
அதேபோல, புளித்த மாவில் சிறிது அரிசி மாவு அல்லது பால் சேர்த்து தோசை வார்த்தால் புளிப்பு அவ்வளவாக தெரியாது... அல்லது ஒரு வாணலில் எண்ணெய், கடுகு, உ.பருப்பு, கடலை பருப்பு, கொத்தமல்லி, கறிவேப்பிலை, நறுக்கிய சின்ன வெங்காயம், நறுக்கிய பச்சைமிளகாய், தாளித்து கொட்டி, அரை மணி நேரம் கழித்து தோசை வார்த்தாலும் தோசையில புளிப்பு தெரியாது.
வெற்றிலை: அதேபோல, மாவு அரைத்து ஃப்ரிட்ஜில் வைக்கும்போது, வெற்றிலையை காம்பு நீக்காமல் போட்டு வைக்கலாம்.. அதாவது வெற்றிலையின் காம்பு, மாவிற்குள் அழுத்தி இருக்க வேண்டும். இதனால், மாவு புளிக்காமல் இருக்கும்.. வெற்றிலைக்கு பதிலாக, கற்பூரவல்லி என்ற ஓமவல்லி இலைகளை நான்கைந்து பறித்து மாவில் போட்டு வைக்கலாம்.. உடம்புக்கும் நல்லது.
அவல்: அதேபோல உளுந்தம்பருப்புடன் 100 கிராம் அவல், வெந்தயம் இரண்டையும் சேர்த்து அரைத்தாலும் இட்லி மிருதுவாக இருக்கும்... எப்போதுமே அரிசியை அரைத்து முடித்ததும் தேவைக்கேற்ப உள்ள மாவை மட்டுமே எடுத்து, உப்பு போட வேண்டுமே தவிர, மொத்த மாவிலும் முன்கூட்டியே உப்பு கலந்துவிடக்கூடாது.. அரிசியை முக்கால் பதத்தில் அரைத்து வைத்து உப்பு சேர்த்து கலக்காமல் வைத்திருந்தால் மாவு புளிக்காமல் இருக்கும்.. இதனால், 2 நாளுக்கு கூடுதலாகவும் பயன்படுத்தலாம்.












Click it and Unblock the Notifications