விரால் மீனின் ஸ்பெஷாலிட்டியே இதுதான்.. எந்தெந்த உறுப்புகளுக்கு விரால் மீன்கள் நல்லது தெரியுமா? வாவ்
சென்னை: ஒமேகா 3 கொழுப்பு சத்துக்கள் அதிகம் நிறைந்த மீன்களில் ஒன்றுதான் விரால் மீன்கள்.. சுவை + சத்துக்கள் இரண்டுமே இந்த மீனில் அதிகம்..!!
மற்ற மீன்களை போல இல்லாமல், இந்த விரால் மீன் வித்தியாசமான வடிவம் கொண்டது.. உருண்டையாகவும், நீளமாகவும் இந்த விரால் மீனின் உடம்பு இருக்கும்.. இதன் தலையோ, பாம்பின் தலையை போலவே இருக்கும்.

ஊட்டச்சத்து குறைபாட்டினை நீக்கக்கூடிய இந்த விராலை, குழம்பு வைத்தாலும் ருசியாக இருக்கும்.. வறுத்தாலும் ருசியாக இருக்கும்.. எனவே, தமிழக மக்கள் அதிகமாக பயன்படுத்தும் மீன்களில் இந்த விராலும் ஒன்று. அதனால்தான் விரால் மீனுக்கு எப்போதுமே டிமாண்டு அதிகமாக இருக்கும்.
நன்னீர் மீன்கள்: அதுமட்டுமல்ல, பொதுமக்களிடம் இந்த மீனுக்கு தனிமவுசு ஏற்பட காரணம், நன்னீர் மீன்களிலேயே சுவையான மீன்கள் இதுவாகும்.. மிகவும் மென்மையானவையும் கூட.
வட்ட வட்டத் துண்டுகளாக வெட்டினால் சீராக சமைக்க எளிதாக இருக்கும்.. இந்த மீனில் முட்கள் அவ்வளவாக இருக்காது.. இந்த விரால் மீன்களுக்கு உள்ள ஸ்பெஷாலிட்டி என்ன தெரியுமா? இந்த மீன்கள் வெளிக்காற்றையும் சுவாசிக்கக்கூடியவை என்பதால், மீன் சந்தைகளுக்கு வந்தபிறகும்கூட, இந்த மீன்கள் உயிருடனேயே காணப்படும்.
சர்க்கரை நோயாளிகள்: சர்க்கரை நோயாளிகளுக்கு மத்தி மீன் எந்த அளவுக்கு நன்மை தருகிறதோ அதுபோலவே, இந்த விரால் மீன்களும் சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைக்கக்கூடியது.. ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவையும் வெகுவாக குறைப்பதாக சொல்கிறார்கள்..
வழக்கமாக, பாலூட்டும் பெண்களுக்கு, தாய்ப்பால் சுரப்பதற்காக சுறா மீனில் புட்டு செய்து தருவார்கள்.. அதுபோலவே, தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள், கர்ப்பிணி பெண்கள் இந்த விரால் மீனை சாப்பிட்டு வரும்போது, தாய்ப்பால் மூலம் குழந்தைக்கு ஒமேகா 3 ஊட்டச்சத்து கிடைக்குமாம்..
கண்பார்வை திறன்: கர்ப்பத்திலுள்ள குழந்தைகளின் கண்பார்வை திறன் அதிகரித்து, மூளை வளர்ச்சியை அதிகரிக்க செய்யும் திறன் இந்த விரால் மீன்களுக்கு இருக்கிறதாம். மேலும், கர்ப்பத்திலுள்ள குழந்தைகளின் எலும்புகளின் வளர்ச்சியும் சீராக இருக்கும் என்கிறார்கள்.
மற்ற மீன்களுக்கு இல்லாத இன்னொரு சிறப்பும் இந்த விரால் மீன்களுக்கு இருக்கிறது.. அதாவது காது கேளாமை அபாயத்தை இந்த விரால் மீன்கள் குறைக்கிறதாம். விரால் மீனை அடிக்கடி சாப்பிட்டு வருபவர்களுக்கு சரும தொந்தரவுகளும், கண் பார்வை கோளாறுகளும் வருவதில்லை..
துர்நாற்றம்: ஆனால், இந்த மீனை நன்றாக சுத்தம் செய்து, நான்கைந்து முறை கழுவியபிறகே சமையலுக்கு பயன்படுத்த வேண்டும்.. காரணம், இதன் மேற்பகுதியில் உள்ள வழவழப்புத்தன்மையை முழுமையாக நீக்க வேண்மும். இந்த வழுவழுப்புடனேயே சமைக்கும்போது, குழம்பிலும் துர்நாற்றம் இருக்கும்..
எனவே, மீனை வாங்கியதுமே அதன் மேற்புறத்தை கத்தியால் தேய்க்காமல், சிமெண்ட் தரையில் தேய்த்து கழுவ வேண்டுமாம். கழுவுவார்கள்.. அப்போதுதான், அந்த வழுவழுப்பு முழுமையாக நீங்கும்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்' -
நாங்க தோத்துட்டோம்.. ஆனா சாகலை! விஜய்க்கு ஏதாவது ஆச்சுனா கம்பெனி பொறுப்பில்லை! மாஜி கொடுத்த வார்னிங் -
ஒரு மேயர் பதவியையாவது ஜெயிச்சு பாருங்க..நான் என் ஒரு பக்க மீசையை எடுத்துக்குறேன்! ஆர்எஸ் பாரதி சவால்












Click it and Unblock the Notifications