பாதத்தில் எரிச்சல்.. இந்த அறிகுறிகள் இருக்கா? பாத எரிச்சலுக்கு எளிய தீர்வுகள்.. மீன் எண்ணெய் போதுமே

Subscribe to Oneindia Tamil
சென்னை: நம்முடைய உடலில் உள்ளுறுப்புகள் ஏதாவது பாதிப்புகளை கொண்டிருந்தால், இது பல்வேறு வழிகளில் அறிகுறிகளை நமக்கு வெளிப்படுத்தும். அந்தவகையில், பாதத்தில் எரிச்சல் ஏற்படுவதுகூட, சில முக்கிய அறிகுறியை உணர்த்துவதாகும்.. அந்தவகையில் பாதம் எரிச்சல் எப்போது ஏற்பட்டாலும், அதனை அலட்சியப்படுத்தக்கூடாது. பாதம் எரிச்சலுக்கு என்ன காரணம்? பாதம் எரிச்சலுக்கு ஏதாவது வீட்டு மருத்துவம் உதவுமா?

பாதங்களில் எரிச்சல், அல்லது காலில் ஆணி குத்துவது போல இருப்பது பெரும் அவதியை தந்துவிடும். இதனால், இரவில் நிம்மதியாக தூங்கவும் முடியாது.. இதற்கு காரணம், காலிலுள்ள நரம்புகள் பாதிக்கப்படுவதும், காலிலுள்ள செல்களுக்கு போதுமான சத்துக்கள் கிடைக்காததும், கால் நரம்புகளுக்கு போதுமான அளவு ரத்த ஓட்டம் இல்லாததும்தான்.

Foot Irritation Burning Feet Fish Oil Capsule

பாதம் எரிச்சலுக்கு காரணங்கள்

ரத்தஅழுத்தம் காரணமாக கிட்னி பாதிப்பு இருந்தாலும், கிட்னி செயலிழந்தாலும், ஆர்த்ரைட்டிஸ், தொற்றுநோய், கீமோதெரபி மேற்கொண்டவரகள், அதிகமாக மதுபோதையை சாப்பிடுபவர்களுக்கும் பாதிப்பு வரும். நீண்ட காலமாக மது குடிப்பவர்களுக்கு, அதிக பாதிப்பு நரம்புகளில்தான் ஏற்படுமாம்.

அதேபோல, தைராய்டு ஹார்மோனின் சுரப்பு அதிகமாக உள்ளவர்களுக்கு பாத எரிச்சல் வரும். அதாவது Hypothyroid இருப்பவர்களுக்கு உடல் எடை அதிகமாக இருக்கும் காரணத்தால், பாத எரிச்சலும் அதிகமாக இருக்கும்.

அதேபோல, B 12, ஃபோலேட் (folate) வைட்டமின் குறைபாடு உள்ளவர்களுக்கும் பாத எரிச்சல் பாதிப்பு வரும். அதேபோல, எடையை குறைக்க அறுவை சிகிச்சை மேற்கொண்டவர்கள், அல்சர் பாதிப்பு உள்ளவர்கள், பைபாஸ் சர்ஜரி செய்தவர்கள், வயிறு சம்பந்தமான அறுவை சிகிச்சை செய்தவர்களுக்கு, இதுபோன்ற பாத எரிச்சல் வரும்.

பாதம் எரிச்சலுக்கு முக்கிய அறிகுறிகள் என்னென்ன?

முதலில் கூச்ச உணர்வு ஏற்படும். பிறகு உணர்ச்சிகள் குறைய தொடங்கும். பிறகு தாங்க முடியாத எரிச்சல் உண்டாகும். பெரும்பாலும் சர்க்கரை நோயாளிகளுக்கு இந்த பாத எரிச்சல் வரும். காரணம், ஏனென்றால், ரத்த சர்க்கரையின் அளவு அதிகமாகும்போது, அது நரம்புகளை பாதித்து, எரிச்சலாக வெளிப்படும். இதற்கு முதல் வேளையாக, நீரிழிவு நோயை கட்டுக்குள் கொண்டு வர வேண்டும்.. உணவு முறையை மாற்ற வேண்டும். நரம்பை வலுப்படுத்த வைட்டமின் B12 உதவுகிறது. இந்த சத்துக்கள் அசைவ உணவில் நிறைய உள்ளது..

எளிய வைத்தியம்

ஈரமான செருப்பு, சாக்ஸ்களை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். தைராய்டு, ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்க வேண்டும். கால் எரிச்சலை போக்குவதற்கு, ஐஸ் வாட்டரில் பாதத்தை 15 நிமிடங்கள் வைத்து எடுக்கலாம். இரவு நேரம் தூங்குவதற்கு முன்பு கால்களை நன்றாகக் கழுவிவிட்டு கால்களுக்கு எண்ணெய் போட்டு மென்மையாக மசாஜ் செய்யலாம். அதேபோல, இரவு தூங்கும்போது தலையணையில் கால்களை வைத்து சற்று உயர்த்தி தூங்க வேண்டும்.
மருதாணி இலையை அரைத்து, அந்த விழுதில் சிறிது எலுமிச்சம் பழச்சாறு கலந்து பாதத்தில் பூசிவரலாம். குர்குமின் என்ற முக்கிய பொருள் மஞ்சளில் உள்ளதால், நாள்பட்ட நரம்பியல் நோயின் வளர்ச்சியை தடுக்க மஞ்சளும் உதவுகிறது. எப்சம் உப்பினை நீரில் கலந்து பாதத்தை ஊறவைத்து கழுவிவிடலாம்.

மீன் எண்ணெய் - தீர்வுகள்

மீன் எண்ணெயை வைத்து பாத எரிச்சலை குறைக்கலாம். 2400 முதல் 5400 மி.கி வரை மீன் எண்ணெய்யை தினமும் இதற்காக பயன்படுத்தலாம். அதேபோல, பாக்டீரியா , பூஞ்சை போன்ற நுண்ணுயிரிகளை எதிர்த்து போராடக்கூடிய ஆப்பிள் சிடர் வினிகரை வைத்தும் பாத எரிச்சலை கட்டுப்படுத்தலாம். வெதுவெதுப்பான தண்ணீரில் ஆப்பிள் சிடர் வினிகர் லேசாக கலந்து, அதில் பாதம் ஊறவைக்கலாம். எனினும், இவையெல்லாம் ஆரம்பக்கட்ட பாத எரிச்சலை குறைக்க உதவும் தற்காலிக டிப்ஸ் மட்டுமே.. பாத எரிச்சல் என்றதுமே டாக்டர்களை சந்தித்து மருத்துவ சிகிச்சை மேற்கொள்வது சிறந்தது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+