இட்லிக்கு மாவு வீட்டில் அரைக்கணுமா? இரவில் கர்ப்பிணி இட்லி சாப்பிடலாமா? இட்லி ரவையின் சத்துக்கள்
சென்னை: இட்லி தோசைகளை இரவில் கர்ப்பிணிகள் சாப்பிடலாமா? பாக்கெட் மாவை தவிர்க்க சொல்ல என்ன காரணம்? இட்லி ரவையில் உள்ள சத்துக்கள் என்ன தெரியுமா? இதுகுறித்து வெங்கடேஷ் பட் வெளியிட்டிருக்கும் வீடியோ, பலருக்கும் உபயோகமாக இருக்கும் என்று நம்பப்படுகிறது.
இட்லி, தோசை உள்ளிட்ட நொதிக்க வைக்கப்பட்ட உணவுகளிலும் கவனமாக இருக்க வேண்டும் என்கிறார்கள்.. அந்தவகையில், இட்லி, தோசை, ஆப்பம், தயிர் போன்றவை நொதிக்கும் உணவுகள் ஆகும்.. புளித்து வைக்கப்பட்டு, அதன்பிறகே இவைகள் சமைக்கப்படுகின்றன.

பொதுவாக, நொதித்த உணவுகள், நம் உடலுக்கு நன்மையை தரக்கூடியவைதான்.. நொதித்த உணவை சாப்பிடும்போது, ஜீரண சக்தி பெருகுகிறது.. நல்ல பாக்டீரியாக்களின் உற்பத்தியையும் அதிகரிக்க செய்கிறது.. உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை மேலும் அதிகரிக்க செய்கிறது. அதனால்தான், இட்லி, தோசைகள் ஆரோக்கியமான உணவு பட்டியலில் இடம்பெற்றுள்ளன.
அஜீரணம்: அதேசமயம், நொதித்த உணவுகளை இரவு நேரத்தில் மட்டும் தவிர்த்தால் நல்லது என்கிறார்கள். குறிப்பாக, அஜீரண கோளாறுகள், வாயு, உப்பசம் கோளாறு உள்ளவர்கள், அசிடிட்டி தொல்லை உள்ளவர்கள், இரவு நேரங்களில் நொதிக்க வைக்கப்பட்ட உணவுகளை தவிர்க்க வேண்டுமாம். அதேபோல, கர்ப்பிணி பெண்களும், பாலூட்டும் பெண்களும் இரவு நேரங்களில் நொதித்த உணவுகளை தவிர்ப்பதுடன், தயிர், பன்னீர் போன்றவற்றையும் இரவு நேரங்களில் தவிர்க்க சொல்கிறார்கள்.
காரணம், தாய்க்கு வயிறு உபாதை என்றால், தாய்ப்பால் குடிக்கும் குழந்தைக்கும் வயிறு பாதிப்பு ஏற்பட்டுவிடும். அதனால், கர்ப்பிணிகளும், பாலூட்டும் தாய்மார்களும் மருத்துவர்களின் ஆலோசனையை பெற்றே இரவில் இட்லி, தோசை உள்ளிட்டவைகளை எடுத்து கொள்ள வேண்டும்.
பாக்கெட் மாவு: அதேபோல பாக்கெட் மாவை தவிர்த்துவிடலாம்.. காரணம், பாக்கெட் மாவில் புளிப்பு வாசனை வராமல் இருக்க, புண்ணுக்கு தடவப்படும் போரிக் ஆசிட் தடவப்படுவதாக சொல்கிறார்கள். இதனை உட்கொள்ளும்போதும் குடல் ஆரோக்கியம் பாதித்து, வயிற்று வலி, வயிற்று உபாதைகள், அஜீரணம் ஏற்பட்டுவிடும். மாவு அரைக்கும்போது பயன்படுத்தப்படும் தண்ணீரும் சுத்தமானதா என்று தெரியாது. அசுத்த நீராக இருந்தால் இரைப்பை நோய் வரை தாக்கிவிடும்.
எனவே வீட்டிலேயே சுகாதாரமான முறையில் மாவு அரைக்கலாம்.. இதுகுறித்து வீடியோ ஒன்றில் பிரபல சமையல் கலை நிபுணர் வெங்கடேஷ் பட் விரிவாகவும், எளிதாகவும சொல்லி உள்ளார்.
இதற்கு உளுந்தை சுத்தமாக கழுவி 2 மணி நேரம் ஊறவைத்து, தண்ணீர் இல்லாமல் கிரைண்டரில் அரைத்து கொள்ள வேண்டும்.. அவ்வப்போது லேசாக தண்ணீர் தெளித்து அரைக்கலாம்.
இப்படி அரைக்கணும்: ஒரு கப் உளுந்து என்றால், 2 கப் இட்லி ரவையை எடுத்து கொள்ள வேண்டும். உளுந்து அரையும்போது ரவையையும் நன்றாக கழுவி கொள்ள வேண்டும். ரவையை தனியாக ஊற வைக்க தேவையில்லை.. இப்படி கழுவும்போதே அது ஊறிவிடும். பிறகு உளுந்து நன்றாக அரைந்ததும், அதை ஒரு பாத்திரத்தில் மாற்றி வைத்துவிட்டு, கிரைண்டரில் ரவையை சேர்த்து மைய அரைத்து எடுக்க வேண்டும்.
உளுந்துவை போலவே, இதற்கும் அவ்வப்போது தண்ணீர் தெளித்து அரைக்கலாம். பிறகு உளுந்து, இட்லி ரவை இரண்டையும் ஒன்றாக சேர்த்து கலக்கி, சிறிது உப்பு போட்டு கைகளால் கலந்து விட வேண்டும்.. இது அப்படியே ஒரு இரவு முழுவதும் வைத்துவிட்டால், நன்றாக புளித்து வரும். இதில் இட்லி அவிக்கும்போது, ருசியாகவும், மென்மையாகவும் வரும்.
சத்துக்கள்: இட்லி ரவை மிகவும் சத்தானது.. கார்போஹைட்ரேட், புரதம், நார்ச்சத்து, கால்சியம் போன்ற சத்துக்கள் உள்ளன. மேலும், மெக்னீசியம், ஜிங்க், பாஸ்பரஸ், கால்சியம் போன்ற சத்துக்களும் நிரம்பியிருக்கின்றன. இதனால், நரம்பு மண்டலத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க இட்லி ரவை உதவுகிறது. இது ஜீரணமாக சற்று நேரமாகும் என்பதால், வயிறு நிரம்பிய உணர்வை ஏற்படுத்துகிறது.
எனவே நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்றது. நார்ச்சத்து அதிகம் உள்ளதால், இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.. இட்லி ரவையில், இட்லி மட்டுமல்லாமல், உப்புமா,ஊத்தப்பம் போன்ற உணவுகளையும் தயார் செய்யலாம்.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications