Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பீரியட்ஸ் நாட்களில்.. இந்த "பொருட்களை" தொடவே தொடாதீங்க..இந்த "2 பொருளை" கட்டாயம் சாப்பிடுங்க பெண்களே

Subscribe to Oneindia Tamil

சென்னை: மாதவிடாய் காலத்தில் சில உணவுப்பொருட்களை கட்டாயம் தவிர்க்க வேண்டும் என்று அறிவுறுத்துகிறார்கள் நிபுணர்கள்.. அதேசமயம், 2 வகையான பொருட்களை உணவில் அவசியம் சேர்த்து கொள்ள வேண்டும் என்கிறார்கள்.

ஒவ்வொரு பெண்ணின் வாழ்க்கையிலும் மாதவிடாய் மிக முக்கியமான பகுதியாகும்.. ஒரு பெண் பொதுவாக மாதவிடாய் காலத்தில் வலி, சோர்வுகளை அனுபவிக்க நேர்கிறது.. அத்துடன் ஒருவித இறுக்கத்திலும், மன அழுத்தத்தையும் அதுபோன்ற நேரங்களில் எதிர்கொள்ள நேரிடுகிறது.

health: 2 important thing we should take and What are the foods that women can eat during menstruation

வயிற்று வலி, தூக்கமின்மை, மோசமான மனநிலை போன்றவை பலருக்கும் ஏற்படும்.. யாரை பார்த்தாலும் எரிந்து விழுவது, காரணமில்லாமல் அழுகை, யாரிடமும் தேவையில்லாத வாக்குவாதம், தனிமையாக உணர்வது, பதற்றம், மன அழுத்தம் இப்படி பல தொந்தரவுகள் ஏற்பட்டு, இறுதியில், பிஎம்எஸ் ('PMS') பிரச்சனையில் கொண்டுவந்து விடுகின்றன..

ஆரோக்கியம்: இதுபோன்ற நேரங்களில், வலியை குறைக்கவும், ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பின்பற்றவும், சீரான உணவு மிகவும் முக்கியம் என்பதை உணர வேண்டி உள்ளது. ஆனால், மாதவிடாய் காலம் என்றாலே, பெண்கள் சரியாக சாப்பிடுவதில்லை.. அல்லது வழக்கத்துக்கு அதிகமாக சாப்பிடுகிறார்கள் அல்லது பிடிக்காத உணவையும், அதிகமாக சாப்பிடுகிறார்கள்.. இதனால், மாதவிடாய் காலத்தில் ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட முடியாமலேயே போய்விடுகிறது.

மாதவிடாய் காலங்களில் என்னென்ன உணவுகளை எடுக்க வேண்டும்? என்னென்ன உணவுகளை தவிர்க்க வேண்டும் என்று நிபுணர்கள் வலியுறுத்துகிறார்கள்..

health: 2 important thing we should take and What are the foods that women can eat during menstruation

புத்துணர்ச்சி: மாதவிடாய் காலத்தில் அந்தந்த பருவ காலங்களில் கிடைக்கும் 2 அல்லது 3 பழங்களை கட்டாயம் சாப்பிட வேண்டும்.. இதனால், புத்துணர்ச்சி கிடைப்பதுடன், உங்களை நீரேற்றமாக வைத்திருக்கவும் உதவும்.. குறிப்பாக மாதவிடாய் காலத்தில் ஏற்படும் மனநிலை மாற்றத்தை சீர்படுத்த இந்த பழங்கள் பெரிதும் உதவியாய் திகழ்கின்றன..

பச்சை காய்கறிகள் மற்றும் கீரைகளில் அதிக அளவில் மெக்னீசியம் மற்றும் வைட்டமின் K போன்ற ஊட்டச்சத்துக்கள் அடங்கியுள்ளன.. இவைகளை சாப்பிடுவதால், மாதவிடாய் காரணமாக ஏற்படும் வலிகள் குறைகின்றன.. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வண்ண காய்கறிகள் சிறந்ததாகும்..

புரோட்டீன், இரும்புச்சத்து நிறைந்த பருப்புகள் வகைகளை மாதவிடாய் சமயத்தில் அதிகமாக சாப்பிட வேண்டும்.. அந்த நேரத்தில் ஏற்படும் அதிகமான ரத்தப்போக்கை கட்டுப்படுத்தி, அதை ஈடு செய்ய உதவும்..

யோகர்ட்: மாதவிடாய் சமயத்தில் ஈஸ்ட் தொற்று ஏற்படுவது இயல்பானது என்றாலும், யோகர்ட், தயிர் சாப்பிடுவதால், இந்த பிரச்சனை எளிதாக நீங்கும்.. யோகர்ட்டை உணவில் சேர்ப்பதால், தொற்றுநோய் எதிர்த்து போராடி, நல்ல பாக்டீரியாக்களின் வளர்ச்சியை அதிகரிக்க செய்யும்.. மாதவிடாய் காலத்தில், வழக்கத்தை விடவும் உடல் உஷ்ணமாக இருக்கும் என்பதால், தயிர், மோர் போன்ற உணவுகளை அதிகமாக எடுத்துக்கொள்வது உடலில் சூட்டை குறைத்து, குளிர்ச்சியை அதிகப்படுத்தும்.

அத்துடன், , நட்ஸ், , டார்க் சாக்லேட், வாழைப்பழம், சோம்பு, ஆரஞ்சு, தர்பூசணி போன்ற நீர் நிறைந்த உணவுகளை, மாதவிடாயின் ஐந்து அல்லது மூன்று நாட்களுக்கும் எடுத்துக்கொள்வது உடலுக்கும் நல்லது. இதில் 2 விதமான உணவுப்பொருட்களை தவிர்க்கவே கூடாது என்று அறிவுறுத்துகிறார்கள் நிபுணர்கள்.. ஒன்று இஞ்சி, மற்றொன்று மஞ்சள் ஆகும்..

இஞ்சி + மஞ்சள்: மாதவிடாய் அதிகமாக இருந்தால், காலையும், மாலையும், சூடான இஞ்சி டீயை குடிக்கலாம்.. இது வலியை உண்டாக்கும், வயிற்று தசைப்பிடிப்புகளை குறைக்க உதவும். மாதவிடாய் சமயத்தில் ஏற்படும் குமட்டல் மற்றும் நெஞ்செரிச்சல் இருந்தாலும், இந்த இஞ்சி டீயை குடித்தால் நிவாரணம் கிடைக்கும்..

health: 2 important thing we should take and What are the foods that women can eat during menstruation

இஞ்சியை மாதவிடாய் சமயத்தில் அதிகமாக உணவிலும் சேர்த்து கொள்வது கூடுதல் பலனை தரும். இதில் கிருமி நாசினியாக விளங்கும் மஞ்சளில் அதிக அளவில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன. அவை, மாதவிடாய் சமயங்களில் உண்டாகும் வயிற்று வலி மற்றும் மாதவிடாய் அறிகுறிகளைக் குறைக்க உதவும்.

மஞ்சளில் கெட்ட பாக்டீரியாக்களை அழிக்கும் பண்புகள் கொண்டது. அதனால் தான் நம்முடைய முன்னோர்கள் மாதவிடாய் காலங்களில் மஞ்சள் தேய்த்து குளித்து வந்தார்கள். அது மாதவிடாய் சமயத்தில் ஏற்படும் துர்நாற்றத்தை போக்குகிறது.

பயறு வகைகள்: ஆக, நல்ல கார்போஹைட்ரேட் உணவுகளை சாப்பிடுவது செரோடொனின் என்ற மகிழ்ச்சிக்கான ஹார்மோன் அளவை அதிகரித்து, மன நல மாற்றங்களை சரிசெய்யும்.. தானியங்களால் செய்யப்பட்ட உணவு, மக்கா சோளம், பயறு வகைகள் போன்றவற்றையும் பெண்கள் மிஸ் செய்யக்கூடாது என்கிறார்கள்..

அதேசமயம், சில உணவுகளை மாதவிடாய் காலத்தில் தவிர்க்க வேண்டும் என்கிறார்கள்.. அதிக உப்பு உள்ள பொருட்கள், ரசாயனம் அல்லது சுவையூட்டி சேர்க்கப்பட்ட பாக்கெட் உணவுகள், அதிக கார்போஹைட்ரேட் கொண்ட உணவுகள், அதிக சர்க்கரை சேர்க்கப்பட்ட உணவுகள், பானங்கள், இனிப்புகள், சிவப்பு இறைச்சி போன்றவற்றை தவிர்ப்பது நல்லது. ஒருவேளை முழுவதுமாக தவிர்க்க முடியவில்லை என்றாலும், குறைவான அளவில் இவைகளை உண்ண வேண்டும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+