பாகு+அல்+காய் = பாகற்காய்.. நீரிழிவு நோயாளிகள் பாகற்காய் சாப்பிட்டால் சர்க்கரை குறையுமா.. ரொம்ப கவனம்
சென்னை: பாகற்காயில் அபரிமிதமான சத்துக்கள் இருந்தாலும், சர்க்கரை நோயாளிகள், கர்ப்பிணி பெண்கள் சாப்பிடலாமா? அதனால் ஏற்படக்கூடிய விளைவுகள் என்னவாக இருக்கும்?
இனிப்பு அல்லாத காய் இந்த பாகற்காய்... அதாவது, பாகு+அல்+காய் என்று பெயர்.. பாகற்காயில், பசலைக்கீரையில் இருப்பதைவிட 2 மடங்கு கால்சியம் உள்ளது. வாழைப்பழத்தில் உள்ளதைவிட 2 மடங்கு பொட்டாசியம் உள்ளது. பாகற்காய் சாப்பிடுவதால், வயிற்று பிரச்சனைகள் தீரும்.. இரைப்பை பிரச்சனைகளுக்கு இது நல்ல மருந்து..

இதய தமனி: சிலர் சமைக்கும்போதோ அல்லது சாப்பிடும்போதோ இதன் விதைகளை தவிர்த்துவிடுவார்கள். ஆனால், இந்த விதை இதய நோய்களிலிருந்து நம்மை காக்கிறது. தேவையற்ற கொழுப்புகளை எரித்து, இதய தமனி அடைப்பு ஏற்படுவதில் இருந்தும் விடுபட வைக்கிறது.. புற்றுநோய், லூக்கீமியா, ரத்தசோகை போன்றவை வராமல் தடுக்கும் ஆற்றலும் இந்த பாகற்காய்களுக்கு உண்டு..
இந்த பாகற்காய் உடல் எடையை குறைக்க விரும்புவோருக்கு அருமருந்து.. ஆனால், அளவுக்கு அதிகமாக பாகற்காய் சாப்பிடுவது, இதயப்பிரச்சனையை கொண்டுவந்து விட்டுவிடும்.. அதேபோல, சிறுநீரக நோய் உருவாகலாம்..
பாகற்காய்: சர்க்கரை நோயாளிகள் பாகற்காயில் வைட்டமின் ஏ, சி, பி2, ஈ, கே, கால்சியம், பொட்டாசியம், மெக்னீசியம், இரும்புச்சத்து, பிளாவினாய்ட்ஸ், உள்ளிட்ட ஆன்டிஆக்ஸிடன்ட்ஸ் நிறைந்திருக்கின்றது. அத்துடன், பாகற்காயில் கொழுப்புச்சத்து, கார்போஹைட்ரேட், கலோரிகள் போன்றவை குறைந்த அளவே உள்ளன..
புரதச்சத்து மற்றும் நார்ச்சத்து நிறைந்து இன்சுலின் சுரப்பதை அதிகரிக்க செய்கிறது.. மொத்தத்தில், வேதிப்பொருட்கள் இருப்பதாலும், நீரிழிவு நோயாளிகள், உணவில் இதை தாராளமாக சேர்த்துக் கொள்ளலாம்.
ரத்த சர்க்கரை: இதனால், ரத்த சர்க்கரையை குறைக்கும் சரண்டி, விசைன், இன்சுலின் போல செயல்படும் பாலிபெப்டைட் - பி போன்றவை இருப்பதால் இதை சர்க்கரை நோயாளிகள் சாப்பிடுவது மிகவும் நல்லது. ஆனால், விதையையும் சேர்த்து சாப்பிடுவது நல்லது. பாகற்காயில் உள்ள லெக்டின், திசுக்களில் உள்ள செல்களுக்குள் குளுக்கோஸ் கொண்டு செல்ல தூண்டுகிறது.. இதனால், பசியை குறைத்து, உணவை குறைவாக உட்கொள்ள செய்வதால் ரத்தத்தில் சர்க்கரை அளவும் குறைகிறது.
நீரிழிவு நோயாளிகள் தினமும் பாகற்காய் ஜூஸ் குடித்தால், ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படும் என்கிறார்கள். ஆனால் பாகற்காய் ஜூஸ் குடித்தால் கல்லீரலை பாதிக்கலாம் என்றும் சொல்கிறார்கள். அதனால், தினமும் பாகற்காய் சாப்பிடுவதை நீரிழிவு நோயாளிகள் தவிர்க்கலாம் என்கிறார்கள்.
சர்க்கரை நோயாளிகள்: அதுமட்டுமல்ல, பொதுவாக, மாத்திரைகளுடன் சேர்த்து பாகற்காயை சாப்பிடும்போது அது ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை வெகுவாக பாதிக்கும். இதனால், சர்க்கரையின் அளவு மிகவும் குறையவும் வாய்ப்புள்ளது.. இதனால் மயக்கமும் வரலாம்.. அதனால், சர்க்கரை நோயாளிகள், பாகற்காய் சாப்பிடும்முன் டாக்டரின் ஆலோசனையை பெறுவது நல்லது.
அதேபோல, கர்ப்பிணி பெண்கள் சாப்பிடக்கூடாது என்பார்கள். காரணம், பாகற்காய் சாப்பிட்டால், சாதாரண பெண்களுக்கே ரத்த போக்கு அதிகமாக இருக்கும். அதனால், கர்ப்பிணி பெண்களும், பாலூட்டும் தாய்மார்களும் இதை சாப்பிட வேண்டாம் என்பார்கள்.. அதுவும் இல்லாமல், இந்த கசப்பு சுவை தோலில் சுருக்கங்களை ஏற்படுத்திவிடும். அதிக அளவு பாற்காய் சாப்பிட்டால் கருச்சிதைவுக்கும் வாய்ப்புள்ளது. அதனால், கர்ப்பிணிகள் டாக்டரை ஆலோசிக்காமல் இதை எடுத்து கொள்ளக்கூடாது.
டிப்ஸ்: பாகற்காய் கசப்பு பிடிக்காதவர்கள், தேங்காய் உடைத்ததும் வரும் இளநீரில், சிறிது நேரம் வெட்டிய பாகற்காய் துண்டுகளை ஊற விட வேண்டும்.. அல்லது உப்பு போட்டு ஊறவைக்க வேண்டும். இப்படி செய்தால், பாகற்காயில் உள்ள கசப்பு குறைந்துவிடும். அல்லது அதை தயிரில் ஊறவைத்தோ, அல்லது வெங்காயம், உருளைக்கிழங்குடன் சேர்த்து சமைத்தோ சாப்பிடலாம். ஆனால், கர்ப்பிணிகள் தவிர, மற்றவர்கள் இதை அளவுடன் எடுத்துக்கொள்ளலாம்..












Click it and Unblock the Notifications