செம்பருத்தி பூவின் சிறப்பு.. நாலஞ்சு இதழ் போதுமே.. உடலில் நடக்கும் ஆச்சரியம்.. வாவ் செம்பருத்தி இலை
சென்னை: செம்பருத்தி பூக்களை வெறும் வயிற்றில் சாப்பிடலாமா? செம்பருத்தியை சாப்பிடும்போது உடல் எடை குறைய வாய்ப்புள்ளதா? பெண்களுக்கு எந்த அளவுக்கு இந்த செம்பருத்தி இதழ்கள் மருந்தாகின்றன? இயற்கையின் தங்கபஸ்பம் என்று சொல்லும் செம்பருத்தியின் மருத்துவ பயன்கள் என்னென்ன?
இரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால் தொந்தரவு இருப்பவர்கள், செம்பருத்தி இதழ்களை பொடி செய்து வைத்து கொள்ள வேண்டும். இந்த பவுடரிலோ அல்லது செம்பருத்தி பூக்களின் இதழ்களையோ தண்ணீரில் கொதிக்க வைத்து குடித்து வரும்போது, பலன் கிடைக்கும்..

அதேபோல, செம்பருத்தி பூ பவுடரை தொடர்ந்து சாப்பிட்டு வரும்போது, 22 சதவீதம்வரை கொலஸ்ட்ரால் அளவும் குறைகிறதாம்.. நோய் எதிர்ப்பு சக்தியும் பெருகுவதுடன், அனீமியா தொந்தரவு இருந்தாலும் குணமாகிவிடும்.
இதய நோய்கள்: செம்பருத்தி பூக்களை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வருபவர்களுக்கு இதய நோய்கள் நெருங்குவதில்லை என்பார்கள்.. இந்த பூவின் இதழ்களை பறித்து சுத்தம் செய்து ஜூஸ் போல தயாரித்து குடித்து வரும்போது, இதயநோய்களும் குணமாகும். அதேபோல, இதயம் பலவீனமாக உள்ளவர்கள், இந்த பூக்களை காயவைத்து தூள் செய்து சாப்பிட்டாலும், பலன் கிடைக்கும்.
பெண்களுக்கு மாதவிடாய் நேரத்தில், அதிக ரத்தப்போக்கு இருந்தால், செம்பருத்தி இலைகளே மருந்தாகின்றன. இந்த பூக்களின் இதழ்களை நெய்யில் வதக்கி சாப்பிட்டு வரும்போது, உதிரப்போக்கு கட்டுக்குள் வரும். அதேபோல கர்ப்பப்பை கோளாறுகள் இருந்தாலும், இந்த பூக்களை விழுதாக போல அரைத்து, வெறும் வயிற்றில், 7 நாட்களுக்கு சாப்பிட்டு வரும்போது கர்ப்பப்பை கோளாறுகள் சீராகும்..
இந்த பூக்களை வைத்து டீ போட்டு குடிக்கலாம்.. ஒரு பாத்திரத்தில் நான்கைந்து செம்பருத்தி பூக்களை போட்டு, நன்றாக கொடிக்க வைத்து, வெல்லம் அல்லது நாட்டுச்சர்க்கரை சேர்த்து குடிக்கலாம். இந்த செம்பருத்தி டீயை குடித்து வந்தால் பித்தம் நீங்கும்... உடல் சூடும் தணியும்..
உடல் எடை: உடலுக்கு தேவையான பிளவனாய்டுகள் மற்றும் மினெரல்கள் போன்ற பல ஊட்டச்சத்துக்களை இந்த செம்பருத்தி டீ தருகிறது.. இதன்காரணமாக, கொழுப்புகள் மற்றும் கார்போஹைட்ரேட்டுகளை உறிஞ்சுவதையும் குறைக்கிறது. மேலும், உடல் எடை குறைய பெரிதும் துணைபுரிகிறது.. இந்த செம்பருத்தி டீயிலுள்ள ஆன்டிஆக்சிடென்ட்களின் அளவு மிக அதிகமாக உள்ளதால், நம்முடைய உடலில் வளர்ச்சிதை மாற்றத்தை அதிகரித்து உடல் எடை குறைக்கச்செய்யும்.
சருமத்தை பளபளப்பாக்கக்கூடிய இந்த செரும்பருத்தி, எந்தவிதமான பக்கவிளைவுகளுமற்றது. வெறும் வயிற்றில் ஐந்தாறு செம்பருத்தி இதழ்களை மென்று, சிறிது தண்ணீர் குடித்து வந்தால், வயிற்றுப்புண் ஆறும்.. பெண்களுக்கு வெள்ளைப்படுதல் தொந்தரவு நிற்கும்.
தேங்காய் எண்ணெயில், செம்பருத்தி பூக்களின் மொட்டுக்களை போட்டு ஊற வைத்து, தொடர்ந்து தலைக்கு தடவி வந்தால் தலைமுடி கருமை நிறம் பாதுகாக்கப்படும்.
சளி மற்றும் இருமலை குணமாக்கும் தன்மை செம்பருத்தி இலைகளுக்கு உள்ளது.. வைட்டமின் C உள்ளதால் சளி, இருமல் மற்றும் காய்ச்சலை குணமாக்க இது பெரிதும் உதவுகின்றது. 3 அல்லது 4 செம்பருத்திப் பூக்களை ஒரு டம்ளர் நீர்விட்டு காய்ச்சி வடிகட்டி, அதனுடன் சிறிது தேன் அல்லது நாட்டுச் சர்க்கரை சேர்த்து குடித்து வந்தால், ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கும்.. குழந்தைகளுக்கு ஏதாவது ஒரு வகையில் செம்பருத்தியை தந்துவிட வேண்டும்.












Click it and Unblock the Notifications