ஒல்லி ஒல்லின்னு ஆகணுமா.. ஈஸியா வெயிட்டை குறைக்கலாம்.. இந்த "பருப்பை" மட்டும் விட்றாதீங்க.. சூப்பர்
சென்னை: உடல் எடையை குறைக்க வேண்டுமானால், தவிர்க்கவே முடியாத விஷயம் உடற்பயிற்சிகள்தான்.. கட்டாயம் உடற்பயிற்சிகள் செய்ய வேண்டும் என்றாலும், உடல்எடை குறைய பக்கபலமாக இருப்பது காய்கறிகளும், பழங்களும்தான்.
நீலம் மற்றும் ஊதா நிற காய்கள், உடல்எடையை குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது என்றாலும், எந்த நேரத்தில், எந்த மாதிரியான உணவுகளை உண்ண வேண்டும் என்பதில்தான் பலருக்கும் சிக்கலும் குழப்பமும் வந்துவிடுகிறது..
இதற்காகவே சிலர் டயட் சார்ட் போல அட்டவணை பயன்படுத்தி பின்பற்றலாம்.. உதாரணமாக, காலை உணவாக 2 அல்லது 3 வேகவைத்த முட்டையுடன், ஒரு கப் கிரீன் டீ குடிக்கலாம்.. அல்லது வேகவைத்த சுண்டல் கிரீன் டீ சாப்பிடலாம். மதிய உணவிற்கு ஒரு ஆப்பிள் பழம், 3 வேகவைத்த முட்டை சாப்பிடலாம்.

பிளாக் டீ, கிரீன் டீ: இரவு உணவில் ஒரு கப் ஓட்ஸ், ஒரு ஆப்பிள் பழம் சாப்பிடலாம். அல்லது சாயங்கால நேரத்தில் கிரீன் டீ அல்லது பிளாக் டீ குடிக்கலாம். எப்படியும் இரவு தூங்கும்போது கட்டாயம் கிரீன் டீ குடிக்க வேண்டும்.. பிரபல டிவி நடிகை ஸ்ரேயா, ஒரு மாதத்தில் 7 கிலோ எடையை தான் குறைத்தது குறித்து பேட்டி தந்திருந்தார்..
அதில், காலை வெறும் வயிற்றில் ஊற வைத்த சப்ஜா விதை, தேன், பப்பாளி சேர்ந்து சாப்பிடுவாராம். நிறைய காய்கறிகளை சாப்பிடுவாராம். பாலக்கீரை- புதினா சேர்த்து நன்றாக அரைத்து, அதில் எலுமிச்சை சாறு சேர்த்து வெறும் வயிற்றில் குடிப்பாராம். சாயங்காலம் நேரத்தில் வேக வைத்த கருப்பு கடலை, வேக வைத்த சுண்டல் சாப்பிடுவாராம்.. இதனுடன் காலை 20 நிமிட நடைபயிற்சியும் செய்தாலேயே உடல் எடையை குறைக்க முடிந்தது என்கிறார்.
விழிப்புணர்வு: உணவு மற்றும் சித்த மருத்துவம் சார்ந்த விழிப்புணர்வை ஏற்படுத்திவரும் நிபுணர் சிவராமன், ஒருவரின் உணவு எப்படி இருக்க வேண்டும் என்று ஒரு நிகழ்ச்சியில் சொல்கிறார்..
'காலையில், முளைக்கட்டிய பயிறு, கொஞ்சம் காய்கறிதுண்டு, 2 முட்டை, காய்கறிகளின் சூப் குடிக்கலாம்.. மதிய உணவில், காய்கறிகள்தான் தட்டில் நிறைய இருக்க வேண்டும். சோறு குறைவாக இருக்க வேண்டும். புலால் சாப்பிடுபவர்களாக இருந்தால், மீன், கோழித்துண்டுகளை நிறைய வைத்து சாப்பிடலாம்.
விதவித அரிசிகள்: அரிசி சோறு ஒருநாள் மட்டுமே வைத்துகொண்டு, மற்ற நாட்களில் வரகு அரிசி, காட்டு யானம், கம்பு சோறு, மாப்பிள்ளை சம்பா, கவுனி கருங்குருவை இப்படி விதவிதமாக சமைத்து சாப்பிட வேண்டும்.. கறிவேப்பிலை, அத்திப்பழம், வெள்ளாட்டு மண்ணீரல், முருங்கைக்கீரை இதெல்லாம் சாப்பிட்டாலே ரத்த சோகை வராது.. மொத்தம் 6 சுவையுள்ள உணவுகளை நாம் கலந்து சாப்பிடவேண்டும். இதில், கசப்பும், துவர்ப்பும்தான் அதிக மருத்துவ குணங்கள் உடையவை" என்று விளக்குகிறார்.
ஆனால், காலை நேர உணவில் பெரும்பாலும் புரோட்டீன்கள் அதிகம் இருக்கும்படி பார்த்துகொள்ள வேண்டுமாம். இதற்குதான் பெரும்பாலானோர் கொண்டைக்கடலையை சாப்பிடும்படி பரிந்துரைக்கிறார்கள்.. 28 கிராம் கொண்டைக்கடலையில் சுமார் 102 கலோரிகள் இருக்கிறதாம்.. நார்ச்சத்து, இரும்புச்சத்து, புரதச்சத்து என அனைத்துமே நிரம்பியுள்ளது கொண்டைக்கடலை.. இதை சாப்பிட்டால் நீண்ட நேரத்துக்கு பசி எடுக்காது. அத்துடன், ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிப்பதையும் தடுக்கலாம்.
புரோட்டீன்: கொண்டைக்கடலையை உணவில் சேர்த்துக்கொண்டால், 25 சதவீதம் உடல் எடையை குறைக்க உதவுவதாக, ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. எனவே, முளை கட்டிய கொண்டைக்கடலையை காலை நேரத்தில் "அளவோடு" சாப்பிடலாம்.












Click it and Unblock the Notifications