அந்த "இலை"யின் மந்திரம்.. மொத்த சிக்கலும் ஓடிரும்..வெறும் வயிற்றில் குடிச்சு பாருங்க.. அப்ப தெரியும்
சென்னை: பிரபஞ்சத்தில் முதன்முதலில் முளைத்த மூலிகை அருகம்புல் என்பார்கள்.. தீராத நோய்களுக்கு அருகம்புல் மிளகு தீர்க்கும் என்ற பழமொழியே உண்டு.
எல்லா நோய்களுக்கும் ஏற்ற சிறந்த மருந்து உண்டென்றால், அது அருகம்புல்தான்.. அத்தனையும் மருத்துவம்.. அவ்வளவும் உடலுக்கு நல்லது.. இதன் தண்டு குட்டையாகவும், நேராகவும் இருக்கும்.. வெப்பமான சூழ்நிலைகளிலும் வளரக்கூடிய தன்மை இந்த அருகம்புல்லுக்கு உண்டு..
வேதிபொருட்கள்: மாவுச்சத்து, உப்புச்சத்து, நீர்த்த கரிச்சத்து, அசிட்டிக் அமிலம், கொழுப்புச்சத்து, ஆல்கலாய்ட்ஸ், அருண்டோயின், பி.சிட்டோஸ்டர், கார்போஹைட்ரேட், கவுமாரிக் அமிலச்சத்து, பெரூலிக் அமிலச்சத்து, நார்ச்சத்து, லிக்னின், மெக்னீசியம், பொட்டாசியம், பால்மிட்டிக் அமிலம், செலினியம், டைட்டர் பினாய்ட்ஸ், வேனிலிக் அமிலம் மற்றும் வைட்டமின் "சி' சத்தும் அடங்கியுள்ளன..
நன்மைகள்: கண் பார்வை தெளிவுபெறும்... ரத்தத்தை சுத்தப்படுத்தும்.. நினைவுத்திறனை அதிகப்படுத்தும்.. மன உளைச்சல், மன இறுக்கத்தை நீக்கும்.. நன்மைகள் உடலை பலப்படுத்தும்.. குடல் புண்களை ஆற்றும்.. சிறுநீர் பெருக்கை அதிகப்படுத்தும்.

உடல் எடை குறைய: உடல்எடை குறைய வேண்டும் என்றால், அருகம்புல் சிறந்த மருந்து.. சுத்தம் செய்யப்பட்ட அருகம்புல் சாறை காலை எழுந்தவுடன் குடித்து வந்தால், உடலிலுள்ள கெட்ட நீர் வெளியேறி தேவையற்ற சதைப்பகுதி குறைந்து விடுமாம்.. அருகம்புல்லை தண்ணீரில் அலசிவிட்டு, சுத்தமான தண்ணீரை சேர்த்து இடித்தோ அல்லது மிக்ஸியில் அரைத்தோ, சாறு எடுத்து அருந்தலாம்.. இதனுடன் துளசியை சேர்த்துக்கொண்டால் இன்னும் நல்லது.. ஆனால், வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்..
அருகம்புல் கிடைக்காவிட்டாலும், அருகம்புல் பொடி கடைகளில் கிடைக்கும்.. இதையும் பயன்படுத்தலாம்.. அருகம்புல் பொடி ரத்தம் சுத்திகரிப்பு செய்யும்... சிலருக்கு உடல் குறைப்பதற்கு அருகம்புல் பொடியும் கைகொடுக்கும்.
மூளை பாதிப்பு: உடல் பலகீனம், மூளை பாதிப்பு, தாது விருத்தி, குடைச்சல், வாய்வு, வயிற்று நோய், மூல நோய், ரத்தக் கொதிப்பு, பித்தம் தொடர்பான உஷ்ண வியாதிகள், ஆஸ்துமா, கைகால் வலி, சோர்வு போன்றவற்றுக்கெல்லாம் ஒரே மருந்து அருகம்புல் சாறுதான். ரத்தத்தில் ஹீமோகுளோபின் அதிகரிக்க செய்கிறது.. அத்துடன், ரத்தத்தில் உள்ள விஷத்தன்மைகளையும் வெளியேற்றுகிறது.. அருகம்புல் சாற்றில் வைட்டமின் ஏ சத்து உள்ளதால், உடல் புத்துணர்வு பெறும்.. குழந்தைகளுக்கும் பாலில் கலந்து கொடுக்கலாம்.
வெண் குட்டம் என்ற தோல் நோய்க்கு அருமருந்துதான் இந்த அருகம்புல்.. ஆஸ்துமாவையும் விரட்டுகிறது.. மண்ணீரல் வீக்கத்தையும் குறைக்கிறது.. புற்றுநோய் குணப்படுத்தும் தன்மை இந்த அருகம்புல்லுக்கு உண்டு.. அதேபோல, சர்க்கரை நோயை சீராக்கக்கூடியது.. நீரழிவு நோயால் அருகம்புல் ஜூஸ் அருந்துவது மிகவும் நல்லது. சிலருக்கு எவ்வளவு சாப்பிட்டாலும் பசி அடங்காது. இவர்கள் தினந்தோறும் அருகம்புல் சாற்றை குடித்தால் அதீத பசி கட்டுப்படும்.
பளபளப்பு: அருகம்புல்லுடன், சிறிதளவு மஞ்சள் சேர்த்து பசைபோல் அரைத்து, உடலில் தேய்த்து, ஒரு மணி நேரம் ஊறிய பிறகு குளிக்க வேண்டும். இதனால், சொறி, சிரங்கு, புண்கள், படர்தாமரை, உடல் அரிப்பு குணமாகும்.. அருகம்புல்லையும் தேங்காய் எண்ணையையும் சம அளவு எடுத்துக் கொண்டு அதை உடலில் தேய்த்து அரைமணி நேரம் ஊறவிடவும். பிறகு கடலை மாவால் தேய்த்துக் குளித்தால் உடல் பளபளப்பு பெறும். புல், பூண்டுகளிலும் மருத்துவ குணங்கள் ஒளிந்திருக்கின்றன என்பதற்கு உதாரணம்தான் இந்த அருகம்புல்..!!
-
தினமும் ஒரு கைப்பிடி மொச்சை பயறு சாப்பிட்டால் உடலில் இவ்வளவு மாற்றங்களா? மிஸ் பண்ணிடாதீங்க! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
கடைசியில் பாரதிராஜா சொன்ன கண்ணீர் வார்த்தைகள்.. தேனியில் என்னை கிடத்திடுங்க.. பிரபலம் சொல்வதென்ன












Click it and Unblock the Notifications