அயிரை மீன்.. அதென்ன மதுரையில் மட்டும் அயிரா மீன் ஸ்பெஷல்? மேட்டூர் அணையில் துள்ளும் "அயிரா கருவாடு"
சென்னை: மீன்கள் என்றாலே சத்துக்கள் நிறைந்தது.. அதிலும் சின்ன சின்ன மீன்களில் நிறைய சத்துக்கள் உள்ளன.. அப்படியானால், அயிரை மீனை பற்றி சொல்லவா வேண்டும்?
அயிரை மீன்கள் எப்போதுமே நல்ல தண்ணீரில் வளரக்கூடியது.. வாய்க்கால்களிலும் சரி, வயல்களிலும்சரி, கண்மாய்களிலும் சரி, நல்ல நீரோடைகளில் மட்டுமே உயிர் வாழும் தன்மை கொண்டது... அதனால்தான், மழை பெய்யும் காலங்களில், நீரோடைகளில் இந்த மீனை பிடிக்க திரண்டு செல்வார்கள்.

புரோட்டீன்கள்: மற்ற மீன்களில் ஒமேகா 3 அதிகமுள்ளது என்றால், இந்த அயிரை மீனில் ஒமேகா 6-ம் சேர்ந்தே அபரிமிதமாக காணப்படுகிறது.. அதிகளவு புரோட்டீன், அதிகளவு வைட்டமின்கள், அதிகளவு கனிமச்சத்துக்கள் என நிரம்பி கிடக்கின்றன.
சாச்சுடேட்டட் கொழுப்புக்கள் குறைவாகவும், அன்சாச்சுரேட்டட் கொழுப்புக்கள் அதிகமாகவும் உள்ளது. அதாவது, கெட்ட கொழுப்புக்கள் குறைவாகவும், நல்ல கொழுப்புக்கள் அதிகமாகவும் உள்ளதால், அயிரை மீன்களை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விருப்பப்படுகின்றன.
உயர் ரத்த அழுத்தம்: இதன் பலன்கள் என்று பார்த்தோமானால், ரத்த நாளங்களுக்கு மிகவும் நல்லது... ரத்த ஓட்டத்தை தடையின்றி சீராக்குகிறது.. ரத்த அழுத்த பிரச்சனை வராமல் தடுக்கிறது.. யாராவது, ஹை-பிபி எனப்படும் உயர் ரத்த அழுத்த பிரச்சனையில் பாதிக்கப்பட்டிருந்தால், இந்த அயிரை மீனை அடிக்கடி செய்து சாப்பிடலாம்.
சர்க்கரை நோயாளிகள் இந்த மீனை சாப்பிடுவதால், அபாயம் குறைகிறதாம்.. அயிரை மீனை சாப்பிடுபவர்களுக்கு, கண்களில் பெரிதாக பாதிப்புகள் வருவதுகிடையாது.. அவ்வளவு ஏன், மாலைக் கண் நோயையும்கூட தடுத்து நிறுத்திவிடும் இந்த குட்டி மீன்கள்.
அயிரை மீனிலுள்ள வைட்டமின் E சத்தானது, சரும பிரச்சனைகள் வராமல் தடுக்கிறது.. அயிரை மீனிலுள்ள கால்சியம் சத்துக்கள் எலும்புகளையும், பற்களையும் வலுவாக்குகிறது.. அயிரை மீனிலுள்ள அமினோ அமிலங்கள், நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமைப்படுத்துகிறது.. அயிரை மீனிலுள்ள காம்ப்ளக்ஸ் சத்துக்கள், கர்ப்பிணிகளுக்கும், வயிற்றிலுள்ள குழந்தைகளுக்கும் ஆரோக்கியம் தருகிறது.
மருத்துவ நன்மைகள்: நிறைய மருத்துவ நன்மையும், ருசியும் உள்ளதால்தான், எப்போதுமே இந்த மீனுக்கு டிமாண்டு அதிகம். அதனால்தான், அதிக விலைக்கு விற்கப்பட்டு வருகிறது. அயிரை மீன்கள் 1 கிலோ 2000 ரூபாய்க்கு விற்கப்படும் நிலைமை உள்ளது..
மதுரையில் இந்த மீன் மிகவும் ஃபேமஸ்.. பல மாவட்டங்களில் மதிய நேரத்தில் அயிரை மீன் குழம்பு கிடைக்கிறது என்றால், மதுரை ஓட்டல்களில் மட்டும் இரவு நேரத்திலும், சுடச்சுட இட்லியும், அயிரை மீன் குழம்பும் கிடைக்குமாம்.. அதேபோல மதுரை மாவட்டத்தில் உள்ள ருசிபோல, இந்த அயிரை மீன் குழம்பு வேறெங்கிலும் ருசியை தந்ததில்லை..
மழைக்காலம் வந்துவிட்டாரே, பெரும்பாலான கிராமத்து வீடுகளில் குழம்பில் கொதிப்பது இந்த அயிரை மீன் குழம்பாகத்தான் இருக்கும். இந்த மீனை கிராமங்களில் உழக்கு என்று சொல்லி எடை போட்டு தருவது இன்றும் நடைமுறையில் உள்ளது..
கருவாடு: அதேபோல, ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் சேலம் மாவட்டம் மேட்டூர் அணையில் பிடிக்கப்படும் அயிரை மீன்கள் பதப்படுத்தப்பட்டு, கருவாடாக விற்கிறார்கள்.. சளி, இருமல், கக்குவான் போன்ற நோய்களுக்கு சிறந்த மருந்தாக அயிரை மீன் கருவாடு பயன்படுவதால், அம்மக்களிடையே இன்றும் பெரும் வரவேற்பு உள்ளது..
குறிப்பாக, மேட்டூர் அணையில் நன்னீரில் வளரும் அயிரை மீன்கள், தேவைக்குஅதிகமாக பிடிக்கப்படுவதால் அவற்றை வெயிலில் வைத்து பதப்படுத்தி கருவாடாக மாற்றுகிறார்கள்.. இதை வெளி மாவட்டங்களில் ராமநாதபுரம், பரமக்குடி, இளையான்குடி, பட்டுக்கோட்டை, தேவகோட்டை பகுதியில் கிலோ 600 ரூபாய்க்கு விற்கிறார்கள்.. கருவாட்டின் விலையே 600 ரூபாய் என்றால், நீரோடைகளில் துள்ளி துள்ளி ஓடிவரும் இந்த அயிரை மீனுக்கு உள்ள மவுசை நீங்களே பார்த்துக்குங்க..!!
சத்துக்கள்: இவ்வளவு சத்துக்கள் இந்த மீனில் இருந்தாலும், ஒரு அளவுடன்தான் சாப்பிட வேண்டும்.. வாரத்துக்கு 2 முறைக்குமேல் சாப்பிட வேண்டாம் என்று அறிவுறுத்துகிறார்கள். அதேசமயம், இந்த மீனை குழம்பு செய்யலாமே தவிர, எண்ணெய்யில் டீப் ஃப்ரை செய்து சாப்பிடக்கூடாது. குழம்பு வைத்தாலும்கூட, அதிகமாக சூடாக்கி வேகவைத்தால், இதிலுள்ள சத்துக்கள் குறைந்துவிடுமாம்.
-
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு












Click it and Unblock the Notifications