இளைத்தவனுக்கு எள்ளு! கொழுத்தவனுக்கு கொள்ளு! தினமும் எள் உருண்டை சாப்பிடலாமா?
சென்னை: தினமும் எள் உருண்டையை சாப்பிட்டு வருவது நல்லதா என்பதை தெரிந்து கொள்ளலாம். தமிழர்கள் அதிகம் உட்கொள்ளும் இரும்பு சத்து மிக்க உணவில் ஒன்றுதான் எள். இந்த எள்ளின் நன்மைகள் குறித்து காணலாம்.

இதுகுறித்து அத்திமரக்காடு எனும் சமூகவலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: எள் உருண்டையை தொடர்ந்து உட்கொள்வது நல்லதா?
தமிழர்கள் அதிகம் உண்ணும் உணவுகளில் ஒன்று தான் எள்ளு. இது உலகிலேயே மிகப் பழமையான எண்ணெய் விதைப் பயிர்களுள் ஒன்று. எள்ளில் காப்பர், கால்சியம்,
மெக்னீசியம், பாஸ்பரஸ், வைட்டமின் பி, வைட்டமின் ஈ, இரும்புச்சத்து, ஜிங்க், புரதச்சத்து போன்றவை உள்ளது.
அதுமட்டுமின்றி எள் உருண்டை உடலுக்கு பல ஆரோக்கிய பலன்களை தருகின்றது. தற்போது எள்ளுருண்டை சாப்பிடுவதனால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன என்பதை பார்ப்போம்.
எள் உருண்டையை அதிகம் சாப்பிடுவது உடலின் எலும்புகளை வலிமைப்படுத்தும். எள்ளில் செம்பு அதிகம் உள்ளது. இது ரத்தத்தில் பிராணவாயுவை அதிகம் கிரகிக்க செய்து, உடலின் அனைத்து பகுதிகளுக்கும் தேவையான சத்துக்கள் சென்றடைவதை உறுதி செய்கிறது.
எலும்புகள் வலுவிழப்பது, மூட்டு தேய்மானம் போன்ற குறைபாடுகளையும் எள் உருண்டையை தொடர்ந்து மூலம் போக்க முடியும்.
தலைமுடி மனிதர்களின் தலையில் இருக்கும் தலைமுடி அவர்களுக்கு நல்ல தோற்றத்தை தருவதோடு இல்லாமல், உச்சந்தலையை வெப்பம் மற்றும் காயங்கள் ஏற்படுவதிலிருந்தும் காக்கின்றது.
ஆஸ்துமாவினால் அவதிப்படுபவர்கள் தினமும் ஒரு எள் உருண்டையை சாப்பிட்டு வந்தால் மூச்சு விடுவதில் ஏற்படும் சிரமம் குறையும். உடல் சக்தி குறைந்திருப்பவர்கள், உடல் எடை சராசரி அளவிற்கும் கீழாக இருப்பவர்கள் எள்ளு உருண்டையை அதிகம் சாப்பிட்டு வந்தால் அவர்களின் உடல் சக்தி அதிகரிக்கும்.
உடல் இளைத்தவர்களும் சரியான உடல் எடையை பெறுவார்கள். உடல் விரைவில் சோர்வடையாமல் நீண்ட நேரம் செயலாற்றும் சக்தியையும் பெறுவார்கள். எள் மெக்னீசியம் மற்றும் கால்சியம் சத்துக்களை அதிகம் கொண்டது.
இப்படி படபடப்பு தன்மை மிகுந்தவர்கள் தினமும் ஒரு எள் உருண்டையை சாப்பிட்டு வந்தால்
அவர்கள் உடலில் மூளை மற்றும் நரம்புகளில் இறுக்கம் தளர்ந்து, உடல் மற்றும் மனம் அமைதியடையும் படபடப்பு தன்மை மறையும். இவ்வாறு அந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
குளிர்காலம் தொடங்கும் போது பலருக்கு சளி, இருமல் தொல்லை இருக்கும். நோய் எதிர்ப்பு சக்தி குறைவதால் உடலில் இது போன்ற பிரச்சினைகள் ஏற்படும். இதற்காக உடலை சூடாக வைத்திருக்க வேண்டியது அவசியம். இதற்காக எள், வெல்லம் ஆகியவை நன்மையை தரும். நம் உடலை சூடாக வைத்திருக்கும். இரு பொருளையும் சேர்த்து உருண்டை செய்து உட்கொள்ளலாம். குளிரில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவதால் ஏற்படும் பாக்டீரியா பரவலை தடுக்கும்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications