சர்க்கரை நோயாளிகளுக்கு பயன்தரும் "தண்ணீர்".. வெறும் நாலஞ்சு இலைகள்.. சர்ர்ருன்னு சுகர் குறையுமாம்
சென்னை: சர்க்கரை நோயாளிகளுக்கு சித்த மருத்துவம் ஏராளமான உணவு முறைகளை வலியுறுத்துகிறது.. அதேசமயம், வீட்டிலுள்ள பொருட்களை கொண்டே, சர்க்கரையின் வீர்யத்தை குறைக்க முடியும் என்கிறார்கள். அந்தவகையில், சர்க்கரை நோயாளிகளுக்கு உதவக்கூடிய 5 வகையான தண்ணீரை பற்றி பார்ப்போம்.
வெண்டைக்காயை பொறுத்தவரை, அளவுக்கு அதிகமான ஆண்ட்டி ஆக்சிடென்ட்கள் நிறைந்துள்ளன.. கரையும் நார்ச்சத்துக்கள் இதில் அதிகமாக உளளன.. இந்த நார்ச்சத்துக்கள்தான் கொலஸ்ட்டிராலின் அளவையும் கட்டுப்படுத்தி, மாரடைப்பு, பக்கவாதம் போன்ற அபாய நோய்களை முன்கூட்டிய தடுக்கின்றன..

வெண்டைக்காய் தண்ணீர்
ஒரு டம்ளர் நீரில் வெண்டைக்காயை நறுக்கி சேர்த்து, இரவு முழுவதும் ஊற வைத்துவிட்டு, மறுநாள் காலையில் அந்த தண்ணீரை குடித்து வந்தால், சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. நீர்ச்சத்து, நார்ச்சத்து நிறைந்த இந்த தண்ணீரை குடித்து வந்தால், நீரிழப்பு தடுக்கப்படுவதுடன், உடல் குளுமை பெறும்... எலும்பு நோய்களும் நெருங்காது, அத்துடன் எலும்புகளின் அடர்த்தியும் அதிகமாகும்.
அத்திப்பழம் தண்ணீர்
அடுத்ததாக, உலர்ந்த அத்திப்பழத்தை, 1 கிராம் அளவு தினமும் 2 வேளை தண்ணீருடன் சாப்பிட்டு வரவேண்டும்.. ஏனென்றால், அத்திப்பழத்தில் பொட்டாசியம் சத்துக்கள் அதிகம் உள்ளன.. இதிலுள்ள குளோரோஜெனிக் அமிலம் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவைக் குறைக்க உதவுகின்றன.. நிறைய நார்ச்சத்துக்கள் உள்ளதால், ரத்தச் சர்க்கரை அமிலங்கள் நீரிழிவு நோயை கட்டுப்படுத்துவது ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.
அதேபோல, 1 முதல் 3 கோவைக்காய் சாற்றைத் தினமும் குடிக்கலாம். சர்க்கரை நோயாளிகளுக்கு கோவைக்காய் மிகவும் நல்லது. கோவைக்காயின் இலை, தண்டு, வேர், காய், கனி என அனைத்து பாகங்களும் மருத்துவ குணங்கள் கொண்டவை. கோவைக்காயை உணவில் சேர்த்துக்கொள்வதால், ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தலாம்.
கொய்யா இலை டீ
அதேபோல, கொய்யாவை தவிர்க்க முடியாது.. இந்த பழத்தில் வைட்டமின் C, A, பொட்டாசியம், மாங்கனீஸ் மற்றும் ஆக்ஸிஜனேற்றத்தின் வளமான மூலமாகும். கொய்யாவில் குறைந்த கலோரிகள் உள்ளன..
அத்துடன், புரதம் மற்றும் நார்ச்சத்து அதிகமாக உளளன.. நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் தன்மை இந்த கொய்யாவுக்கு உண்டு. கொய்யா பழம் மட்டும் இல்லை, அதன் விதைகள், தோல் மற்றும் இலைகள் அனைத்தும் பல நன்மைகளைக் கொண்டுள்ளன. கொய்யா இலையில், வைட்டமின் C, ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளதால், இந்த இலையில் சர்க்கரை நோயாளிகள் டீ தயாரித்து குடிக்கலாம்.
வெந்தய தண்ணீர்
வெந்தயம் சர்க்கரை நோயாளிகளுக்குக் கிடைத்த வரப்பிரசாதமாகம்.. ரத்தத்தில் சர்க்கரையின் அதீத அளவை குறைத்து கட்டுக்குள் கொண்டு வரக்கூடியது இந்த வெந்தயம்.. எனவே, இரவில் வெந்தயத்தை ஊறவைத்து, மறுநாள் காலை வெறும் வயிற்றில் அந்த வெந்தய நீர் குடித்து வந்தால் ரத்த சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும்.. அல்லது வெந்தயத்தை பவுடர செய்து பாலில் அல்லது மோரில் கலந்து, சாப்பிடுவதற்கு 15 நிமிடங்களுக்கு முன்பு சாப்பிடலாம் என்கிறார்கள்.
-
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்! -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது












Click it and Unblock the Notifications