1 மீன் எண்ணெய்.. சர்னு குறையும் உடல் எடை.. மீன் எண்ணெய் மாத்திரை சாப்பிடுவதால் இவ்வளவு நன்மை? அருமை
சென்னை: மீன்கள் என்றாலே உடலுக்கு ஆரோக்கியம் தருபவைதான்.. இதற்கு காரணம், மீன்களில் ஒமேகா 3 என்ற கொழுப்பு அமிலம் அதிகம் நிரம்பியிருக்கிறது.. இந்த ஒமேகா 3 என்ற அமிலத்திலிருந்து தயாராவதே மீன் எண்ணெய்கள்.
ஒமேகா 3 அதிகமுள்ள, சால்மன், மத்தி போன்ற மீன் வகைகளில் இருந்து மீன் எண்ணெய் பெறப்படுகிறது.. மேலும், திமிங்கலம் போன்ற பெரிய மீனிலிருந்தும் எடுக்கப்படும்... பெரும்பாலும் திமிங்கலத்தை நாம் சமைக்க மாட்டோம். அதனால்தான், வைட்டமின் மாத்திரைகள் இந்த மீனிலிருந்து தயாரிக்கப்படுகின்றன.

மாரடைப்பு: இந்த மீன் மாத்திரையை சாப்பிடுவதால், இதய நோய்களின் அபாயம் குறைக்கப்படுகிறது.. ஒமேகா -3 நிறைந்த மீன் எண்ணெய்யை சாப்பிடும்போது, மாரடைப்பு அபாயமும் குறைகிறது. கொலஸ்ட்ரால் குறைகிறது.. ரத்தத்தில் ட்ரைகிளிசரைடு அளவும் குறைகிறது. உடலில் சுறுசுறுப்பு கூடுகிறது.
மீன் எண்ணெய்யை சாப்பிடுவதால், மன அழுத்தம் நீங்கும்.. மனச்சோர்வும் நீங்கும். மூட்டுகளில் வலி, முடக்குவாதம் போன்ற பிரச்சனைகளை சரிசெய்ய இந்த மீன் எண்ணெய் நிச்சயம் உதவும்..
கால்சியம்: கால்சியம் குறைபாடு உள்ள பெண்கள் இந்த மீன் எண்ணெய்யை சாப்பிடலாம்.. புற்றுநோயை எதிர்த்துப் போராடும் தன்மை இந்த மாத்திரையில் உண்டு. குடல் பகுதியை ஆரோக்கியமாக வைத்திருக்க இந்த மீன் எண்ணெய் உதவுகிறது. சுவாச பிரச்சனைகளுக்கு மீன் எண்ணெய் உதவுகிறது.. அதிலும் ஆஸ்துமா பிரச்சனையை இந்த மீன் எண்ணெய் தீர்க்கும்.. நரம்புகளில் உண்டாகும் பாதிப்புகளை நீக்குவதில் மீன் எண்ணெய்க்கு பெரும்பங்கு உள்ளது.
உடல் எடை: உடல் எடையை குறைக்க நினைப்பவர்களுக்கு இந்த ஒமேகா 3 கலந்த மீன் எண்ணெய்தான் பெஸ்ட் சாய்ஸ்.. 1 மீன் எண்ணெய்யை தினமும் எடுத்து கொள்வதால், உடலிலுள்ள தேவையற்ற கெட்ட கொலஸ்டிரால் குறைந்துவிடும் என்றும் எடை இழப்பை ஊக்குவிக்க இந்த மீன் எண்ணெய் உதவுவதாகவும் ஆராய்ச்சிகள் கூறுகின்றன. சருமம் பளபளக்க அடித்தளமாக இருப்பது இந்த மீன் எண்ணெய் என்பதை மறுக்க முடியாது.. இதனால் தலைமுடியும் பொலிவுபெறும்.

கண்பார்வை குறைபாடுகள் நீங்கும்.. கண்பார்வையும் கூர்மை பெறும்.. வயிற்றிலுள்ள புண்களை ஆற்ற வேண்டுமானால், மீன் எண்ணெய்யை எடுத்து கொள்ளலாம்.. இதனால் செரிமானமும் சீராகும்.
வயிறு பிரச்சனை: இப்படி எவ்வளவு நன்மைகள் தந்தாலும், அளவுக்கு மிஞ்சினால் எல்லாமே ஆபத்துதான். அளவுக்கு மீறி எடுத்துக்கொண்டால், வயிறு தொடர்பான பிரச்னைகள் ஏற்படும்...
அதனால், மருத்துவர் அனுமதியுடன்தான் இந்த மீன் எண்ணெய்யை எடுத்து கொள்ளவேண்டும். குறிப்பாக, சர்க்கரை நோய், இதய நோய், அலர்ஜி பிரச்சனை உள்ளவர்கள், அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள், கர்ப்பிணிகள் என அனைவருமே டாக்டரின் அனுமதி இல்லாமல் இதை சாப்பிடக்கூடாது. குழந்தைகளுக்கு எலும்புகள் சம்பந்தமாக ஏற்படும் நோயான ரிக்கெட்ஸ் நோயை போக்குவதற்கு இந்த மீன் எண்ணெய் தரப்படும் என்றாலும், அதையும் டாக்டர்களின் பரிந்துரையில்தான் தரவேண்டும்.

மீன் எண்ணெய்யில் நலன்கள் பல இருந்தாலும், கொழுப்பு நிறைந்த மீனாகவே வீட்டில் சமைத்து சாப்பிடுவது கூடுதல் பலன்தரும்.. மீன் சாப்பிட முடியாதவர்கள், இந்த மீன் எண்ணெய்யை சாப்பிடலாம்.
சைவ உணவு : அதேபோல, சைவ உணவு சாப்பிடுபவர்கள், ஒமேகா -3 நிறைந்த காய்கறிகள், நட்ஸ் மற்றும் விதைகளை உட்கொள்வதை அதிகரிக்கலாம். அதாவது, வால்நட், பீன்ஸ், சோயா போன்றவற்றில் ஒமேகா-3 கொழுப்புகள் எக்கச்சக்கமாக நிரம்பியிருப்பது குறிப்படத்தக்கது.
-
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு!












Click it and Unblock the Notifications