"இஞ்சி".. மிஞ்சிய விலையால் அஞ்ச வைக்கும் இஞ்சி.. அதைவிடுங்க.. திகட்ட திகட்ட தரும் பலனை பாருங்க
சென்னை: இஞ்சி இல்லாத அசைவ உணவுகளே இருக்காது.. அந்த அளவுக்கு சைவம் + அசைவம் என அடிப்படை உணவு பொருட்களில் ஒன்றாக இஞ்சி திகழ்கிறது.
செரிமான பிரச்சனைக்கு முக்கிய தீர்வாக இந்த இஞ்சி உள்ளது.. இஞ்சியை காய வைத்து கிடைக்கும் சுக்கிலும் ஏகப்பட்ட மருத்துவ குணங்கள் உள்ளன. பச்சை இஞ்சியிலும் நிறைய பலன்கள் கிடைக்கின்றன. ஆனால் இஞ்சி தோலில் நஞ்சு இருக்கும். அதனால், நன்றாக சுத்தப்படுத்தி கழுவியே பயன்படுத்த வேண்டும்.
உடல் எடை: விட்டமின் ஏ, சி, பி6, பி12 மற்றும் கால்சியம், பொட்டாசியம், சோடியம், இரும்புச்சத்து என சத்துக்கள் இதில் அடங்கியுள்ளன. ரத்த ஓட்டத்தை அதிகரிக்க செய்கிறது.. பசியுணர்வை அதிகரிக்க செய்யும். சிறிது இஞ்சியை அரைத்து பேஸ்ட் செய்து, நீரில் கலந்து நெற்றியில் தடவினால், ஒற்றைத் தலைவலி நீங்கும்.

உடல் இளைக்க வேண்டுமானால், இஞ்சியை விட பெஸ்ட் சாய்ஸ் வேறில்லை.. தினம் ஒரு துண்டு இஞ்சியை அரைத்து ஒரு டம்ளர் மோரில் கரைத்து குடித்து வந்தால், இடுப்புப் பகுதியில் கொழுப்புகளை அண்ட விடாது. ஏற்கனவே உள்ள கொழுப்பையும் கரைக்கும்.
இஞ்சி சாறுடன் தேன் கலந்து சூடாக்கி காலையில் வெறும் வயிற்றில் ஒரு ஸ்பூன் சாப்பிட்டு வெந்நீர் குடித்துவந்தால், தொப்பை கரையும். இஞ்சி சாறில், வெல்லம் கலந்து சாப்பிட்டு வந்தால் வாதப்பிரச்சனைகள் நீங்கும்.. இஞ்சி சாறில், உப்பு கலந்து 3 நாட்கள் சாப்பிட்டால், பித்த தலைச்சுற்று, மலச்சிக்கல் தீரும்..
இஞ்சி சாறு: இஞ்சி சாறில், தேன் கலந்து தினமும் காலை ஒரு ஸ்பூன் சாப்பிட்டு வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி கூடும்... இஞ்சி சாறுடன், வெங்காய சாறு கலந்து ஒரு வாரம், காலையில் ஒரு ஸ்பூன் குடித்துவந்தால் நீரிழிவு குறையும். இஞ்சி சாற்றில் தேன் கலந்து குடித்து வந்தால், ஆஸ்துமா பிரச்சனைக்கு நிவாரணம் கிடைக்கும்.
இதைவிட ஆச்சரியம், சமீபத்தில் இந்திய மருத்துவக் கழகம் ஒரு ஆய்வினை வெளியிட்டிருந்தது.. அதில், தினமும் உணவில் ஐந்து கிராம் இஞ்சியைச் சேர்த்துக் கொண்டால், இதய நோயாளிகளுக்கு மாரடைப்பு வராமல் தடுக்கப்படுகிறதாம்.. அதேபோல, இஞ்சி புற்றுநோய் செல்களின் அபாயத்தை போக்கும் தன்மை கொண்டது. கீமோதெரபி மருந்துகளை விட கருப்பை புற்றுநோய் செல்களை விரைவாகவும் பாதுகாப்பாகவும் கொன்றுவிடுகிறது இந்த இஞ்சி என்கிறார்கள ஆராய்ச்சியாளர்கள்.
யாரெல்லாம் தவிர்க்கலாம்: இஞ்சியை சாப்பிட்டு வரும் போது பெருங்குடல் மற்றும் குடல் புற்றுநோய் ஆபத்தும் குறையுமாம். இஞ்சி டீ, இஞ்சி துவையல், என ஏதாவது ஒரு ரூபத்தில் இஞ்சியை சேர்த்து கொள்ளலாம். ஆனால், இஞ்சியை அதிகமாக எடுத்துக்கொண்டால், இஞ்சியின் உறைதல் எதிர்ப்பின் காரணமாக வீக்கம், வயிற்றுப் பிரச்னைகள், இதய பகுதியில் எரிச்சல் போன்றவை ஏற்படும். ஒரு நாளைக்கு 4 கிராமுக்கு மேல் சேர்க்கக்கூடாது என்கிறார்கள் டாக்டர்கள்.
குறிப்பாக கர்ப்பிணி பெண்கள் இதை பயன்படுத்தாமல் இருப்பது நல்லதாம்.. காரணம், இஞ்சியிலிருக்கும் செரிமானத்துக்கு உதவும் சில சத்துகள் நிறைமாத கர்ப்பிணிப் பெண்களுக்கு உகந்தது அல்ல என்கிறார்கள். வயிறு சுருங்குதல் அல்லது குழந்தை குறைப்பிரசவத்தில் பிறக்க அது வழிவகை செய்யுமாம்.
ரத்தக்கோளாறு: அதேபோல ரத்தக்கோளாறு இருப்பவர்கள் இதை பயன்படுத்துவதை தவிர்க்கலாம் என்கிறார்கள்.. அதேபோல, சர்க்கரைநோய், உடல்பருமன், இதயக்கோளாறு பிரச்சனை இருப்பவர்கள், ரத்தம் உறைதல் பிரச்சனை இருப்பவர்கள் இதை தவிர்ப்பது நல்லது. அதேபோல, ஆபரேஷனுக்கு தயாராக இருப்பவர்களும் இஞ்சியை தவிர்க்க வேண்டுமாம். காரணம், அதிக ரத்தப்போக்கை இஞ்சி ஏற்படுத்திவிடும் என்பதற்காக இப்படி சொல்கிறார்கள்.. இவர்களை தவிர்த்து அனைவருமே இஞ்சியை அளவோடு எடுத்து கொள்ளலாம்.
ஆனால், இஞ்சி விலை தற்போது அதிகரித்து வருகிறது. ஏற்கனவே அனைத்து காய்கறி விலைகளும் உயர்ந்துள்ள நிலையில், கோயம்பேடு மார்க்கெட்டுக்கு கடந்த சில நாட்களாக இஞ்சி வரத்து குறைந்து விட்டதாம்.. அதனால் விலையும் அதிகரித்து உள்ளது.
கிராக்கி: கடந்த 2 ஆண்டுகளாக உற்பத்தி செய்யப்பட்ட இஞ்சிக்கு போதிய விலை கிடைக்காததால் விரக்தி அடைந்த பெரும்பாலான விவசாயிகள் இஞ்சி உற்பத்தி செய்வதையே நிறுத்திவிட்டனர். இதனால் இஞ்சிக்கு தற்போது கடும் கிராக்கி ஏற்பட்டிருப்பதாகவும், இந்த விலை உயர்வு வரும் நாட்களிலும் தொடர்ந்து நீடிக்கும் என்றும் சொல்கிறார்கள் வியாபாரிகள்.
-
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications