வெறும் இந்த இலை போதும்.. தாய்மை வரம் தரும் "கானா வாழை"..கல்லீரலின் நண்பன் இந்த "கன்றுக்குட்டிப்புல்"

Subscribe to Oneindia Tamil

சென்னை: கானா வாழை பெயரை கேள்விப்பட்டிருக்கீங்களா.. பழங்குடி மக்களுக்கு பெரிதும் துணைபுரிவது இந்த கானா வாழைதான்.. அற்புதமான மூலிகைகளில் ஒன்றுதான் இந்த கானா வாழை..

இந்த இலைகள் பார்ப்பதற்கு முட்டை போல இருக்கும்.. பூக்களோ, புளூ கலரில் இருக்கும். மாவுச்சத்து + புரதச்சத்து + நீர்ச்சத்து என அனைத்துமே தன்னகத்துள்ள வைத்திருக்கும் மூலிகை இதுவாகும்..

Health Benefits of Kaana Vaazhai and Do you know How to use Kana Vaazhai Calf grass

கன்றுக்குட்டிப்புல்: இந்த செடியை பார்த்தாலே, கால்நடைகள் ஆசை ஆசையாக ஓடிப்போய் சாப்பிடுமாம்.. குறிப்பாக கன்றுக்குட்டிக்கு இந்த செடி என்றால் நிறைய பிரியமாம்.. அதனால்தான், இந்த செடியை "கன்றுக் குட்டிப்புல்" என்றுகூட சொல்வார்கள்.

அதாவது, இளங்கன்றுக் குட்டிகள் தாய்ப்பாலை மறக்க வேண்டும் என்பதற்காக, கன்றுக்குட்டிகளுக்கு இந்த செடியை உணவாக தருவார்களாம். அன்றைய காலங்களில், காய்ச்சல் வந்தாலே, இதைதான் பயன்படுத்துவார்களாம்.. ஒரு கைப்பிடி இலையை நீரில் போட்டு, கொதிக்க வைத்து, சிறிது மிளகு சேர்த்து குடித்தால் எப்பேர்ப்பட்ட காய்ச்சலும் பறந்துவிடும். இதனால் வயிற்றுள்ள புண்களும் ஆறும்..

மகளிர் நலன்: பெண்களுக்கு இந்த மூலிகை மிகவும் பயன்தர தக்கது.. வெள்ளைப்படுதல் பிரச்சனைக்கு, கானா வாழை இலை தீர்வு தருகிறது.. மாதவிடாய் சமயங்களில் அதிக உதிரப்போக்கு இருந்தாலும், இந்த கானா வாழையை சமையலில் சேர்த்து கொள்ளலாம். இந்தக்கீரையை பருப்பு சேர்த்து சமைத்து சாப்பிடலாம்.. சிலர் இதன் இலைகளை, பஜ்ஜி செய்தும் சாப்பிடுவார்கள்.. இந்த கீரையுடன் தூதுவேளைக்கீரையையும் சேர்த்து சமைத்து சாப்பிட்டால், மலச்சிக்கல் பிரச்சினை தீரும்..

பெண்களின் மார்பகத்தில் கட்டிகள், வீக்கம், ஏதாவது ஏற்பட்டுவிட்டால், கானா வாழையின் செடியை அரைத்து பற்று போடுவார்கள். வாத நோய்களுக்கு இந்த கானா வாழை சிறந்தது. பால்வினை நோயால் பாதிக்கப்பட்ட ஆண்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளை சரி செய்வதில், இந்த கானா வாழைக்கு பெரும் பங்கு உள்ளது.

பிள்ளைப்பேறு: இல்லற இன்பத்தை வாரி வழங்கக்கூடிய கீரை இதுவாகும்.. பிள்ளைப்பேறு இல்லாதவர்களுக்கு கானா வாழை கைக்கொடுக்கும்.. ஒரு டம்ளர் நீரில், இந்த மூலிகையை போட்டு, அதனுடன் தூதுவளைப்பூ, முருங்கைப்பூ சேர்த்து சில நிமிடங்கள் கொதிக்க வைத்துக் காய்ச்சி சூடான பாலில் பனங்கற்கண்டுடன் கலந்து குடித்தால், குழந்தைப்பேறு உண்டாகும் என்பார்கள். ஆண்கள் 40 நாள்களுக்கு தொடர்ந்து குடித்து வந்தால், தாது பலம் உண்டாகும்.

Health Benefits of Kaana Vaazhai and Do you know How to use Kana Vaazhai Calf grass

இந்த கானா வாழையின் கீரையுடன், கொட்டைப்பாக்கு சேர்த்து அரைத்து சாப்பிட்டாலும், தாம்பத்யம் தழைக்கும்.. அல்லது இந்த சாற்றில் கசகசாவை ஊற வைத்து அரைத்து தேன் விட்டு சாப்பிட்டு வந்தாலும் தாம்பத்யம் சிறக்கும். அல்லது, கானா வாழையை, முருங்கைப்பூ, துவரம்பருப்பு போன்றவற்றை நெய் சேர்த்து, கூட்டு போல 21 நாள்கள் சாதத்துடன் சாப்பிட்டு வந்தாலும், தாம்பத்யம் சிறக்கும்..

சிறுநீரகம்: ரத்தத்தை சுத்தப்படுத்துவதில் கானா வாழைக்கு தனி இடம் உண்டு.. கல்லீரல், நுரையீரல், சிறுநீரகம் போன்ற முக்கிய உறுப்புகளுக்கு பலம் தரக்கூடியது.. இதனால், சிறுநீர்ப் பாதையிலோ அல்லது நுரையீரலிலோ எந்த தொற்றுக்கள் இந்தாலும், கானா வாழை அவைகளை நீக்கி செய்துவிடுகிறது.. இந்த இலைகளை சாறு போல எடுத்து, தண்ணீருடன் சேர்த்து வாய் கொப்பளித்து வந்தால், வாயிலுள்ள கிருமிகள் அகலும்.. பல் ஈறுகளுக்கும் நன்மை தரக்கூடியது..

இந்த இலையை மட்டும், மஞ்சள் சேர்த்து அரைத்து புண்கள் மீது தடவினால், எப்பேர்ப்பட்ட புண்களும், காயங்களும் ஆறிவிடுமாம்.. முகப்பருக்களுக்கும் இதை பயன்படுத்தலாம் என்கிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+