யூரிக் ஆசிட்டை கன்ட்ரோல் பண்ணும் காசினி கீரை.. கிட்னி கல்லை வெளியேற்றும் தங்க மூலிகை.. கடவுளின் வரம்
சென்னை: 1OO வருடங்களுக்கு முன்பிருந்தே பயன்படுத்தி வரும் காசினி கீரைகளின் மகத்துவம் என்னென்ன தெரியுமா? காசினி கீரையை உணவில் அடிக்கடி சேர்த்து வருவதால், தீரக்கூடிய நோய்கள் என்னென்ன தெரியுமா? இதனை சுருக்கமாக இங்கே பார்க்கலாம்.
கீரைகளில் எத்தனையோ வகைகள் இருந்தாலும், ஒரு குறிப்பிட்ட காலத்தில் மட்டுமே கிடைக்கக்கூடியதுதான் இந்த காசினிக்கீரைகள்.. பார்ப்பதற்கு முள்ளங்கி கீரையை போலவே இந்த காசினி கீரை இருக்கும்..

வகைகள்: இதன் இலை மட்டுமல்லாமல் வேர்ப்பகுதிகளும் மருத்துவ குணம் கொண்டவை.. காசினிகளில், கொம்புக் காசினி, சீமைக் காசினி, வேர்க் காசினி என்றெல்லாம் பல்வேறு வகைகள் உள்ளன.. கானாம்கோழிக் கீரை என்றும் இதனை சொல்வார்கள். அதாவது, கானாம்கோழி கீரை என்பதுதான் மருவி, காசினி கீரையாகிவிட்டதாம்..
கல்லீரல் நோயை குணப்படுத்துவதற்காக சீனர்கள், இந்த காசினிக் கீரையைதான் அதிகம் பயன்படுத்தினார்களாம். அதிக சத்துகளை உள்ளடக்கியதாகவும் மருத்துவப் பண்புகளைக் கொண்டதாகவும் திகழும் இந்த காசினி கீரையில், வைட்டமின் A, B, C, மற்றும் தாது உப்புகள், கால்சியம், பாஸ்பரஸ் இரும்புச்சத்துக்கள் உள்ளன.
வேதிப்பொருட்கள்: காசினிக் கீரையில் இனுலின், லாக்டுசின், குமாரின், சாப்போனின், டானின், பிளேவோனாய்டுகள் மற்றும் ஆல்கலாய்டுகள் அதிகம் உள்ளன.. இந்த தாவர வேதிப் பொருட்கள்தான் நோய்கள் தீர உதவுகின்றன.
இந்த காசினிக்கீரை அடிக்கடி கிடைக்காது என்பதால், பவுடராக வீட்டில் தயாரித்து வைத்து கொள்ளலாம். இந்த கீரையை சுத்தம் செய்து நன்றாக கழுவி, நிழலில் உலர்த்தி காயவைத்து தூள் செய்து கொள்ளலாம். அல்லது காசினிகீரை பொடி நாட்டு மருந்து கடைகளிலேயே கிடைக்கிறது.
இன்சுலின் சுரப்பு: இன்சுலின் சுரப்பை சுரக்க செய்வதால், சர்க்கரை நோயாளிகளுக்கு சிறந்த தேர்வாக காசினி கீரைகள் உள்ளன. இந்த பொடியை நீரிழிவு நோயாளிகள் காலை நேரத்தில் குடித்து வருவதால் நீரிழிவு கட்டுப்படும்.. அல்லது இந்த பொடியுடன் நெய் அல்லது நல்லெண்ணெய் விட்டு பிசைந்து சாப்பிடலாம்.

அதேபோல, சர்க்கரை நோயாளிகளுக்கு உடலில் புண்கள் வந்தால், இந்த காசினி கீரையை விழுதாக அரைத்து புண்களின் மீது பற்று போட்டு கட்டுவதால், புண்கள் விரைந்து ஆறும். அல்லது இந்த கீரையின் சாறினை, புண்களின் மீது தடவினாலும், புண்கள் விரைவில் ஆறிவிடும். காயங்களை ஆற்றக்கூடிய சக்தி இந்த காசினிக்கு உண்டு.
நோய் எதிர்ப்பு சக்தி: ரத்தத்தை சுத்தப்படுத்தி நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கிறது இந்த காசினி கீரைகள்.. கால்சியம் நிறைந்து காணப்படுவதனால் பற்களின் உறுதியை மேம்படுத்துகிறது.. முக்கியமாக உடலில் அதிகமாக உற்பத்தியாகும் யூரிக் அமிலத்தை கட்டுப்படுத்தி உடல்வலியை போக்குகிறது.
கல்லீரல், சிறுநீரகம், இதயம் சம்பந்தமான பிரச்சனைகளையும் குணப்படுத்தக்கூடியது இந்த காசினி கீரைகள். காசினி கீரையுடன் சீரகம், மஞ்சள் சேர்த்து கஷாயம் போல காய்ச்சி குடித்தால் கல்லீரல் வீக்கம் குறையும்... அதேபோல,சிறுநீரகத்தில் கற்கள் இருந்தாலும் கரைந்து வெளியேறும்.. காசினிக் கீரையை தொடர்ந்து உணவில் சேர்த்து வருபவர்களுக்கு சிறுநீரக கற்கள் உண்டாவதில்லை.
உடல் எடை: வெள்ளைப்படுதல், அதிக உதிரப்போக்கு போன்ற தொந்தரவு இருந்தால், காசினிக் கீரையை பெண்கள் கட்டாயம் உணவில் சேர்க்க வேண்டும். அல்லது காசினி பவுடருடன் தேன் கலந்து 21 சாப்பிட்டாலும் நிவாரணம் கிடைக்கும்.
உடல் எடையை குறைக்க முயற்சிப்பவர்களுக்கு பெஸ்ட் சாய்ஸ் இந்த கீரைகள். இதனால் உடலிலுள்ள தேவையற்ற நீர் வெளியேறிவிடும். காசினிக் கீரை பொடியை, இரவு நேரங்களில் வெந்நீர் அல்லது பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால், உடலில் உள்ள கெட்ட நீர் அனைத்தையும் வெளியேற்றிவிடும். அதுமட்டுமல்ல, இந்தக் கீரையில் உடல் எடையை குறைக்கும் சத்துக்கள் நிறைந்துள்ளது. இதை எவ்வளவு சாப்பிட்டாலும் அதிக கலோரிகள் உங்களுக்கு கிடைக்காது.
கடவுளின் வரம்: காசினிக் கீரைக்கு உடலில் உள்ள எல்லா நோய்களையும் நீக்கும் அற்புத ஆற்றல் இருப்பதால், இதை கடவுளின் கீரை என்பார்கள்.. கடவுளின் வரம் என்றும் அழைக்கிறார்கள். போண்டா கீரை என்றும் சொல்வார்கள். காரணம், வடஆற்காடு மாவட்டத்தில், இந்த கீரையை பயன்படுத்தி விற்பனை செய்யப்படும் போண்டாக்கள் மிகவும் பிரபலமானவையாகும்.
-
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மீண்டும் வந்த அதே வரலாற்று சிக்னல்.. தங்கம் விலை மிகப்பெரிய அளவில் சரிகிறது.. இப்போ வாங்கலாமா? -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா












Click it and Unblock the Notifications