பெங்களூரில் ஐடியில் வேலை செய்யும் பெண்ணுக்கு மாதம் 71 ஆயிரம் செலவு.. வீடியோ பாருங்க

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: பெங்களூரில் ஐடி நிறுவனத்தில் வேலை செய்யும் பெண் ஒருவர் மாதம் 71000 ரூபாய் செலவு செய்வதாக செலவு பட்டியலை வீடியோ உடன் வெளியிட்டுள்ளார். உண்மையிலேயே பெங்களூரில் இவ்வளவு செலவாகுமா என்று தமிழ்நாடு இளைஞர்கள் பலர் வாயடைத்து போய் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள். ஒரு சராசரியான வாழ்க்கை செலவே பெங்களூரில் இவ்வளவு என்றால், குடும்பமாக வாழ்பவர்கள் எவ்வளவு செய்ய வேண்டியதிருக்கும் என்றும் கேள்வி எழுப்புகிறார்கள். அந்த இளம் பெண் போட்ட பட்டியலை இந்த பதிவில் விரிவாக பார்ப்போம்.

இந்தியாவின் காஸ்ட்லி நகரங்களின் வரிசையை எடுத்தால் நிச்சயம் பெங்களூரு இருக்கும். மும்பை, டெல்லிக்கு அடுத்தபடியாக காஸ்ட்லி நகரம் என்றால் அது பெங்களூர் தான். அங்கு வாழ்க்கை செலவுகள் என்பது நடுத்தர வர்க்கத்தினருக்கு மிக அதிகம். ஐடி வேலையில் சேர விரும்பும் இளம் பெண்களின் விருப்பமான நகரம் என்றால் பெங்களூர் தான்.. ஏனெனில் வாழ்க்கை முறை, சம்பளம் எல்லாம் நினைத்தே பார்க்க முடியாததாக இருக்கும். பெங்களூரில் கிளைமேட்டும் அருமையாக இருக்கும். அதுவும் பலருக்கு பெங்களூரை பிடிக்க காரணமாக உள்ளது.. எனினும் நடைமுறையில் பெங்களூரில் வாழ்க்கை செலவு என்பது சென்னைவாசிகளே கூட நினைத்தே பார்க்க முடியாத அளவிற்கு அதிகமாக இருக்கிறது.

Watch the video A woman working in the IT sector in Bangalore spends 71 000 per month

பெங்களூரில் ஐடி நிறுவனத்தில் வேலை செய்யும் அஞ்சலி என்ற பெண் , மாதம் ₹71,000 செலவு செய்திருக்கிறார். கடந்த மே மாதம் தனக்கு ஆன செலவை பட்டியிலிட்டு வீடியோ போட்டிருக்கிறார் அந்த இளம் பெண் பொறியாளர் அஞ்சலி. அப்படி என்னப்பா ஒரு பெண்ணுக்கு செலவாச்சு என்றால், வாடகை தான் அதிகப்படியான செலவு..

அந்த இளம் பெண் ஐடி ஊழியர் அஞ்சலி தங்கியுள்ள வீடு 1 BHK வீடு ஆகும். அதன் வாடகை ₹28,000 என்று கூறியுள்ளார். தண்ணீர் மற்றும் மின் கட்டணம் அவர் ஒருவருக்கே மாதம் 10000 ரூபாய் வந்துள்ளதாம். காலை மற்றும் மதியம் பெரும்பாலும் ஆபீஸில் சாப்பிட்டுவிடுவேன். இரவில் சமையல் செய்து சாப்பிட ₹3,000 வந்துள்ளது. அப்படி சமையல் செய்து சாப்பிட மளிகை செலவு ₹4,000 என்கிறார். ஜிம், வைபை, ஒடிடி சப்ஸ்கிரிப்சன் செலவு 3000 ரூபாய் என்று கூறியுள்ளார். வார இறுதியில் ஊர் சுற்றுவது, ஷாப்பிங் செல்வது (பார்டி போக மாட்டேன்) என்று மாதம் 15000 செலவாகிறது.

மாதம் ஒரு முறை 3 அல்லது 4 நாள் (ஊட்டி, கொடைக்கானல், கோவா, கூர்க் மாதிரி) லாங்க் டிரிப் போய் வர 15000 முதல் 20000 ஆகிறதாம்... ஆக மொத்தம் மாதம் ₹71,000 செலகிறது என்று அஞ்சலி கூறியுள்ளார். அதேநேரம் இந்த செலவு அதிகம் என்று அஞ்சலி புலம்பவில்லை..மாறாக பெங்களூர் மாதிரியான பெரிய நகரத்தில் வசிக்கும் எனக்கு இந்த செலவு ஆகத்தான் செய்யும் என்றும் ஆமோதிக்கிறார்.

இதுபற்றி கருத்து தெரிவித்துள்ள நெட்டிசன் ஒருவர், நான் பெங்களூர் தான். 1bhk பிரீமியம் அடுக்குமாடி வீட்டில் தான் இவ்வளவு வாடகை இருக்கும். இதர செலவுகள் எல்லாம் சரி தான்.. மாதம் ஒரு முறை நான்கு நாட்கள் லாங்க் டிரிப் எல்லாம் பெரும்பாலும் யாரும் போக மாட்டார்கள். மற்றபடி அவ்ளோ ஆகும் தான், ஆனால் இன்னும் இதுல நிறைய பணத்தை மிச்சம் பண்ணலாம் என்று கூறியுள்ளார்.

இன்னொரு நெட்டிசன் வெளியிட்ட பதிவில், உங்க மாத வருமானத்தில் இவளோ தான் வாடகை ஒரு லிமிட் வச்சுகணும். மாத வருமானத்தில் 20%க்கு மேல் வீட்டு வாடகைக்கு செலவிடக்கூடாது என்று கூறியுள்ளார். பல நெட்டிசன்கள் இவரது வீட்டு வாடகையே எங்கள் சம்பளம் கிடையாது.. அதில் குடும்பமே நடத்துகிறோம் என்று குமுறுகிறார்கள். சிலர் இவர் அவுட்டிங் போகும் செலவு தான் என் மாத சம்பளம் என்றும் குமுறுகிறார்கள். வீடியோவை பாருங்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+