குப்பைமேனி தழை.. நரம்புகள் வலுப்பட, ஆஸ்துமா விலக.. ஆரோக்கியம் தரும் குப்பை மேனி இலை.. மூலிகை தங்கம்
சென்னை: மூலிகை தங்கம் என்று சொல்லக்கூடிய குப்பை மேனி இலைகளின் மருத்துவ குணங்கள் என்னென்ன தெரியுமா? நரம்புகளை வலுப்படுத்த குப்பை மேனி இலையை எப்படியெல்லாம் பயன்படுத்தலாம்? நரம்புகள் பலப்படுத்த எப்படி பயன்படுத்தலாம்?
குப்பைகளில் வளரும் குப்பைமேனி இலைகளில் அகாலிபமைடு, காலிபோல் அஸிடேட், அகாலிபைன், டிரைஅஸிட்டோனமைன், கெம்பெரால் போன்ற வேதிப்பொருட்கள் உள்ளன.. அதனால்தான், மூலநோய் முதல் ஆஸ்துமா வரை குணப்படுத்தும் தன்மை இந்த குப்பை மேனி இலைகளுக்கு உண்டு.

ரத்தத்தை சுத்திகரிக்க செய்யும் தன்மை குப்பைமேனி இலைகளுக்கு இருக்கின்றன.. எனவே, தினமும் 2 மிளகை இந்த இலையுடன் சேர்த்து சாப்பிட்டு வரலாம். குப்பைமேனி இலைகளை தூள் செய்து வைத்து கொண்டு, விளக்கெண்ணைய்யுடன் கலந்து சாப்பிட்டால் வயிற்றுப்புழுக்கள், குடலில் உள்ள கிருமிகள் வெளியேறிவிடும். குழந்தைகளுக்கு வயிற்றில் பூச்சிகளை வெளியேற்ற, இந்த குப்பை மேனி இலைகளிலிருந்து சாறு எடுத்து, 1 ஸ்பூன் தரலாம்.
குப்பைமேனி சாறு: நிமோனியா நோயாளிகளுக்கு குப்பைமேனி இலைகளில் இருந்து எடுக்கப்படும் சாறுகளின் மூலம் ஆயுர்வேதத்தில் சிகிச்சை அளிக்கப்படுகிறது... அதேபோல, சிறுநீர் கழிப்பதில் ஏற்படும் அடைப்பு நிலைக்கு சிகிச்சை தருவதிலும், இந்த குப்பை மேனி சாறு பயன்படுகிறது. உடல் சூடு பாதிப்பு உள்ளவர்கள் குப்பைமேனி இலையை விழுதாக அரைத்து, அதில் எலுமிச்சம் பழச்சாறு கலந்து உடலில் தடவினால், உஷ்ண கொதிப்பு அடங்கும்.
தலைவலி இருந்தால், குப்பைமேனியை அரைத்து சாறு எடுத்து நெற்றியில் பற்று போல போட்டால் தீர்வு கிடைக்கும். மலச்சிக்கல் இருந்தாலும் இந்த இலைச்சாற்றை சுடுநீரில் கலந்து குடிக்கலாம். அதேபோல, மூட்டு வலி, முழங்கால் வலி உள்ளவர்கள், குப்பைமேனி இலையை உணவில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் நரம்புகள் வலுப்படுவதுடன், கால் வலி, மூட்டுவலியும் மெல்ல மட்டுப்படும்.
தொண்டை வலி: தொண்டை வலி, தொண்டைக்கட்டு, தொண்டை கமறல் இருந்தால், குப்பைமேனி சாற்றினை பிழிந்து, சுண்ணாம்பு கலந்து பூசுவார்கள்... இதனால் தொண்டைக்கட்டு சரியாவதுடன், சளி, இருமல், கோழைகளும் வெளியேறிவிடும். ஆஸ்துமாவையே குணப்படுத்தும் சக்தி இருப்பதால், ஆயுர்வேத சிகிச்சையில் குப்பைமேனிக்கு தனி இடமுண்டு.இந்த இலைகளை உலரவைத்து பொடித்து சூரணம் போல தேனில் கலந்து சாப்பிட்டால் சளி இருமல் தொந்தரவும் விலகும்..
மூலநோய் பாதிப்பு உள்ளவர்கள், சின்ன வெங்காயம், வாழைப்பூவை இந்த குப்பைமேனி இலைகளுடன் சேர்த்து அரைத்து, 3 நாட்கள் சாப்பிட்டால் மூலநோய் குணமாகும்.. ரத்த மூலமும் கட்டுக்குள் வரும்.
சரும பாதுகாப்பு: சரும பாதுகாப்பை தரக்கூடிய இந்த குப்பை மேனி இலைகளை, பெண்கள் கட்டாயம் பயன்படுத்த வேண்டும். காரணம், சிலருக்கு முகத்தில் முடி வளரும்.. இதற்கு குப்பை மேனியுடன், கஸ்தூரி மஞ்சளையும் சேர்த்து பூசினால், பூனை முடிகள் உதிர்ந்துவிடும்.. உடலில் காயங்கள், ரணங்கள் இருந்தால், குப்பை மேனி எண்ணெய்யை பயன்படுத்தலாம். முழங்கால், மூட்டு வலிகளும் இந்த எண்ணெய்யை பயன்படுத்தலாம். குழந்தைக்கு காது வலி இருந்தால், இந்த இலைகளின் விழுதை வலி உள்ள இடத்தில் பற்றுபோடலாம்.
எத்தனை நன்மைகளை தந்தாலும், இதுபோன்ற மூலிகைகளை உள்ளுக்குள் மருந்தாக எடுத்து கொள்ளும்போது, டாக்டர்களின் ஆலோசனையை பெறுவது நல்லது.
பேசிலஸ் சப்டிலிஸ், எஸ்கெரிச்சியா கோலி, சூடோமோனாஸ் ஏருகினோசா போன்ற பாக்டீரியா வகைகளை எதிர்த்து போராடக்கூடியது இந்த குப்பைமேனி இலைகள். மேலும், சருமத்தில் ஏற்படும் வைரஸ் மற்றும் பூஞ்சைத் தொற்றுகளையும் நீக்கும் சக்தி குப்பைமேனிக்கு உள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
எனவே சிறிது கல் உப்பை, குப்பைமேனியில் சேர்த்து அரைத்து உடம்பெல்லாம் பூசி 15 நிமிடங்கள் கழித்து குளித்து வந்தால் சொறி, சிரங்கு நீங்குவதுடன், சருமத்தின் நிறமும் மாறி பொலிவை தருமாம்.. புண்கள், காயங்கள், அல்லது தீக்காயங்கள் இருந்தாலும், இந்த குப்பைமேனி இலையை மஞ்சளுடன் சேர்த்து அரைத்து பற்று போல பூசினால் சிறந்த மருந்தாக அமையும்.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications