வெறும் வயிற்றில் இதை சாப்பிடுங்க.. நீரிழிவு நோயாளிகளே இதை நோட் பண்ணுங்க.. வெள்ளை பூக்களின் மகத்துவம்
சென்னை: வாழையை போலவே, தென்னையை போலவே, முருங்கையை போலவே, வேம்புவை போலவே, உணவாகவும், மருந்தாகவும் பயன்படுவது மாமரம் ஆகும். சர்க்கரை நோயாளிகளின் அருமருந்தென்றால், அது மாவிலையும், மாம்பூக்களும்தான் என்கிறார்கள்.. இதற்கு என்ன காரணங்கள்?
மாம்பழத்தை தவிர, மாமரத்தின் வேர்கள், இலைகள், பூக்கள் என அத்தனையும் பயன்தரத்தக்கது.. இந்த இலையில், வைட்டமின் C, A, B போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன.. ஆனால் நாம், வீட்டு வாசற்படியிலேயே தோரணத்துடன் இந்த இலைகளை நிறுத்திவிடுகிறோம்.. தென் கிழக்கு ஆசியாவிலோ, இந்த மா இலைகளை சாப்பாட்டில் ஒரு உணவாகவே சாப்பிடுகிறார்களாம்..

சிறுநீரக கற்கள்: மாவிலைகள் சிறுநீரக கற்களையும், பித்தப்பை கற்களையும் கரைக்க கூடியது.. இதன் கொழுந்து இலைகளில், டானின் என்ற மூலப்பொருளை கொண்டு, சர்க்கரை நோய்க்கு மருந்தும் தயாராகிறது.. எனவே, நீரிழிவு நோயாளிகள் இந்த இலைகளை காயவைத்து, தூள் செய்து, டீ போட்டுக் குடிக்கலாம்.. அல்லது, இரவு முழுவதும் தண்ணீரில் ஊறவைத்து, மறுநாள் காலை இந்த நீரை வடிகட்டி குடிக்கலாம். இதனால், உடலிலுள்ள நச்சுக்கள், கழிவுகள் நீங்கி, வயிறு சுத்தமாகும்.
நுரையீரல் உட்பட உள்ளுறுப்புகளை பலப்படுத்துவல் பெரும்பங்கு இந்த மாவிலைகளுக்கு உண்டு.. ஏதாவது ஒருவிதத்தில், கொழுந்து இலைகளை சாப்பாட்டில் நாம் சேர்த்து வந்தாலே போதும், உயர் ரத்த அழுத்தம் உட்பட பல பிரச்சனைகள் நீங்கும்.
சரும பாதுகாப்பு: சருமத்துக்கு மிகச்சிறந்த பாதுகாப்பை தரக்கூடியது இந்த இலைகள்.. காயங்களுக்கு மருந்தாகவும் போடலாம்.. உடலில் நெருப்பு புண்கள் ஏற்பட்டுவிட்டால், இந்த இலையை எரித்து, அதன் சாம்பலை தடவினால், எரிச்சல் தணியும்.. குளிக்கும் நீரில், வேப்பிலையை போலவே, இந்த மா இலைகளையும் போட்டு ஊறவைத்து குளிக்கலாம்..
இந்த இலைகளை நிழலில் காயவைத்து தூளாக்கி வைத்து கொண்டால், தேவைப்படும்போது பயன்படுத்திக் கொள்ளலாம்.. வயிற்றுப்போக்கு வந்தாலும், இந்த தூளை சாப்பிடலாம்..இருமல், சளியால் அவதிப்பட்டாலும் சாப்பிடலாம்..
மாம்பூக்கள்: மாம்பூக்களிலும் இதே போல மருத்துவ சக்திகள் அடங்கி உள்ளன.. நிறைய ஆன்டி ஆக்ஸிடன்ட் உள்ளதால், எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்து, நோய்கள் நம்மை அண்டவிடாமல் தடுக்கிறது.. வாய்ப்புண்களுக்கு இந்த மாம்பூக்கள் தீர்வை தருகின்றன.. அதேபோல, இந்த பூக்களை நீரில் கொதிக்க வைத்து, வடிகட்டி குடித்து வந்தால், பல்வலி நீங்கும்.. பல் ஈறுகளும் பலப்படும்..
சர்க்கரை நோயாளிகளுக்கு இந்த மாம்பூக்கள் பேருதவி புரிகின்றன.. இன்சுலின் செயல்பாட்டை ஊக்கப்படுத்துவதில் பெரும்பங்கு இந்த பூக்களுக்கு உண்டு.. மாம்பூக்களையும் பொடி செய்து வைத்து கொண்டால் பல கோளாறுகளை தீர்க்க உதவும்.. உதாரணமாக, இந்த பூக்களின் பொடியை மோரில் கலந்து சாப்பிட்டால், வாய்ப்புண், வயிற்றுப்புண்கள் மெல்ல ஆறிவிடும். வயிற்றுப்போக்கு என்றாலும், இந்த பொடி தீர்வை தந்துவிடும்.
வெறும் வயிற்றில்: மாவிலையை தண்ணீரில் ஊறவைத்து மறுநாள் காலை வெறும் வயிற்றில் குடிப்பதுபோலவே, மாம்பூவின் மாம்பூக்களையும் பொடி செய்து வைத்து கொண்டு, காலை நேரத்தில் நீரில் கலந்து குடித்து வந்தால், சர்க்கரையின் அளவு சீராக இருக்கும்.. குடல் பகுதிகள் பலப்படும். சிலருக்கு மாம்பூக்கள் அலர்ஜியை தந்துவிடும் என்பதால், டாக்டரின் அறிவுரையின் பேரில் இதை சாப்பிடுவது நல்லது.
வீட்டில் கொசுத்தொல்லை இருந்தால், மாம்பூக்களை நெருப்பிலிட்டால், அந்த புகைக்கு கொசுக்கள் அண்டாது.. அதேபோல, நம்முடைய தலையில் நீர்கோர்த்து கொண்டால், அல்லது தலைபாரம் இருந்தால், இந்த புகையை புகைத்தாலே போதும்.
மாவிலைகள்: நிவாரணம் கிடைக்கும். கோவில்களில் வழங்கப்படும் தீர்த்தங்களும்.. இந்த மாவிலையில்தான் வழங்கப்படுகின்றன.. மாவிலையின் மருத்துவ குணம் அபரிதிமானது என்பதால்தான், தமிழர்கள் வாழ்வில் அது தவிர்க்க முடியாததாகிவிட்டது.
(இது பொதுவான தகவல்களை அடிப்படையாக கொண்டது. உங்கள் பிரச்சனைக்கு மருத்துவரை அணுகுவதே சிறந்தது. இந்த தகவலுக்கு "One India Tamil News" பொறுப்பேற்காது)
-
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்?












Click it and Unblock the Notifications