Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

முடக்கத்தான் கீரை.. மூட்டுவாதத்தை முறித்து வேரறுக்கும் "முடக்கறுத்தான்" கீரை.. மலைக்க செய்யும் இலை

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதென்ன முடக்கத்தான் கீரையா? முடக்கறுத்தான் கீரையா? இரண்டுமே சரிதான்.. மூட்டுகளை காப்பதற்காக ஒரு உணவு இருக்கிறது என்றால், அது இந்த முடக்கத்தான் கீரைதான்.

முடக்கு வாதத்தை நீக்கக்கூடிய சக்தி இந்த கீரைக்கு உள்ளதாம்.. அதாவது, முடக்குகளை வேரறுக்கும் தன்மை இருப்பதால் இது முடக்கத்தான்கீரை என்ற பெயர் மருவி வந்துவிட்டதாம். இந்த முடக்கத்தான் காய்கள் பலூன் போல இருக்கும்.. அதை அழுத்தினால் பட்டாசு போல சத்தம் வரும் என்பதால், இதை சிறுவர்கள் பட்டாசுக்காய் என்றும் சொல்வார்கள்..

Health benefits of Mudakathan Keerai and Do you know Excellent Medicinal Properties rich in the Mudakathan Keerai

முடக்குவாதம்: இந்த கீரை கை, கால்களின் முடக்குவாதத்தை போக்கக்கூடியது.. 2 எலும்புகளுக்கு இடையில் இருக்கும் சவ்வு பகுதியை வளர வைக்கும் தன்மை உடையது..

சிலருக்கு 40 வயதுக்கு மேல், இடுப்பு, பாதம், கை, கால் முட்டிகளில் அதிக வலி இருக்கும். ருமாட்டாயிட் ஆர்த்ரைட்டிஸின் ஆரம்ப நிலையாகவும் இருக்கலாம்.. இந்தியாவில் 65 சதவிகித மக்களுக்கு இந்த மூட்டு வலி பாதிப்பு உள்ளது.. இதற்கெல்லாம் சிறந்த நிவாரணம் முடக்கத்தான் கீரையாகும்.. மூட்டுவலி பிரச்சனை இருந்தால், தொடக்கத்திலேயே இந்த கீரையை எடுத்து கொண்டால், பூரண சுகமாகும்..

இருமல் சளி: முடக்கறுத்தான் இலைகளை வெயில் படாமல் நிழலில் உலரவைத்து பொடியாக்கி வைத்து கொண்டால், இருமல் இருக்கும்போது பயன்படுத்தலாம்... சூடான சாதத்தில் நல்லெண்ணெய் உப்பு, முடக்கறுத்தான் பொடி சேர்த்து கலந்து சாப்பிடலாம்.. அல்லது இளஞ்சூட்டு நீரில் இந்த பொடியை கலந்து குடித்தால் இருமல் கட்டுப்படும் குழந்தைகளுக்கும் தேனில் கலந்து நாவில் தடவி விடலாம்.

முடக்கத்தான் இலைகளை கைப்பிடி அளவு கொதிக்க வைத்து, க்ரீன் டீ போல் குடித்தால் உடல் சோர்வு மறையும்.. இது லேசாக கசப்பு இருக்கும் என்பதால், தேன் சேர்த்து குடிக்கலாம்.. நரம்புகளை பலப்படுத்தக்கூடியது. முடக்கத்தான் கீரையில் வைட்டமின்களும், தாது உப்புகளும் நிறைய உள்ளன.. இந்த கீரையை சாப்பிடுவதால், மலச்சிக்கல், மூல நோய்கள், போன்ற நோய்கள் குணமாகும்..

தோல் நோய்கள்: தோல் நோய்களுக்கு, முடக்கத்தான் கீரை மிகச்சிறந்த மூலிகை என்று சொல்லலாம்.. சொறி, சிரங்கு என தோலை பாதிக்கக்கூடிய பிரச்சனைகள் வந்தால், இந்த முடக்கத்தான் கீரையை நன்கு அரைத்து பற்று போட்டால் தீர்வு கிடைக்கும். உடலில் காயங்கள் ஏதாவது ஏற்பட்டாலோ அல்லது வலி அதிகமாக இருந்தாலோ, நல்லெண்ணெயில் இந்த இலைகளை காய்ச்சி, அந்த எண்ணெயை அடிப்பட்ட இடத்தில் தடவினால் வலி குறையும்.
காது வலி பிரச்சனைகள் இருந்தால், முடக்கத்தான் கீரையை நன்றாக அரைத்து சாறு எடுத்து, ஒருசில துளிகள் மட்டும் காதுகளுக்குள் விட்டால் காது வலி நீங்கும் என்பார்கள்.

முடக்கத்தான் கீரைகள்: மாதவிடாய் பிரச்சனைகளுக்கு தீர்வாக உள்ளது இந்த முடக்கத்தான்.. முடக்கத்தான் கீரையை அரைத்து, குழந்தை பெற்ற பெண்களுக்கு அடிவயிற்றில் பூசி வந்தால் கருப்பையில் உள்ள நச்சுக்கள் வெளியேறும் என்பார்கள்.. இன்றும்கூட, முடக்கத்தான் இலைகளை அரைத்து பற்றுப்போடும் வழக்கம் கிராமப்புறங்களில் உள்ளது. வாய்வுத் தொல்லையுடையவர்கள் முடக்கத்தான் கீரையை சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும்.

இந்த கீரையை அதிகம் சேர்த்து கொண்டால், உடம்பில் வாதத்தன்மை கட்டுப்பட்டு, மூட்டு வலியை போக்கும்... முடக்கத்தான் இலைகளை ஆமணக்கு எண்ணையில் நனைத்து, மூட்டு பகுதிகளிலும் தேய்த்து வந்தாலும், நிவாரணம் கிடைக்கும்.

ஜலதோஷம்: முடக்கத்தான் இலையை விளக்கெண்ணெய்யில் வதக்கி, அதனை கட்டி வந்தால் மூட்டு வலி வீக்கம் குறையக்கூடும்.. வலியும் குறையும். ஜலதோஷத்தினால் தலைவலிகள் வந்தால், இந்த முடக்கத்தான் இலைகளை கசக்கி வெந்நீரில் போட்டு ஆவி பிடித்தால், தலைவலி சரியாகும்.

முடக்கத்தான் கீரையை வைத்து, நிறைய சமையல்கள் செய்கிறார்கள்.. முடக்கத்தான் தோசை, முடக்கத்தான் சட்னி, முடக்கத்தான் துவையல் இப்படி ஏதாவது ஒன்றை வாரத்தில் 3 நாட்கள் சாப்பிட்டால் மூட்டு வலி குறையக்கூடும். சிலர் இந்த கீரையில் போண்டா, பிரியாணி என்றெல்லாம் செய்வார்கள். அதேபோல, முடக்கத்தான் கீரையை தோசை மாவில் கரைத்து, தோசை செய்யலாம்.. ஆனால், அந்த கீரையை கொதிக்க வைத்து சாப்பிடக்கூடாது.. அப்படி சாப்பிட்டால் அதன் மருத்துவ சத்துக்கள் கொதிப்பில் அழிந்துவிடும்.

தோசை மாவு: முடக்கத்தான் கீரை, சீரகம், வர மிளகாய் மூன்றையும் ஒன்றாக சேர்த்து மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். இதனுடன் அரிசி மாவு, தோசை மாவு, சிறிது உப்பையும் சேர்த்து கரைத்து அரைமணி நேரம் வைத்துவிடவும். தோசை மாவு பதத்திற்கு கரைத்துக்கொண்டு , இதில் தோசை சுட்டு சாப்பிடலாம்.

அல்லது துவையல் செய்யலாம்.. வாணலியில் 1 ஸ்பூன் எண்ணெய், துவரம்பருப்பு சேர்த்து வறுத்து கொள்ள வேண்டும். பிறகு, கீரையையும் எண்ணெயில் சேர்த்து வதக்கி, புளி, மிளகாய் தூள், தனியா தூள், மஞ்சள் தூள், உப்பு, வறுத்த துவரம்பருப்பு, கீரை எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து நைசாக அரைத்தால் துவையல் ரெடி.. அல்லது துவரம் பருப்பு, பாசிப்பருப்பு போன்ற பருப்புகளுடன் சேர்த்து கூட்டு செய்வார்கள்.. இந்த கீரையின் சாற்றினை தனியாக எடுத்து சூப்பாக சாப்பிட்டால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+