முரல் மீன்.. அதிசய நலனை தரும் "ஊசி ஊசி மீனு".. ராமநாதபுர கடலில் முட்டிமோதும் "முரல் மீன்கள்"
ராமநாதபுரம்: ராமநாதபுரம் என்றாலே மீன்கள் ஃபேமஸ்.. அதிலும் முரல் மீன்கள் என்றால், ராமநாதபுரம் பகுதிதான் படுஃபேமஸ்.. அதென்ன முரல் மீன்கள்? இதன் சிறப்பம்சங்கள் என்னென்ன?
ராமநாதபுரம் மாவட்டத்தில், கரைவலையில் முரல் மீன்கள் முட்டிக் கொண்டு வந்தாலே மீனவர்கள் மகிழ்ச்சியில் துள்ளி குதிப்பார்கள்.. அந்த அளவுக்கு அரிதான மீன் இது.
பார்ப்பதற்கு பாம்பு போலவே இருக்கும். சில சமயம், கடல் குதிரை போலவும் இருக்கும்.. மற்ற மீன்களுக்கும், இந்த முரால் மீனுக்கும் உள்ள வித்தியாசமே, இதன் குறுகிய நீண்ட தாடையும், கூரான பற்களும்தான். இதன், மூக்கு குறுகி காணப்பட்டாலும், கூரான பற்கள் நீளமாக நீட்டிக்கொண்டு இருக்கும். கத்தி போல மூக்கு இருக்கும்.. மனித உடலையே துளைத்துவிடும் அளவுக்கு கூர்மையானது..

காயங்கள்: படுவேகமாக படகுகள் சென்றாலோ, அல்லது வெளிச்சம் தென்பட்டுவிட்டாலோ, பயந்துகொண்டு வேகமாக பாய்ந்து சென்றுவிடுமாம்.. அப்படி பாயும்போது, படகில் மனிதர்கள் இருந்தால், அவர்களுக்கு காயங்களையும் இந்த மீன்கள் ஏற்படுத்திவிடும். இப்படித்தான் வியட்நாமில், ஒருசிறுவனின் இதயத்தையே குத்தி கிழித்து சாகடித்து விட்டதாம்.
கடலில் யாராவது நீந்தினாலும், இந்த முரல் மீன் தாக்கிவிடும்.. நம்முடைய தஞ்சை மாவட்ட அதிரம்பட்டினத்தில், மீனவர் ஒருவரை இந்த முரால் மீன் தாக்கியதாக சொல்கிறார்கள். ஆனால், எந்த காரணம்கொண்டும், வேண்டுமென்றே மனிதர்களை இந்த மீன் தாக்குவது கிடையாதாம்.
அரிதான மீன்கள்: அதேபோல, வெயில் அடித்தால்,கடலுக்குள்ளே போய்விடுமாம் இந்த மீன். சாயங்காலம் வெயில் போனதும், அதாவது கடல்நீர் முழுவதுமே குளிர்ந்தவுடன், மெல்ல கரையை நோக்கி வருமாம். அதேபோல, அலை அதிகம் இருந்தாலும், இந்த மீன்கள் வெளியே வருவதில்லையாம். அதனால்தான், இந்த வகை மீன்களை அவ்வளவாக பார்க்க முடிவதில்லை என்கிறார்கள் மீனவர்கள்..
ஆனால், எப்போது கரையில் தட்டுப்பட்டாலும், கிலோ 150 முதல் 170 ரூபாய் வரை இந்த மீன்கள் விற்கப்படுவதால், மீனவர்களுக்கு வருமானத்தை தரக்கூடிய மீன்வகையாக இது இருந்து வருகிறது. விருதுநகர், சிவகங்கை, மதுரை போன்ற பகுதிகளுக்கு, அதிக அளவில் இதை விற்பதற்காக அனுப்பி வைக்க்கப்படுகிறது.
பச்சை கலர்: மெலிதான நீலம் தோய்ந்த பச்சை கலரில் இந்த மீன் இருக்கும்.. இந்த மீனின் எலும்புகள்கூட, பச்சை கலரிலேயே இருக்கும். அதனால்தான், சிலர் இதை சாப்பிட தயங்குவார்கள். ஆனால், இந்த முரல் மீன்கள் உண்மையிலேயே ருசியில் அபாரமானவை..
இதன் குழம்பு தனி சுவையுடன் இருக்கும்.. இந்த மீனை காயவைத்து கருவாடாகவும் பயன்படுத்துவார்கள். வழக்கமாக மீன்களில் அனைத்து சத்துக்களுமே இருப்பதுபோல, இந்த மீனிலும், வைட்டமின் D, புரோட்டீன், கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, ஜிங்க், மக்னீசியம், சோடியம், பொட்டாசியம் என அத்தனை ஊட்டச்சத்துக்களும் உள்ளன.. ஒமேகா-3 அமிலம் அதிகமுள்ள மீன்களில், இந்த முரால் மீனும் ஒன்று.
உடல் எடை: உடல் எடை குறைக்க நினைப்பவர்கள், இந்த மீனை தாராளமாக பயன்படுத்தலாம் என்கிறார்கள். இதயத்துக்கும் நல்லது.. நீரிழிவு நோயாளிகள் இதை சாப்பிட்டு வருவதால், பாதிப்புகள் குறைகின்றன.. ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவும் குறைகின்றன. கால்சியம் அதிகமுள்ளதால், எலும்புகள், பற்களுக்கு உறுதிதரக்கூடியது.
சிலர் இந்த மீனில் தேங்காய்ப்பால் விட்டு செய்வார்கள்.. யாழ்ப்பாணத்தில் தேங்காய்ப்பால் கலக்காமலேயே சுவையுடன் சமைப்பார்களாம். அதனால் அரிதாகவே கிடைத்தாலும், இந்த மீனை சமையலில் தவறவிட்டுவிடக்கூடாது என்கிறார்கள்.
-
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு!












Click it and Unblock the Notifications