ஆட்டுக்கறி பண்றீங்களா? ஆட்டிறைச்சியை வாங்கினால், அதை நோட்டீஸ் பண்ணுங்க..மொத்தமே 5 மணி நேரம்தான் டைம்
சென்னை: இறைச்சியில் நிறைய புரோட்டீன்கள் இருப்பதால், வாரம் 2 நாள் தாராளமாக இறைச்சியை சாப்பிடலாம்.. ஆனால், சரியான இறைச்சியை எப்படி வாங்குவது?
கேரளாவில் கடந்த வரும் ஷவர்மா சாப்பிட்ட, 16 வயது சிறுமி உயிரிழந்தார்.. இப்போது 14 வயது நாமக்கல் சிறுமி இறந்துள்ளார்.. இதற்கெல்லாம் காரணம், இறைச்சியை முறையாக பதப்படுத்தப்படுவதில்லை, வேகவைக்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

இறைச்சிகள்: இது ஓட்டல்களுக்கு மட்டுமல்ல, சில வீடுகளிலும் இந்த கவனக்குறைபாடுகளும் தவறுகளும் அவ்வப்போது நடக்கின்றன.. அதனால், இறைச்சியை வாங்கும்போதே, அந்த விஷயத்தில் கவனம் செலுத்த வேண்டும் என்று அறிவுறுத்துகிறார்கள் மருத்துவர்களும், உணவுத்துறை நிபுணர்களும்.
உதாரணத்துக்கு நீங்கள் ஆட்டுக்கறி வாங்க செல்கிறீர்கள் என்றால், அது ஆரோக்கியமான ஆடாக இருந்தால், வெட்டும்போதே அதன் உடலில் மொத்த ரத்தமும் வடிந்து விழுந்துவிடும்.. ஒரு சொட்டு ரத்தமும், அதன் உடம்பில் தங்கியிருக்காது. ஒருவேளை இறந்து போனபின் அந்த ஆட்டை வெட்டியிருந்தால், ரத்தம் வடிந்து போகாமல், உடலிலேயே படிந்திருக்கும்.. அதனால், நீங்கள் வாங்கும் மட்டனில் ரத்தம் உறைந்திருக்கிறதா? என்பதை பார்த்து வாங்குங்கள்.
எப்படி வாங்க வேண்டும்: மட்டனில் தோல் பகுதியை நீக்கிவிட்டு வாங்க வேண்டும்.. காரணம், இந்த தோல் பகுதிகளில்தான், அதிக கலோரிகள் நிறைந்திருக்கும்.. இதுதான், இதய கோளாறுகளுக்கும் காரணமாகின்றன.. ஆடுகளை வெட்டி, 5 மணி நேரத்திற்குள் வாங்கிவிட வேண்டுமாம். நேரம் ஆக ஆக, இறந்துபோன ஆடுகளில் கிருமிகள் வந்து சேர்ந்துவிடும்.
அதாவது, ஆட்டினுடைய தலையை துண்டித்து, கொஞ்ச நேரம் மட்டும்தான், அதனுடைய உயிர் செல்கள் இருக்கும்.. கிட்டத்தட்ட 20 நிமிடம் முதல் அரை மணி நேரம் அந்த உயிர் துடிப்புகள் இருக்கும். துடிப்பு நின்ற பிறகும் சில மணி நேரங்கள் அந்த செல்கள் இருக்கும்.. எப்படியும், ஆடு வெட்டப்பட்டு, 5 மணி நேரத்திற்குள் வாங்கி, சுத்தம் செய்து, சமையலும் செய்து, சாப்பிட்டும் முடித்திட வேண்டுமாம்.
மட்டன்: மட்டனை வாங்கி பல மணி நேரம் கழித்து சமைப்பது, ஃப்ரிட்ஜ்ஜில் வைத்து சமைத்து சாப்பிடுவதெல்லாம், அழுகிப்போன கறிக்கு சமம் என்கிறார்கள்.. மட்டன் விற்கிற விலையில், என்றோ ஒருமுறைதான் சமைத்து சாப்பிட வேண்டியிருக்கும்போது, அதையும் சத்தாக சாப்பிட முயற்சிக்கலாமே என்கிறார்கள் நிபுணர்கள்.
ஆடுகளை அறுத்து நீண்ட நேரம் தொங்கவிடும்போதுதான், அதன் தசைப்பகுதியில் உள்ள மையோகுளோபின் மாறுதல்கள் நடந்து விரைப்புத் தன்மை விலகிவிடுகிறது.. ஒருவேளை, அப்படிப்பட்ட கறியை வாங்கிவந்தாலும், நல்ல காற்றோட்டமான பாத்திரத்தில் சில மணிநேரம் வைத்திருந்துவிட்டு, அதற்கு பிறகே சமைக்க வேண்டும் என்கிறார்கள்.
ஆட்டுக்கறி: ஆட்டுக்கறியை மாரினேட் செய்யும்போது அல்லது சுத்தப்படுத்தி வைக்கும்போது, உப்பு சேர்க்கக்கூடாது.. சமைக்கும்போதுதான் உப்பு சேர்க்க வேண்டுமாம். ஆட்டுக்கறியை வெட்டி துண்டாக்கினாலும், ஒன்றோடு ஒட்டக் கூடாது.. உதிரி உதிரியாக இருந்தாலே அது நல்ல கறி என்று அர்த்தமாம்.
ஆட்டின் நெஞ்சுப்பகுதியில் உள்ள தசைகள் மிகவும் மென்மையானதாக இருக்கும்.. அதனால்தான் நெஞ்சுக்கறியை கேட்டு வாங்குவார்கள் இறைச்சி பிரியர்கள்.. தொடை, சந்துக்கறிகள் அதிகமாக இருக்கும்படி பார்த்து வாங்க வேண்டும். நெஞ்சுப்பகுதி மற்றும் முதுகுப்பகுதி தசைகள் மென்மையானதாக இருக்கும்.
சந்துக்கறிகள்: ஆட்டுக்கறி, விரல்களை தொட்டு பார்க்க வேண்டும்.. லேசாக கறியில் விரலை வைத்து அழுத்திவிட்டு, உடனே கையை எடுத்துவிட வேண்டும். அப்போது, பலூன் போல மீண்டும் பழைய அமைப்பிற்கே அந்த கறி வரும் பட்சத்தில், அது நல்ல கறி என்று அர்த்தம் கொள்ளலாம்.. ஒருவேளை, கையை வைத்து அழுத்திய இடத்தில் பள்ளம் போல அமுங்கி விட்டால், அந்த கறியை வாங்க வேண்டாம்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது












Click it and Unblock the Notifications