ஆட்டு சுவரொட்டியில் ஆரோக்கியம்.. மட்டன் மண்ணீரலின் மகத்தான சத்துக்கள்.. பெண்களுக்கு நன்மை தரும் உணவு
சென்னை: ஆட்டு மண்ணீரலில் உள்ள சத்துக்கள் என்னென்ன தெரியுமா? மாதம் ஒருமுறையாவது, மட்டன் மண்ணீரலை பெண்கள் சாப்பிடுவது உடலுக்கு நன்மைகளை தரும். அந்தவகையில் யாரெல்லாம் மண்ணீரலை உணவில் சேர்த்து கொள்ளலாம்?
மட்டன் மண்ணீரலை சுவரொட்டி என்பார்கள். இது பச்சையாக இருக்கும்போது சுவரில் ஒட்டிக்கொள்வதால், இப்படி பெயர் வந்ததாக சொல்வார்கள். மட்டன் மண்ணீரலில், அமினோ அமிலங்கள், B12, இரும்பு சத்துக்கள் நிறைந்துள்ளன.

நோய் எதிர்ப்பு சக்தியை பெருக்கக்கூடிய இந்த சுவரொட்டியை வளரும் குழந்தைகளுக்கு அடிக்கடி செய்து தரலாம்.. சிறுநீரக தொற்றை விரட்டக்கூடிய தன்மை ஆட்டு மண்ணீரலுக்கு உண்டு.. அதேபோல, முடக்குவாதம், கல்லீரல் பாதிப்பு உடையவர்களுக்கும் இந்த மண்ணீரல் மருந்தாகிறது. வாய்ப்புண், வயிற்றுப்புண்களால் அவதிப்படுபவர்கள், உப்பு சேர்க்காமல் இந்த சுவரொட்டியில் சூப் செய்து குடிக்கும்போது, நிவாரணம் கிடைக்கும்.
மண்ணீரல்: மாதவிடாய் சமயத்தில் அதிக ரத்தப்போக்கு உள்ளவர்கள் மற்றும் ரத்தசோகையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மட்டன் மண்ணீரல் ஒரு அற்புத உணவாகும். காரணம், 50 கிராம் மண்ணீரலில், ஒரு நாளைக்கு நமக்கு தேவையான இரும்புச்சத்துக்கள் இருக்கிறதாம். அந்தவகையில், ரத்தசோகையை தீர்ப்பதுடன், புதிய ரத்தத்தை விருத்தி செய்யக்கூடிய தன்மை இந்த மண்ணீரலுக்கு உண்டு. இதனால் ரத்த எண்ணிக்கையும் மெல்ல அதிகரிக்கும்.. சுவரொட்டியில் 215% இரும்புச்சத்து உள்ளதால், நமக்கு தினசரி தேவையைவிட 2 மடங்கு இரும்புச்சத்தினை, வெறும் 100 கிராம் சுவரொட்டியிலிருந்தே பெற முடியும். கர்ப்பிணிகளுக்கு இந்த மண்ணீரல் மிகவும் நல்லது.. இரும்புச்சத்து மற்றும் குழந்தையின் வளர்ச்சிக்கும் இது மிகவும் உதவும்..
ரத்த சிவப்பணுக்கள்: மண்ணீரலில் வைட்டமின் B9, B2 அதிமாக உள்ளது. போலிக் ஆசிட் என்று அறியப்படும் வைட்டமின் B9, ரத்த சிவப்பணுக்களை உருவாக்க தூண்டுகிறது. இது குழந்தையின் மூளை மற்றும் முதுகுத்தண்டில் ஏற்படும் பிறவி குறைபாடுகளை தடுக்கிறது. ஆரோக்கியமான நரம்பு மண்டலத்தை உருவாக்குவதில் வைட்டமின் B12 முக்கிய பங்கு வகிக்கிறது.
அதுமட்டுமல்ல, நம்முடைய உடலில் திசுக்களை உருவாக்கவும், அவைகளை சீரமைக்கவும் புரதம் நமக்கு மிகவும் முக்கியம். அதிலும் கர்ப்பிணிகளுக்கு, புரதம் மிகவும் முக்கியமான ஒரு ஊட்டச்சத்தாகும். குழந்தையின் திசுக்கள், செல்கள் மற்றும் உறுப்புகளின் நல்ல வளர்ச்சிக்கு புரதம் அவசியமானதாக உள்ளது. அந்தவகையில், சுவரொட்டியிலுள்ள புரதம் "கை" கொடுத்து உதவுகிறது.
புரதத்தேவை: குறிப்பிட்ட அளவில் மண்ணீரலை சாப்பிட்டு வருவது, நம்முடைய உடலின் புரத தேவையில் 53 சதவீதத்தை பூர்த்தி செய்கிறதாம். அதேபோல பெருங்குடல் அழற்சிக்கு ஆட்டு சுவரொட்டி சிறந்த மருந்தாக உபயோகப்படுகிறது.
மட்டன் வாங்கும்போதே சுவரொட்டியை கேட்டு வாங்கலாம். இதன் வெளிப்புறத்தில், வெள்ளையாக உள்ள தோலை நீக்கிவிட்டு சமைக்க வேண்டும். முக்கியமாக மண்ணீரலை மஞ்சள், உப்பு சேர்த்து நன்றாக சுத்தமாக கழுவி சமைக்க வேண்டும். இல்லாவிட்டால் தொற்று பாதிக்க வாய்ப்புள்ளது.
அதேபோல, எண்ணெய், மசாலா அதிகம் சேர்த்து வறுவல், பொரியல் செய்வதைவிட, சுவரொட்டியை நெருப்பில் வாட்டி சாப்பிட்டாலோ அல்லது சூப் வைத்து சாப்பிடும்போதோ அதிலுள்ள முழு சத்துக்களையும் வீணாக்காமல் பெற முடியும்.
கொலஸ்ட்ரால்: ஏராளமான சத்துக்களும் பயன்களும் அதிகமாக இருந்தாலும், இந்த மண்ணீரலில் கொலஸ்ட்ரால் அளவும் அதிகமாக உள்ளது. அதனால் சர்க்கரை நோய், சிறுநீரகம், இதயம் சார்ந்த பிரச்சனை உள்ளவர்கள், கர்ப்பிணிகள் கட்டாயமாக மருத்துவர் ஆலோசனையின்றி சுவரொட்டியை சாப்பிடக்கூடாது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications