Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பாரிஜாத பூவே..அந்த தேவலோக பூவே..இரவில் மலர்ந்து காலையில் உதிரும்..என்னென்ன நன்மைகள் தெரியுமா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: வெண்மையான இதழ்களைக் கொண்டதும் ஆரஞ்சு நிற காம்புகளைக் கொண்டதுமான மலர் பவளமல்லிகை. தேவலோக மரமான பாரிஜாதமே பூலோகத்தில் பவளமல்லிகையாக வளர்ந்துள்ளது என்கின்றன புராணங்கள். இரவில் மலர்ந்து காலையில் உதிர்ந்து விடும் இந்த பூக்கள் இரவு முழுவதும் சுகந்த மணத்தை பரப்பும் தன்மை கொண்டது. பாற்கடலை கடைந்த பொழுது வந்த ஐந்து பொருள்களில் பவளமல்லி எனப்படும் பாரிஜாதமும் ஒன்றாகும்.

பாரிஜாத மரத்தை தேவலோகத்தில் இருந்து இந்திரன் மண்ணுலகிற்கு கொண்டு வந்ததாக புராண கதைகள் சொல்கின்றன. திரௌபதியின் விருப்பப்படியே பீமன் தேவலோகத்தில் இருந்து பாரிஜாத மரத்தை கொண்டு வந்தார் என்றும் சொல்லப்படுகிறது.

 Health benefits of Parijatam flower: Do you know the benefits of Pavalamalli

பாரிஜாத மலரின் மீது ருக்மணிக்கு கொள்ளைப் பிரியம். இதனை அறிந்த கிருஷ்ணர் தேவலோகத்தில் இருந்து பாரிஜாத செடியை கொண்டு வந்து ருக்மணியின் தோட்டத்தில் நட்டு வைத்தார். ஆனால் அந்த மரம் நன்றாக வளர்ந்து சத்யபாமாவின் அரண்மனையில் பூக்களைச் கொட்டியது. இதனால் ருக்மணி வருத்தமுற்றதாலேயே இதனை வருத்தமரம் என்று அழைக்கின்றனர்.

வெண்மையான இதழ்களைக் கொண்டதும் ஆரஞ்சு நிற காம்புகளைக் கொண்டதுமான பாரிஜாதமே பூலோகத்தில் பவளமல்லிகையாக வளர்ந்துள்ளது என்கின்றன புராணங்கள். இரவில் மலர்ந்து காலையில் உதிர்ந்து விடும் இந்த பூக்கள் இரவு முழுவதும் சுகந்த மணத்தை பரப்பும் தன்மை கொண்டது. இந்த பூக்கள் ஏன் சூரியன் உதிக்கும் முன் உதிர்ந்து விடுகின்றன என்று கேள்வி வரலாம் அதற்கும் ஒரு கதை உள்ளது.

உலகிற்கே ஒளிதரும் சூரியனிடம் காதல் கொண்டாள் ஒரு அரசகுமாரி. அந்த காதலை ஏற்க மறுத்த சூரியனை எண்ணி மனமுடைந்து தன்னையே மாய்த்துக் கொண்டாளாம். அவளின் அஸ்தியிலிருந்து இம்மரம் உருவாகியதாகவும், இம்மரம் வளர்ந்ததும் சூரியனின் பார்வையைத் தாங்க முடியவில்லை என்றும் கர்ண பரம்பரைக் கதை ஒன்று உண்டு. இதன் காரணமாக இந்த மரம் இரவிலே பூக்களை மலர்வித்து காலையிலே பூக்களையெல்லாம் உதிர்த்து விடுகிறது என்றும் கூறப்படுகிறது. இவ்விதம் வருத்தமுடன் வாழும் பவள மல்லிகையைக் குறிப்பிட வருந்தும் மரம் என்கின்றனர்.

அற்புதமான வாசனையை உடையது இம்மலர் மலரின் காம்பு நல்ல சிவப்பாக இருக்கும். இதழ்கள் வெண்ணிறமாக காணப்படும். ஐந்தெழுத்தை நினைவுபடுத்தும் வகையில் ஐந்து வெள்ளை இதழ்கள் காணப்படுகின்றன. கண்ணை கவரும் நிறம். நடுஇரவில் மலரத் தொடங்கும். காலையில் பூக்கள் உதிர்ந்து விடும். அதிசயத் தன்மை நிறைந்த மலர்.

சிவனுக்கும், திருமாலுக்கும் அர்ச்சனை செய்ய ஏற்ற மலர் இதுவாகும். இறைவனை அர்ச்சிப்பதற்கு உரிய எட்டு மலர்கள் உள்ளன. அந்த எட்டு மலரில் இந்த பாரிஜாத மலரும் ஒன்று. இறைவனுக்கு அர்ச்சனை செய்யவும் உதவுகிறது. இந்த செடி மரமாக வளர்ந்து பூ பூக்கும் போது வீட்டில் எந்தவித தீய சக்திகள் அண்டாது.

மனிதர்களுக்குத் தெரியாத பல்வேறு மருத்துவக் குணங்களை கொண்டுள்ளது. பவளமல்லியை பெண்கள் தலையில் வைப்பதால் பொடுகு பிரச்சனை தீரும். ஆயுர்வேத மருத்துவத்தில் இதன் இலைகள், பூக்கள், விதைகள், வயிற்றுத் தொந்தரவு, மூட்டு வலி, காச்சல், தலைவலி போன்றவற்றிற்கு மருந்தாகப் பயன்படுகிறது.

பவளமல்லி மரத்தின் வேர் முதல் இதழ்கள் வரை பயனுடையது. பவளமல்லி செடியின் இலை வியர்வை, சிறுநீர், பித்தம் ஆகியவற்றைப் பெருக்கி மலமிளக்கும். வேர் பட்டை கோழையகற்றும், பித்தத்தை சமப்படுத்தும். இதன் இலைக் கொழுந்தை இஞ்சிச் சாற்றில் கலந்து முறைக் காச்சலுக்கு தினம் இரு வேளை கொடுத்தால் குணம் காணலாம்.

மலேரியா, டெங்கு போன்ற காய்ச்சல்களை எதிர்கொள்ள பவளமல்லி தாவரம் சிறந்த மூலிகையாக இருக்கிறது. இடுப்பு வலி பிரச்சனை உள்ளவர்கள் பவளமல்லியின் இதழ்களை கசாயம் வைத்து காலை, மாலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் விரைவில் இடுப்பு வலி குணமாகும்.

பவளமல்லி இலையை கசாயம் போல காய்ச்சி குடித்தால் காய்ச்சல் குணமடையும் என சித்த மருத்துவர்கள் கூறியுள்ளனர். கண்வலிக்கும் இந்த மருந்து பயன்படுகிறது. சிலருக்கு தலையில் புழுவெட்டு ஏற்பட்டிருக்கும். இதன் மீது பவளமல்லி இலைகளை தேய்த்தால் போதும். புழுவெட்டு மறைந்து முடி வளர்வதற்கு வாய்ப்பு உள்ளது.

இது சிறந்த கிருமி நாசினியாக பயன்படக்கூடியது. கீரிப் பூச்சிகள், நாடாப் புழுக்கள், நுண்கிருமிகளை வெளியேற்றும் அற்புதமான மருந்தாகிறது. வயிற்றை சுத்தப்படுத்தும் மூலிகையாக பவளமல்லி பயன்படுகிறது. வயிற்றில் புழுக்கள் வெளியேற இவ்விலைச் சாற்றுடன் சிறிது உப்பு சேர்த்து அத்தோடு தேன் கலந்து அருந்தினால் போதும், நல்ல பலன் கிடைக்கும். பவளமல்லியின் இலைகளில் செய்யப்படும் கசாயம், பருவ காலத்தில் ஏற்படும் படர்தாமரை நோயையும் குணப்படுத்தும் வல்லமை கொண்டது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+