ரணகள்ளியின் ரகசியம்.. சர்றுனு வெயிட் குறைக்கும்.. கல்லீரல், எலும்பு, நுரையீரல் பலம் பெற ரணகள்ளி இலை
சென்னை: குட்டி குட்டி இலைகளுடன் காணப்படும் ரணக்கள்ளியை பற்றி தெரியுமா? இதன் அருமை தெரியாமல் பலரும் வெறும் அழகுக்காக வீடுகளில் வைத்திருக்கிறார்கள். ஆனால், இது ஒரு அதிசய மூலிகை.. பல்வேறு நோய்களுக்கு இந்த ரணக்கள்ளி இலைகள் மருந்தாகின்றன.. அதனை சுருக்கமாக பார்ப்போம்.
சுவாச கோளாறுகளை தீர்க்கக்கூடிய கற்பூரவள்ளி, துளிசி இலைகளை போலவே இந்த ரணக்கள்ளியும் மருத்துவ குணம் நிறைந்தவை. இந்த ரணக்கள்ளி இலைகளில் வைட்டமின்கள், தாதுக்கள், ஆக்ஸிஜனேற்றங்கள் உள்ளிட்ட அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களும், கால்சியம், மெக்னீசியம் மற்றும் பொட்டாசியம் போன்றவற்றின் சிறந்த ஆதாரமாகவும் திகழ்கிறது.

கற்பூரவள்ளி: ரணகள்ளி இலைகளிலிருந்து சாறு எடுத்து, தேன் கலந்து குடித்து வந்தால் எப்பேர்ப்பட்ட காய்ச்சல், சளி, இருமலும் கட்டுப்படும்.. ஆஸ்துமா நோயாளிகளுக்கும் கைகொடுத்து உதவுக்கூடியது இந்த ரணக்கள்ளி.
வயிற்றுப்போக்கிலிருந்தும் நிவாரணம் பெறலாம். மலச்சிக்கல் பிரச்சனை உள்ளவர்கள், இந்த இலைகளை இலைகளை உலரவைத்து அதிலிருந்து டீ தயாரித்து குடிக்கலாம். இந்த டீயை குடித்துவரும்போது உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
சர்க்கரை நோயாளி: ரணகள்ளி இலைகளிலிருந்து சாறு எடுத்து, சர்க்கரை நோயாளிகள் குடித்து வந்தால், சர்க்கரை அளவு குறைவதை கவனிக்கலாம். காரணம், ரணக்கள்ளி இலைகள், குளுக்கோஸ் வளர்சிதை மாற்றத்தை நிர்வகிப்பதற்கும், இன்சுலின் உணர்திறனை அதிகரிப்பதற்கும், ரத்த சர்க்கரை அளவு அதிகரிப்பதை தடுப்பதற்கும் உதவுகின்றன. இதனால் ரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த இந்த இலைகள் உதவுகின்றன.
தோல் வியாதிகளுக்கான பாரம்பரிய வைத்தியங்களில் இதன் சாறு இன்றும் மருந்தாகி கொண்டிருக்கிறது. வயிறு வலியால் அவதிப்படுபவர்கள் ரணக்கள்ளி இலையில் கஷாயம் வைத்து குடிக்கலாம். இதனால் குடல் புழுக்களும் வெளியேறிவிடும். வெள்ளைப்படுதல் தொந்தரவு உள்ள பெண்கள், தினமும் 2 முறை ரணக்கள்ளி கஷாயத்தை குடிக்கலாம்.
ரணங்கள்: இந்த இலையின் சாற்றை புண்கள், கொப்பளங்கள், ரணங்கள் மீது தடவினால் நிவாரணம் கிடைக்கும். இந்த சாற்றை முகப்பருக்கள், சருமம் சிவத்தல், வீக்கத்துக்கும் தடவி பலன் பெறலாம்... இந்த சாற்றை கண்களை சுற்றி தடவி வந்தால், கண் வலிகளும் பறந்தோடிவிடும். குறிப்பாக, கண்களின் வெள்ளைப்பகுதியில் ஏற்படும் வலியை இந்த இலைகள் குணப்படுத்துகின்றன.
கீழாநெல்லி போலவே, மஞ்சள் காமாலை போன்ற நோய்களையும் இந்த ரணகள்ளி சாறு குணப்படுத்துகிறது.. இதனால் கல்லீரல் பலம்பெறுகிறது.. அதேபோல, இந்த இலைகளிலுள்ள கால்சியம், எலும்புகள், பற்கள் வலு பெறுவதற்கும், தசை செயல்பாட்டுக்கும் பேருதவி புரிகிறது.
உடல் எடை: ரணக்கள்ளி இலைகளில் நார்ச்சத்து அதிகம் என்பதால், உடலின் நச்சுக்களை அழிக்கிறது.. இதனால், எடை குறைக்க முயற்சிப்பவர்களும் முயற்சிக்கலாம்.. எனவே உணவில் இந்த இலைகளை சேர்த்து கொண்டால், எடையை சரியாகவும், ஆரோக்கியத்துடனும் நிர்வகிக்கலாம். இத்தனை சத்துக்கள் இருந்தாலும், ரணக்கள்ளியை டாக்டர்களின் ஆலோசனையின்றி மருந்தாக எடுத்துகொள்ளக்கூடாது.












Click it and Unblock the Notifications