"மிளகு ரசம்" சாப்பிடுபவரா நீங்க? ரசத்தை குடித்தால் என்னவெல்லாம் நடக்கும் தெரியுமா? அப்ப இதை படிங்க
சென்னை: "வெறும் ரசம்" என்று நாம் சொல்லிவிட்டாலும், அதிலுள்ள மருத்துவ பொருட்கள் அபாரமானவை.. சாதாரண ரசத்தில்கூட மருத்துவமும், மகத்துவமும் ஒளிந்திருக்கிறது.
இந்த ரசத்தில் இரும்புச்சத்து, வைட்டமின்கள் A, C, B1, பி3, கால்சியம், பாஸ்பரஸ், மெக்னீசியம் , செலினியம், துத்தநாகம், தாமிரம் இப்படி பல்வேறு சத்துக்கள் நிறைந்துள்ளன. அத்துடன், தாது உப்புகள், ஆன்டிஆக்ஸிடண்ட்கள், புரோட்டின் என மொத்தமும் கலந்துள்ளது.
மிளகு: புளி, தக்காளி, மிளகு, சீரகம், பூண்டு, பெருங்காயம், மஞ்சள் தூள் கறிவேப்பிலை, கொத்தமல்லி இதுதான் ரசம் வைக்க தேவையான அடிப்படை பொருட்கள்.. முழுக்க முழுக்க உள்ளுறுப்புகளுக்கு ஆரோக்கியத்தை தரக்கூடிய உணவு இது. வெளிநாட்டவருக்கு சூப் உசத்தி என்றால், நமக்கு இந்த மிளகு ரசம்தான் டாப்.

காரணம் ரசத்தில் உள்ள புளி செரிமானத்திற்கு அடிப்படையாகிறது.. நார்ச்சத்தும் அதிகமாக உள்ளது.. குடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற உதவுவதே ரசத்தில் உள்ள இந்த புளிதான். மற்ற பொருட்களான மஞ்சள், சீரகம், மிளகு போன்றவைகள் மூலிகை என்பதால், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்து, உள்ளுறுப்புகளை பலப்படுத்துகிறது.
புற்றுநோய்கள்: புற்று நோய், வயிற்று புற்றுநோய், குடல் புற்றுநோய் என மொத்தத்தையும் மிளகு அடித்து விரட்டுகிறது.. வயிற்றுப்போக்கு, மலச்சிக்கல், அமிலச்சுரப்புகளையும் இந்த மிளகு தடுக்கிறது. கொழுப்பு செல்களை சிதைக்கிறது.. சிறுநீர் சீராக வெளியேற உதவுகிறது.
தொண்டையில் இருக்கும் கிருமிகளை, நுரையீரலுக்கு செல்லவிடாமல் தடுப்பது சீரகம்தான்.. ரத்ததில் சர்க்கரை அளவை சீராக வைத்துக்கொள்ளவும், சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது. உடலின் தேவையற்ற கொழுப்புகளைக் கரைக்க உதவுவதும் இந்த சீரகம்தான்.
பெருங்காயம்: வெள்ளைப்பூண்டில் நிறைய சத்துக்கள் உள்ளன.. சளியை கரைத்து, சுவாச தடையை நீக்குகிறது.. ரத்த கொதிப்பை குறைக்கிறது. உடல் பருமனையும், ரத்தத்தில் உள்ள கொழுப்பையும் குறைக்கிறது.. பெருங்காயத்தை எடுத்துக்கொண்டால், வயிறு உப்புசத்தை நீக்கி, குடல்புழுக்களை அழிக்கிறது.. காய்ச்சல், ஜலதோஷத்தின்போது, இந்த மிளகு ரசத்தை சாப்பிடும்போது, சுவாசமண்டலம் வழியாக மார்புசளி வெளியேற காரணமாவதே இந்த பெருங்காயம்தான்.
ரசத்தில் எத்தனையோ வகைககள் உண்டு. ஆனால், அடிப்படையாக சேர்க்கப்படும் இந்த மூலப்பொருட்கள்தான், அதை மருந்தாகவும், ருசியாகவும் மாற்றுகிறது. ரசம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் என்னென்ன தெரியுமா? செரிமானம் அதிகமாகிறது.. ஜீரண கோளாறுகள் நீங்குகிறது.. வயிறு உப்புசம் விலகுகிறது.. நுரையீரலுக்கு நன்மை தருகிறது..
ஆரோக்கியம்: காய்ச்சல், இருமல், தும்மல், தொண்டை கமறல், வயிற்று புண் போன்றவற்றை சரி செய்ய இந்த ரசம் துணைபுரிகிறது, குடல் ஆரோக்கியம் மேம்படும். கறி விருந்தே சாப்பிட்டாலும், அதை செரிக்க இந்த ரசத்தைதான் நாட வேண்டி உள்ளது..!!
-
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம்












Click it and Unblock the Notifications