தினந்தோறும் செவ்வாழை.. எலும்பு, நரம்புகளுக்கு வலு கிடைக்க.. மனநலம் ஆரோக்கியம் காக்க.. செவ்வாழைப்பழம்
சென்னை: தினந்தோறும் 1 செவ்வாழை சாப்பிட்டால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? செவ்வாழை சாப்பிட உரிய நேரம் என்ன? மனநிலை மற்றும் மன ஆரோக்கியத்தை செவ்வாழை மேம்படுத்துவது எப்படி தெரியுமா? சுருக்கமாக பார்ப்போம்.
மற்ற வாழைப்பழங்களை விட குறைவான கலோரிகளை கொண்டது செவ்வாழை.. நார்ச்சத்து அதிகம்.. உடல் எடையை குறைக்க வேண்டுமானால், தினம் ஒரு செவ்வாழைப்பழத்தை சாப்பிடலாம்.

செவ்வாழைகள்: ரத்த அழுத்த பாதிப்பை சீராக்கும் இந்த செவ்வாழைகள், இதய நோய்களை அண்டவிடாமல் செய்கிறது.. குடலில் நல்ல பாக்டீரியாவின் எண்ணிக்கை 10 மடங்கு அதிகப்படுத்தும் தன்மை இந்த செவ்வாழைக்கு மட்டுமே உண்டு. அதேபோல, செவ்வாழையில் பொட்டாசியம் நிறைந்திருப்பதால் சிறுநீரகத்தில் கற்கள் ஏற்படுவதை தடுக்கிறது.
காலை நேரத்தில் செவ்வாழை சாப்பிடும்போது, அன்றைய நாளுக்கு தேவையான அனைத்து ஆற்றலும் கிடைத்துவிடும்.. இதனால் சோம்பல், மந்தம் தவிர்க்கப்பட்டுவிடும்.. வைட்டமின் C, இரும்புச்சத்து, நார்ச்சத்து, பொட்டாசியம், பீட்டா கரோட்டின் சத்துக்கள் செவ்வாழையில் உள்ளதால், உடலுறுப்புகள் பலம் பெறுகின்றன. நரம்பு தளர்ச்சியால் பாதிக்கப்பட்டவர்களும் தினமும் செவ்வாழையை சாப்பிட்டால் நல்ல மாற்றத்தை காணலாம்.
மனநிலைமை: மனநிலையிலும், மன ஆரோக்கியத்திலும் செவ்வாழையின் பங்கு அதிகமானவை. காரணம், செவ்வாழைப்பழத்தில் வைட்டமின் B6 அடங்கியிருப்பதால், இது மூளையிலுள்ள செரோடோனின் அளவை அதிகரிக்க செய்கிறது. மனநிலையையும் மேம்படுத்துகிறது. அத்துடன் மன அழுத்தம் மற்றும் மனச்சோர்வின் அறிகுறிகளையும் குறிப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன.
கண் சம்பந்தப்பட்ட பிரச்சனை இருப்பவர்கள் தினமும் 100 கிராம் செவ்வாழையை சாப்பிட்டு வரலாம்.. செவ்வாழையை சாப்பிடுபவர்களுக்கு மாலைக்கண் பிரச்சனை வருவதே கிடையாது..
கண் பாதிப்பு: இரவு உணவு சாப்பிட்டுவிட்டு 40 நாட்கள் தினமும் செவ்வாழையை சாப்பிட்டு வந்தால் மாலைக்கண் நோய்கள் விலகும். காரணம், இந்த பழத்திலுள்ள பீட்டா கரோட்டீன் கண்நோய்களுக்கு தீர்வை தருகின்றன. அதேபோல, கம்ப்யூட்டர், செல்போனில் அதிகநேரம் வேலை பார்ப்பவர்களுக்கு கண் எரிச்சல், கண் உஷ்ணம் ஏற்படும். இதுபோன்றிருந்தால், செவ்வாழையை நறுக்கி கண்களின் மீது சிறிது நேரம் வைத்திருக்கலாம். இதனால், கண்களிலுள்ள உஷ்ணம், சூடு விலகி குளிர்ச்சி கிடைக்கும்.
ஆனால், செவ்வாழையை சாப்பிடுவதற்கென குறிப்பிட்ட நேரம் உண்டு.. எந்தெந்த பிரச்சனை உள்ளவர்கள், எந்தெந்த நேரத்தில் சாப்பிடலாம் தெரியுமா?
செவ்வாழைப்பழம்: செவ்வாழைப் பழம் சாப்பிடுவதற்கான சரியான நேரம் காலை 6 மணி அல்லது பகல் 11 மணி அல்லது மாலை 4 மணியாகும்.. அதாவது உணவு சாப்பிட்டதுமே செவ்வாழையை சாப்பிடக்கூடாது. இது மந்தத்தன்மையை அதிகரித்துவிடுமாம். முழு சத்துக்களும் கிடைக்காமல் போய்விடும் என்கிறார்கள்.
நரம்பு தளர்ச்சி பாதிப்பு உடையவர்கள், ஆண்மை குறைபாடு உள்ளவர்கள், தினமும் இரவு ஒரு செவ்வாழைப்பழம் 48 நாட்களுக்கு தொடர்ந்து சாப்பிட வேண்டும். பற்களில் கோளாறு, பல்வலி, உள்ளிட்ட நோயால் அவதிப்படுவர்கள் 21 நாட்களுக்கு செவ்வாழை சாப்பிட்டு வர வேண்டும். அதேபோல, குழந்தை இல்லாத தம்பதியினர் 40 நாட்கள் தொடர்ந்து செவ்வாழைப்பழத்தை அரை டீஸ்பூன் தேனுடன் சாப்பிட்டு வரவேண்டும்.
கரும்புள்ளிகள்: செவ்வாழைப்பழ தோலையும் வீணாக்க கூடாது.. இந்த தோலில் வைட்டமின்கள் A, B, C, மற்றும் பைட்டோநியூட்ரியண்ட்கள் நிறைந்துள்ளதால், ஏகப்பட்ட ஊட்டச்சத்துக்கள் சருமத்துக்கும் கிடைக்கும்.. சருமத்திலுள்ள கரும்புள்ளிகளை நீக்கவும், முகம் எப்போதும் பளபளப்பாக வைத்திருக்கவும் இந்த தோல்கள் பயன்படுகின்றன.. எனவே, செவ்வாழை பழத்தோல் மற்றும் செவ்வாழை பழங்களை கொண்டு பேஸ் மாஸ்க் தயாரித்து பூசிவரலாம். இது முகத்துக்கு ஜொலிஜொலிப்பை தரும்.
-
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
பேசி முடித்ததுமே சரிந்த பாமக நிறுவனர் ராமதாஸ்.. கேள்விப்பட்டதும் உடனே போன் போட்ட முதல்வர் ஸ்டாலின்! -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம் -
யாருங்க இந்த ஐடியாலாம் தருவது? தவெக விஜய் கொடுத்த வாக்குறுதியில்.. இருக்கும் பெரிய ஓட்டை! -
'ஜனநாயகன்' பட லீக்கில் என்ன நடந்தது.. தமிழக காவல்துறை முழு விளக்கம் -
சாத்தூரில் நயினார் வாங்கிய காத்து.. பாஜக தேசிய தலைவரையே கூட்டி வந்தும் கூட்டம் இல்லை -
ஆட்டம் ஆரம்பம்.. முதல் அடி தங்கம், வெள்ளி விலை.. இந்தியாவில் விடியும் முன்பே ஷாக்! -
ஹார்முஸில் வழிந்தோடும் ‘ரத்தம்’? பீதியில் உலக நாடுகள்.. கண்ணி வெடிகள் வேற குவிந்து கிடக்குதே












Click it and Unblock the Notifications