இனிக்கும் இல்லறத்துக்கு செண்பகப் பூ.. சிறுநீரகம், நரம்பு, ஆரோக்கியம் காக்கும் செண்பக பூக்கள் கஷாயம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: செண்பக மரங்களை பொறுத்தவரை, சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் முக்கிய பங்கு வகிப்பவை.. இந்த செண்பக மரத்தின் விதை, வேர், பட்டை போன்றவற்றின் மருத்துவ குணங்கள் என்னென்ன? இதனை யார் யார் பயன்படுத்தலாம்? இதன் முக்கியத்துவங்கள் என்னென்ன? என்பது குறித்து சுருக்கமாக இங்கே பார்க்கலாம்.செண்பக மரங்களின் இலைகள் நீளமாக, மேற்புறம் பசுமையாகவும், பின்புறம் உரோமங்கள் மண்டியும் காணப்படும். இவைகளை கொண்டுதான் காற்றிலுள்ள தூசுகள் அகற்றப்படுகின்றன.

Shenbaga Pookkal Champak Flower

மரத்தின் முக்கியத்துவம்

அல்கலாய்டுகள், ஒலியிக் சினாயிக், பால்மிடிக் போன்றவையே, இந்த செண்பக மரத்தின் முக்கியம்சம் ஆகும். செண்பக மரத்தின் விதைகள், வேர்கள், பட்டைகளிலும், வேதியியல் எண்ணெய், அல்கலாய்டுகள், ஒலியிக் சினாயிக், பால்மிடிக் உட்பட பல பொருட்கள் நிறைந்துள்ளன. குளிர்ச்சியான செண்பக பூக்கள், நம்முடைய கண்களுக்கு மருந்தாகிறது..

கண்ணில் நீர்வடிதல், கண்வலி, கண் எரிச்சல், இமைகள் ஒட்டிக்கொள்ளுதல், தொற்றுகள் என கண் சம்பந்தப்பட்ட தொந்தரவுகளை நீக்க இந்த பூக்கள் போன்ற கண்களை பாதிக்கும் அத்தனை பிரச்சனைக்கும் இப்பூக்கள் பயன்படுகின்றன. அதனால்தான், கண்நோய் மருந்துகளை தயாரிக்க செண்பக பூக்கள் மூலப்பொருட்களாக உபயோகப்படுத்துகிறார்கள்.

கண்கள் பாதுகாப்பு

அதிமதுரம், ஏலக்காய், குங்குமப்பூ இவைகளுடன் செண்பக பூக்களையும் தண்ணீர் சேர்த்து விழுதாக அரைத்து கண்களின் மீது பற்று போல போடலாம். 1 மணி நேரத்தில் குளிர்ந்த நீரில் கண்ணை கழுவலாம். அல்லது வெறுமனே இந்த பூக்களை நீரில் மூன்று மணி நேரம் ஊறவைத்து, அந்நீரில் கண்ணை கழுவலாம்.

நுண்கிருமிகள் இருந்தாலும் வெளியேற்ற இந்த பூக்கள் போதும். ஏனென்றால், பீட்டா சைட்டோஸ்டீரால், லிரியோடினின், மோனோசெஸ்குட்டிர்பின் போன்றவையே கிருமிநாசினியாக பயன்படுகின்றன. வைரஸ், பாக்டீரியாக்களால் உண்டாகும் ஜூரத்தையும் இப்பூக்கள் விரட்டுகின்றன.

உஷ்ண கோளாறுகள்

செண்பக பூக்களை விழுதாக அரைத்து, நல்லெண்ணெய்யுடன் காய்ச்சி, ஆறவைத்து எடுத்து கொள்ள வேண்டும். உடம்பில் வலி, எரிச்சல், எரிச்சல், மூட்டு வலி, முழங்கால் வலி, தலைவலிக்கு இதனை தேய்க்கலாம். உஷ்ண கோளாறுகள் அதாவது, சிறுநீர்க்கடுப்பு, சிறுநீர் எரிச்சலையும், ஆண்மை குறைவு பிரச்சனையையும், நரம்பு தளர்ச்சி குறைபாட்டை சரிசெய்கிறது.

செண்பக பூக்கள்

இந்த பூவை கஷாயம் வைத்து பனங்கற்கண்டு கலந்து குடித்து வந்தால் நரம்புத் தளர்வு விலகும்.. பித்தம், வாந்தி, மயக்கம், தலைச்சுற்றல் இருந்தால், செண்பக பூ கஷாயம் போதும். ஆண்மை குறைபாட்டையும் தீர்க்க செண்பக பூக்கள் பயன்படுகின்றன. எனவே, வெறுமனே இந்த பூக்களை வைத்து கஷாயம் செய்து குடிக்கலாம். நிழலில் உலர்த்தி, தூள் போல தயாரித்து தேன் சேர்த்தும் சாப்பிடலாம். இது உயர் ரத்த அழுத்தம் பிரச்சனைக்கு மிகவும் நல்லது.

பாலியல் நோய் தாக்கம் உள்ளவர்கள் செண்பகப் பூவை காயவைத்து பொடி செய்து தினமும் இருவேளை தேனுடன் கலந்து சாப்பிட்டு வந்தால் பாலியல் சம்பந்தப்பட்ட நோய்களின் தாக்கம் குறையும். ஆழ்ந்த தூக்கத்திற்கும், வெள்ளைப்போக்கு பிரச்சனைகளை சரிசெய்யவும் இந்த செண்பக பூக்களே மருந்தாகின்றன

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+