வெறும் "விதையே" போதும்.. முளைகட்டி சாப்பிடுங்க.. உடல் எடை செமையா குறைக்கும்.. பெண்களின் வரப்பிரசாதம்
சென்னை: பயிறுகளை வேகவைத்து சாப்பிடுவதைவிட, முளைகட்டிவிட்டு அதன்பிறகு ஆவியில் வேகவைத்து பயன்படுத்தினால் கூடுதல் பலன்கிடைக்கும் என்கிறார்கள்.. அதில் ஒன்றுதான் வெந்தயம்.
வெந்தயத்தை பொறுத்தவரை, நீர்ச்சத்து, புரதச்சத்து, கொழுப்பு சத்து, மாவுச்சத்து என பல்வேறு மருத்துவ குணங்கள் நிரம்பியிருக்கின்றன.. உடல்சூட்டை தணித்து குளிர்ச்சியை தரக்கூடியது வெந்தயம். சிறுநீரை பெருக்கக்கூடியது..

இந்த விதையிலுள்ள ஆல்கலாய்டுகள், ஜீரணத்தை தந்து, பசியை அதிகப்படுத்தக்கூடியவை.. நரம்புகளை பலப்படுத்தக்கூடியவை.. வழக்கமாக, வெந்தயத்தை, குழம்புகளில் தாளிப்புக்காக சேர்ப்பார்கள். அல்லது இட்லி மாவில் சேர்த்து அரைப்பார்கள். நல்லெண்ணெய் சேர்த்து வெந்தயக்களி செய்வார்கள்..
முளைகட்டும் முறை: ஆனால், முளைக்கட்டி பயன்படுத்துவதால், வெந்தயத்தின் முழு பலனையும் பெற முடியும்,. 10 மணி நேரம் வெந்தயத்தை ஊறவைத்து, அதன் தண்ணீரை வடிகட்டி, மெல்லிய துணியில் 10 நேரம் மீண்டும் கட்டிவைத்து, காற்றோட்டம் உள்ள இடத்தில் வைக்க விட வேண்டும். பிறகு, அடிக்கடி தண்ணீரை மட்டும் அதன்மீது தெளித்து வந்தாலே போதும், இப்போது முளை கட்டிய வெந்தயம் கிடைத்துவிடும்.
முளைகட்டி எடுத்துவிட்டாலே, இதன் கசப்பு தன்மை நீங்கிவிடும்.. மாறாக இனிப்பு சுவை வந்துவிடும். அதனால், இதில், லேசாக மிளகுத் தூள், உப்பு சேர்த்து சாப்பிடலாம். அல்லது சாலட்களில், சூப்களிலும் பயன்படுத்தலாம். ஊற வைத்த இந்த தண்ணீரை வீணாக்க வேண்டாம்.. இந்த தண்ணீரை அப்படியே குடிக்கலாம். அல்லது தலைமுடியை அலசுவதற்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.
நார்ச்சத்துக்கள்: முளைகட்டிய வெந்தயத்தில் வைட்டமின் சி, ப்ரோட்டீன், நியாசின், பொட்டாசியம், இரும்புச்சத்து, ஆல்கலாய்ட்ஸ், ஈஸ்ட்ரோஜனாக கருதப்படும் டயோஸ்ஜென் என ஏகப்பட்ட சத்துக்கள் நிறைந்துள்ளன. 75 சதவீதம் கரையக்கூடிய நார்ச்சத்துக்கள் இதில் நமக்கு கிடைத்துவிடுவதால், உடல் எடையை குறைக்க பெரிதும் துணைபுரிகிறது.. நாள்பட்ட நீரிழிவு நோய் குணமாகும்.
இந்த வெந்தயமானது, இதயத்தை காக்கக்கூடியது.. ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்காது.. சருமம் பாதுகாப்புக்கு நன்மை கிடைக்கும்... கல்லீரல், சிறுநீரகம் போன்ற உள்ளுறுப்புகளின் ஆரோக்கியம் பலப்படும்.. அஜீரணக்கோளாறு நீங்கிவிடும்..
சர்க்கரை நோய்: மேலும், வெந்தயம் இரத்த ஓட்டத்தில் வெளியாகும் குளுக்கோஸை மெதுவாக செயல்பட செய்யும். இதனால், இரத்தத்தில் சர்க்கரை அளவு திடீரென அதிகரிக்காது. வெந்தய விதைகளை 5 நாட்கள் தண்ணீரில் ஊற வைக்கவும். அவை முளைகட்டிய வெந்தயமாக உங்களுகுக் கிடைக்கும்.
மூட்டுகளுக்கு வலு கிடைக்கிறது.. நோய் எதிர்ப்பு சக்திகள் கூடுகின்றன.. கணையத்தில் பீட்டா செல்கள் உருவாகுவது மேம்படுகிறது.. பாலூட்டும் தாய்மார்களுக்கு இந்த முளைகட்டிய வெந்தயம், ஒரு வரப்பிரசாதம் என்றே சொல்லலாம்.. இதனால், தாய்ப்பால் உற்பத்தி அதிகரிக்கும்.. ஒரு ஸ்பூன் வீதம் முளைகட்டிய வெந்தயத்தை, டாக்டரின் ஆலோசனையுடன் சாப்பிட்டு வந்தாலே பெரும்பலன்கள் கிடைக்கும்.
வைரஸ் பாதிப்பு: பெண்களில் சிலருக்கு முறையற்ற மாதவிடாய் பிரச்சனை இருந்தால், அவர்கள் கட்டாயம் இந்த முளைகட்டிய வெந்தயத்தை எடுத்து கொள்ள வேண்டும். முளைகட்டிய வெந்தயத்தை தொடர்ந்து சாப்பிட்டுவந்தால், வைரஸ் தொற்று ஏற்படாமல் பாதுகாக்கப்படும்.. குறிப்பாக காய்ச்சல், தலைவலி போன்றவைகள் உடனடியாக குணமடையும்..
முளைகட்டிய வெந்தயம் உடல் நலனுக்கு மட்டுமல்ல, நம்முடைய சருமத்திற்கும் நல்லது.. இளமையிலேயே ஏற்படம் வயதான தோற்றத்தை தள்ளிப்போட இந்த வெந்தயம் உதவுகிறது. அதே போல சருமத்தில் ஏற்படும், பருக்கள், கரும்புள்ளிகள் நீங்கிவிடும்.. தலைமுடி கொட்டுவது உடனே நின்றுவிடுவதுடன், அடர்த்தியான தலைமுடி வளர துவங்கும்..
தொடக்கூடாது: அலர்ஜி இருப்பவர்கள், நாட்பட்ட மருந்து சாப்பிடுபவர்கள், பலவீனமான சிறுநீரகங்களை கொண்டவர்கள், மூலநோயால் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவரின் ஆலோசனையில்லாமல், முளைகட்டிய வெந்தயம் உள்ளிட்ட முளைக்கட்டிய பயிறுகளை சாப்பிட வேண்டாம்.












Click it and Unblock the Notifications