வசம்பு வாசம்.. வசம்புவை இப்படியும் பயன்படுத்தலாம்.. கைவசம் வசம்பு மட்டும் போதும்.. வாழ்வு வசப்படும்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆரோக்கியமான வாழ்வுக்கு அன்றைய காலம் முதல் இப்போது வரை கைகொடுத்து உதவக்கூடிய மருத்துவ மூலிகைதான் வசம்பு.. இதன் பயன்பாடுகள் என்னென்ன தெரியுமா?

பெரும்பாலும் பச்சிளம் குழந்தைகளுக்கு பயன்படுத்தப்படும் இயற்கை மூலிகை இந்த வசம்பு.. அதனால்தான் இதற்கு பிள்ளை மருந்து, பிள்ளை வளர்த்தி என்றெல்லாம் பெயர்சொல்லி அழைக்கப்படுகிறது.

Health Benefits of Vasambu and Do you know how to use vasambu for Born Babies

தங்கள் குழந்தைகள் எந்த நோய் நொடியில்லாமல் இருப்பதற்காக இந்த வசம்பை கோர்த்து பிறந்த குழந்தைகளின் கைகளில் கட்டுவது உண்டு. இந்த வசம்பானது வசம்பு வேரானது நிறைய மருத்துவ குணங்கள் நிறைந்தது.

உடல் குளிர்ச்சி: குழந்தைகளுக்கு ஏற்படும் நெஞ்சு எரிச்சல், அஜீரணம், வயிறு உப்பசம், வயிறு வீக்கம், வயிற்று போக்கு போன்ற பிரச்சனைகளுக்கெல்லாம் வசம்பு உதவுகிறது.. அத்துடன், உடல் குளிர்ச்சியையும் நீக்க உதவுகிறது. இந்த வசம்பினை ஒரு கல்லில் வைத்து உரசி, அதை வழித்து எடுத்து, தாய்ப்பாலுடன் கலந்து தருவார்கள்..

அல்லது தேனுடன் கலந்து குழந்தைகளுக்கு தருவார்கள்.. வசம்பு பொடி என்று தனியாகவே கடைகளில் கிடைக்கிறது. ஆனால், டாக்டரின் ஆலோசனையை பெற்று, குழந்தைகளுக்கு இதனை பயன்படுத்துவது நல்லது. வசம்பு கொடுத்துவிட்டால், அடுத்த அரை மணி நேரத்துக்கு குழந்தைகளுக்கு பால்தரக்கூடாது.. இந்த வசம்பு திருஷ்டி பொருளாகவும் பயன்படுவதுண்டு..

தாயத்து கயிறு: வசம்பினை சிறு சிறு துண்டுகளாக்கி, அரைஞாண்கயிறு போல இடுப்பில் குழந்தைகளுக்கு கட்டிவிடுவார்கள்.. தாயத்து வடிவில் குழந்தையின் இடுப்பில், கைகளில் இப்படி கட்டினால், வலிப்பு நோய் வருவது தடுத்து நிறுத்தப்படும்.

அதேபோல, நெருப்பில் சுட்டு, சிறிது தண்ணீரில் தெளித்து தேய்த்தால், கருப்பு நிறத்தில் மை போன்று வரும்.. இதனை கொண்டு குழந்தைகளுக்கு திருஷ்டி பொட்டு போல வைப்பார்கள்.. குழந்தைகளுக்கு நெற்றியில் அல்லது உள்ளம் பாதங்களில், கன்னத்தில், பொட்டு போல வைத்துவிடுவார்கள்.. இதனால் நோய்த்தொற்றுகள் குழந்தைகளை அண்டாது.

பார்வைத்திறன்: குழந்தைகளுக்கு பேச்சு வருவது தாமதமானால், அல்லது பேச்சுத்திறன் அதிகரிக்க வேண்டுமானால், இந்த வசம்பினை நாக்கில் வைத்து தேய்ப்பார்கள்.. இதனால், குழந்தைக்கு ஏதாவது அலர்ஜி இருந்தாலும் நீங்கிவிடும். அதேபோல, குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கும், கூர்மையான பார்வை திறனுக்கும் இந்த வசம்பு உதவுகிறது.

குழந்தைகளுக்கு பசியின்மை இருந்தாலும், இந்த வசம்பு தருவார்கள்.. குழந்தைகளை தூங்க வைத்தபிறகு, அந்த அறையை சுற்றிலும், வசம்பு பொடியையும் ஆங்காங்கே தூவி வைப்பதால், பூச்சிகள் முதல் நுண்ணுயிரிகள் நுழைவது தடுத்து நிறுத்தப்படும். அல்லது குழந்தைகளை குளிக்க வைக்கும்போது, அந்த தண்ணீரில் வசம்பு பொடியை கலந்து பயன்படுத்தலாம்.

வசம்பு மருந்து: குழந்தைகளுக்கு மட்டுமல்லாமல், பெரியவர்களுக்கும் வசம்பு மருந்தாக பயன்படுகிறது.. விஷம் குடித்துவிட்டவர்களை, உயிர்காக்க இந்த வசம்பு உதவுகிறது.. 3 ஸ்பூன் அளவுக்கு வசம்பு தந்தால், குடலிலுள்ள விஷம் வெளியே வந்து விடுமாம்... கால்நடைகளுக்கு தொற்று நோய்கள் பரவாமல் இருக்கவும் இந்த வசம்பு பயன்படுகிறது.

ஒரு பாத்திரத்தில் சிறிது வசம்பு பொடி, கடுக்காய் பொடி, சுக்குப்பொடி, மிளகுப்பொடி, திப்பிலி பொடி, பனங்கற்கண்டு சேர்த்து தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து குடித்தால், சளி, இருமல், தலைபாரம் என அனைத்துமே நீங்கிவிடும்.. வாயு தொந்தரவுக்கும் சிறந்த மருந்து இது..

அற்புதம்: பொடுகு தொல்லைக்கும், தலைமுடி வளர்ச்சிக்கும் வசம்பு பொடி உதவுகிறது.. மிகச்சிறந்த கிருமி நாசினியான இந்த வசம்பு, ஒவ்வொரு வீடுகளிலும் கட்டாயம் இருக்கக்கூடிய அற்புதமான மூலிகை பொருளாகும்.

(இது பொதுவான தகவல்களை அடிப்படையாக கொண்டது. உங்கள் பிரச்சனைக்கு மருத்துவரை அணுகுவதே சிறந்தது. இந்த தகவலுக்கு "One India Tamil News" பொறுப்பேற்காது)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+