வெட்டி வேர் வாசம்.. கால் வலி, கண் எரிச்சல், உஷ்ணம் போக்கும் வெட்டி வேர்கள்.. மகிழ்ச்சி தரும் எண்ணெய்

Subscribe to Oneindia Tamil

சென்னை: மன அழுத்தத்தை போக்கி, நிம்மதியான தூக்கத்தை தரக்கூடிய வெட்டி வேர்களின் சிறப்புகள் என்னென்ன தெரியுமா? வாசனைக்காக மட்டுமல்லாமல், தலைமுடி, சரும பாதுகாப்பில் வெட்டி வேர்கள் தரக்கூடிய நன்மைகள் ஏராளம்.. அதனை சுருக்கமாக பார்ப்போம்.

தர்பை புல் வகையை சேர்ந்த வெட்டி வேர்கள், பலவகைகளில் மருந்தாகிறது.. இந்த வேர்களில் ரெசின், நிறமி, அமிலம், லைம் உப்பு, இரும்பு ஆக்ஸைடு, எளிதில் ஆவியாகும் எண்ணெய் போன்றவை நிறைந்திருக்கின்றன..

vetiver heat body skin diseases

வேர்கள் வாசம்: அதனால் வெறுமனே வெட்டி வேர்களாகவே இதனை வீடுகளில் பயன்படுத்தலாம். ஒரு சாதாரண கிண்ணத்திலோ அல்லது வெள்ளை துணியில் வெட்டி வேர்களை சேர்த்து முடிச்சு கட்டியோ, வீட்டின் ஒரு ஓரத்தில் வைத்து விட்டால் போதும்.. இந்த வேர்களிலிருந்து வெளிவரும் வாசமானது. வீடெல்லாம் நிரம்பி கிடக்கும்.. இதை சுவாசித்து கொண்டே வரும்போது, மன அழுத்தம் நீங்கி, அமைதி பெறும்..

அதேபோல, ஒரு மண்பானையில் தண்ணீர் நிரப்பி, அதில் வெட்டி வேர், விளாமிச்சை வேர் போன்றவற்றை போட்டு வைத்தால் போதும்.. இந்த தண்ணீரை குடித்து வரும்போது, உடல் சூடு குறையும்.. வெயில் காலத்தில் வெட்டிவேர்களில் செய்யப்படும் தட்டிகளை வாங்கி ஜன்னல்களில் கட்டிவைத்தாலும், அறையின் வெப்பத்தை குறைத்து உடலுக்கு குளிர்ச்சி தரும்.

வேர்க்குரு: வெட்டி வேர், விலாமிச்சை வேர், பாசிப்பயிறு, சந்தனம் இவற்றை பொடியாக்கி பன்னீர் அல்லது தண்ணீரில் கலந்து தடவி வந்தால் வெயில் காலத்தில் காணும் வேர்க்குரு மறையும்.. சில ஆண்களுக்கு தோள்பட்டை மற்றும் முதுகில் பரு போன்ற சிறு கட்டிகள் இருந்தாலும், இந்த வெட்டிவேர்கள் மருந்தாகின்றன.

இரவு நேரம், தலையணைக்கு அடியில் ஒரு துண்டு வெட்டி வேர் வைத்துவிட்டால், நிம்மதியான ஆழ்ந்த தூக்கத்தை பெறலாம்.. வெட்டி வேர்கள் குளிர்ச்சித்தன்மை வாய்ந்தவை. அதனால், இந்த வேர்களை பவுடர் செய்து வைத்து கொண்டு வெயில் காலத்தில் உபயோகப்படுத்தினால் பல நன்மைகளை பெறலாம.. கோடை காலத்தில் ஏற்படும் சிறுநீர் கடுப்பு, காய்ச்சல், சோர்வு, தோல் நோய்கள், மன அழுத்தம் போன்றவற்றை இந்த வெட்டி வேர் தூள் தீர்க்கும்.

வெயில்காலம்: இந்த வெட்டி வேர்களில் பாய், விசிறி போன்றவைகள் தயாரிக்கப்படுகின்றன.. இவைகளை கோடை காலத்தில் பயன்படுத்தும்போது, உடலிலுள்ள உஷ்ணம் வெளியேறி, குளிர்ச்சியை தரும்..

அதேபோல, சர்பத்களில் வெட்டிவேர் சேர்த்து குடிக்கலாம்.. இதுவும், உடல் சூட்டை அப்புறப்படுத்திவிடும். வயிறு எரிச்சல், கண் எரிச்சல், வாய்ப்புண் இருந்தாலும், வெட்டிவேர் சர்பத் குடித்தாலே பலன் கிடைக்கும்... அந்த காலத்தில் காலரா வாந்தியை நிறுத்த இந்த வெட்டிவேர்கள்தான் உபயோகமாக இருந்திருக்கின்றன.

கால் எரிச்சல், கால் வலிகளுக்கும் வெட்டிவேர் மருந்தாகும்.. இதற்கு ஒரு வாணலில் தேங்காய் எண்ணெய்யை ஊற்றி, இந்த வெட்டி வேர்களையும் அதில் சேர்த்து காய்ச்ச வேண்டும். பிறகு 2 நாட்களுக்கு இதனை அப்படியே வைத்துவிட வேண்டும்.. வெட்டிவேரில் தேங்காய் எண்ணெய் நன்றாக ஊறிவிடும். பிறகு 3வது நாள் இந்த எண்ணெய்யை மட்டும் வடிகட்டி வைத்து கொண்டால் போதும்..

சரும பாதுகாப்பு: கால் வலி, மூட்டு வலி, சருமத்தில் வேறு எந்த தொந்தரவு இருந்தாலும் இந்த எண்ணெய்யை பூசி வரலாம். பலநாட்கள் ஆறாமல் இருக்கும் வடுக்கள் மீது தடவி வந்தாலும், அவை விரைவில் மறைந்துவிடும். முகத்திலுள்ள பருக்கள், சிறு சிறு கொப்புளங்களும் மறைந்துவிடும்..

குளிர்ச்சி நிறைந்த இந்த எண்ணெய்யை தலைக்கும் தேய்த்து குளிக்கலாம். சீயக்காய்க்குப் பதில் வெட்டிவேர்களை தூள் செய்து கலந்து பயன்படுத்தலாம்.. அல்லது குளிக்கும் நீரில் வெட்டிவேர்களை அரைத்து சேர்த்து, சிறிது நேரம் ஊறவைத்து குளிக்கலாம். இதனால் உடலிலுள்ள நமைச்சல், எரிச்சல், காயங்கள் விரைந்து ஆறும்.. தீக்காயங்கள் ஏற்பட்டாலும்கூட, இந்த வெட்டிவேர்களை அரைத்து பூசும்போது, எரிச்சல் தணியும்.. காயமும் சீக்கிரமாக ஆறும்.

வெட்டிவேர்கள்: ஒருவேளை முகத்தில் பருக்கள் நீங்காவிட்டால், வெட்டிவேர்களுடன் சிறிது கடுக்காயை சேர்த்து இரவில் சுடுநீரில் ஊறவைத்து, மறுநாள் அவைகளை அரைத்து பருக்கள் மீது தடவினால் போதும்.. பருக்களும் தழும்புகளும் ஓடியே போய்விடும்.

வெட்டி வேர் எண்ணெய்யில் ஆன்டி ஆக்ஸிடன்கள் நிறைந்துள்ளன.. ஆக்ஸிஜனேற்ற பண்புகள் இந்த எண்ணெய்யில் உள்ளதாக இந்தியன் ஜர்னல் ஆஃப் உயிர் வேதியியல் மற்றும் உயிர் இயற்பியலில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்விலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.. ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உடலின் செல்களை ஃப்ரீ ரேடிகல்களிலிருந்து பாதுகாக்கும் பொருட்கள் உள்ளதால், நாள்பட்ட நோய்களின் அபாயத்தையும் குறைக்கிறது.

வெட்டிவேர் எண்ணெய்யை கை, கால் பிடிப்புகளுக்கும் தடவி வரலாம்.. காய்ச்சல் மற்றும் வயிற்றில் ஏற்படும் நோய்களைக் கட்டுப்படுத்தும். வெட்டிவேர் ஊறிய நீரை குடித்து வந்தாலே, காய்ச்சல், நீர் எரிச்சல், நீர் கடுப்பு, உடல்சோர்வு, தோல் நோய்கள், மன அழுத்தம் எதுவும் அண்டாது

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+