"லோலாய்".. நடிகை ராதிகா மைக் எடுத்ததுமே.. பட்டென திரும்பிய ஐஏஎஸ் ராதாகிருஷ்ணன்..அருணாவுக்கு சிரிப்பு
சென்னை: நம்முடைய சரும பிரச்சனையை பராமரிக்க எத்தனையோ வழிகள் இருந்தாலும் வீட்டிலேயே சில டிப்ஸ்களை எளிதாக கடைப்பிடிக்கலாம் என்கிறார்கள்.
வயதாகும்போது சரும வடிவத்தை பராமரிக்க உதவும் புரத பொருளானகொலாஜன் உற்பத்தி குறையும். அதனால்தான் சருமத்தில் சுருக்கங்கள், கோடுகள், தளர்ச்சி போன்றவை ஏற்படும்..

வயதாகி கொண்டே செல்லும்போது, வயதான தோற்றம் வருவது இயல்புதான்.. ஆனாலும், நிறைய பேருக்கு, குறுகிய காலத்திலேயே இந்த முதுமை தோற்றம் வந்துவிடுகிறது.. இதற்கு நிறைய காரணங்கள் இருக்கலாம்.. மரபணு காரணங்கள், புற ஊதா கதிர்கள், மன அழுத்தம், வாழ்க்கை முறை, உணவு முறை, இப்படி நிறைய காரணங்கள் இருக்கலாம்..
தூக்கம்: நன்றாக தூங்கி எழுந்து, கண்ணுக்கு கீழே கருவளையம் வராமல் இருந்தாலே பாதி பிரச்சனை இல்லை.. அந்த அளவுக்கு தூக்கம் முக்கியம் என்கிறார்கள்.. தூக்கமின்மை பிரச்சனை இருந்தால், செல்கள் அழிவதோடு, அந்த இறந்த செல்கள் வெளியேறாமல் சருமத்திலேயே தங்கிவிடுமாம்.. முதிர்ச்சியான தோற்றத்துக்கு இதுவும் ஒரு பிரதான காரணம்.. அதனால், 8 மணி நேரம் தூக்கம் அவசியம்..
எனினும், சருமத்தில் தோற்றும் பிரச்சனையை எளிய முறையில் எப்படி சரிசெய்யலாம் தெரியுமா? இதற்கு இரவில் தூங்கும் முன்பு, முகத்தை நன்றாக சுத்தம் செய்து கொண்டு, வைட்டமின் சி உள்ள பொருட்களை முகத்தில் பயன்படுத்தலாம். இது சருமத்தை இறுக்கமாக வைத்திருக்க உதவுகிறது.

மசாஜ் : அதேபோல், காலையில் எழுந்தவுடன் முகத்தை சுமார் 2 நிமிடங்களாவது மசாஜ் செய்தால், முகத்தின் துளைகளின் அளவைக் குறைக்க இது உதவும்.. அல்லது, காலையில் எழுந்தவுடன் முதலில் முகத்தை பால் கொண்டு சுத்தம் செய்யலாம்.. ஒருவேளை, சருமம் எண்ணெய் பசையாக இருந்தால் காய்ச்சிய பாலையும், தோல் வறண்டிருந்தால் பச்சை பாலையும் கொண்டு முகத்தை சுத்தம் செய்தால் முகம் பளபளப்பாகும்.. சருமத்தின் துளைகளும் வறண்டு போகாமால் இருக்கு உதவும்.
அதேபோல, அலுவலகத்தில் இருந்தாலும் சரி, வீட்டில் இருந்தாலும் சரி, வெளியில் இருந்தாலும் சரி, ஒவ்வொரு 3 மணி நேரத்திற்கும், முகத்தில் சன்ஸ்கிரீனை பயன்படுத்த வேண்டுமாம்.. இதன் காரணமாக சூரியனின் புற ஊதா கதிர்கள் முகத்தை பாதிக்காது என்கிறார்கள்.
ஆவி பிடிப்பது: முகத்தில் உள்ள அழுக்குகளை விரட்டுவதற்கு ஆவி பிடிப்பது, பேருதவி புரியும் என்கிறார்கள்.. இறந்த செல்கள் வெளியேறுவதுடன், முகப்பருக்களும் குறையும்... முகத்திற்கு ரத்த ஓட்டம் கிடைக்கும். அத்துடன் முதுமை தோற்றதையும் தடுக்கும். முகத்தில், முகப்பரு இருந்தால், 5 நிமிடம் ஆவி பிடித்துவிட்டு, 30 நிமிடம் கழித்து, ஐஸ் கட்டிகளால், முகத்தை தேய்த்தால், அந்த முகப்பரு உடைந்துவிடுமாம்..
பெண்களுக்கு சருமத்தை பராமரிப்பதே மிகப்பெரிய சிக்கலாக உள்ளபோது, எந்த ஒரு பக்கவிளைவும் ஏற்படுத்தாமல், சருமத்தை அழகாக்க சூடான நீரை வைத்து ஆவி பிடிப்பது எப்போதுமே நல்லது என்கிறார்கள்.
நடிகை அருணா: இதனிடையே பிரபல நடிகை ராதிகா ஒரு ஸ்கின் கேர் நிகழ்ச்சி ஒன்றுக்கு சென்றிருந்தபோது, தோல் பராமரிப்பு அவசியத்தை பற்றி கூறியிருந்தார். இந்த நிகழ்ச்சிக்கு ஐஏஎஸ் ராதாகிருஷ்ணன், நடிகை அருணா, அப்சரா உள்ளிட்டோர் கலந்து கொண்டிருந்தனர். இந்த காலகட்டத்தில் எந்த அளவுக்கு, நம்முடைய சருமத்தை பராமரிக்க வேண்டும் என்பதை பற்றி ராதிகா விளக்கியிருந்தார்.

அந்த நிகழ்ச்சியில் ராதிகா தொடர்ந்து பேசும்போது, தோல் பாதுகாப்பு ஆண் - பெண் இருவருக்குமே முக்கியம்.. பொதுவாக அழகான சருமத்தை வைத்து கொள்வதில் பெண்கள் ஆர்வம் காட்டுவார்கள்.. ஆனால், என்னை கேட்டால், தங்கள் சருமத்தை அழகாக வைத்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம், பெண்களை விட ஆண்களுக்குதான் அதிகமாக இருப்பதாக நான் நினைக்கிறேன்.
கிண்டல்: இந்த விஷயத்துக்காக அவங்க பண்ற லோலாய் இருக்கே.. ரொம்ப எக்கச்சக்கமாக இருக்கு.. நான் யாரையும் குறிப்பிட்டு இதை சொல்லல.. பொதுவாக சொல்றேன் என்று ராதிகா கிண்டலாக சொன்னதுமே, அங்கிருந்த ராதாகிருஷ்ணன், அருணா உள்ளிட்டோர் சத்தமாக சிரித்து விட்டனர்..












Click it and Unblock the Notifications