Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"மச்சக்காரன்".. மச்சங்கள் அழகா? ஆபத்தா..ஆண்களுக்கு இந்த இடத்தில் மச்சம் இருக்கா? அலட்சியம் வேண்டாம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பொதுவாக மச்சம் என்றலே அதை அழகுடன் அல்லது சாஸ்திரத்துடன் தொடர்புபடுத்தி பார்த்து விடுகிறோம்.. ஆனால், இந்த மச்சங்கள் உண்மையிலேயே எதனால் ஏற்படுகின்றன? அவைகளை நீக்க முடியுமா?

மச்சத்தை வைத்தே, ஒருவரின் குணாதிசயங்களை சொல்கிறது சாஸ்திரம்.. நெற்றியில் மச்சம் இருந்தால் அது செழிப்பின் அடையாளமாக கருதப்படுகிறது. நெற்றியின் நடுவில் மச்சம் இருந்தால், அது ஞானம் என்று பொருள்...

வலது பக்கத்தில் மச்சம் இருந்தால், தொழிலில் வாழ்க்கையில் ஒரு சிறந்த துணையை கொண்டிருப்பார்கள். இடதுபுறத்தில் மச்சம் இருந்தால் வாழ்க்கையில் அதிர்ஷ்டம் வருவது கஷ்டம்.. உதடுகளுக்கு அருகில் மச்சம் இருந்தால், வாழ்க்கையில் முன்னேற துடிக்கும் நபராக கருதப்படுகிறீர்கள்.. மேல் உதட்டின் வலது அல்லது இடது மூலையில் மச்சம் இருந்தால், நீங்கள் ஒரு உணவுப் பழக்கம் உடையவர் இப்படியெல்லாம் வகைப்படுத்தப்பட்டுள்ளது.

என்ன காரணம்: ஆனால், மச்சம் எதனால் தோன்றுகிறது தெரியுமா? நம்முடைய உடலில் சுரக்கும் மெலனின் சுரப்பியானது, ஒரு சில இடத்தில் மிக அதிகமாக சுரந்துவிடுகிறது.. அப்போது ஒருவிதமான அடைப்பை ஏற்படுத்தும்போதுதான், அந்த இடத்தில் மச்சங்கள் தோன்றுகின்றன.. பிறந்த சில குழந்தைகளுக்கு கால், அல்லது கைகளில் பழுப்பு நிறத்தில் மச்சங்கள் படர்ந்து இருந்தாலும், குழந்தைகள் வளரும்போதே, அவைகள் மறைந்துவிடும்.

அதனால்தான், ஆரோக்கியத்தை வைத்து பார்க்கும்போது, இந்த மச்சங்களினால் பாதிப்புகள் எதுவும் பெரிதாக இருப்பதில்லை.. ஆனால், மச்சங்களின் மேல் அரிப்போ அல்லது திடீரென்று மச்சத்தின் அளவு பெரிதானாலோ, அது உடனடியாக கவனிக்கவேண்டும் என்று வலியுறுத்துகிறார்கள் டாக்டர்கள்..

health news and Do you know how to remove the moles and general information about the moles

மச்சங்கள்: காரணம், ஒன்றிரண்டு மச்சத்துக்கு மேல் அதிகமாக இருந்தால், அது மரபணு கோளாறாக இருக்கலாம்.. ஏகப்பட்ட மச்சங்கள் இருந்தால், அது புற்றுநோயாகவோ இருக்க வாய்ப்புகள் உள்ளதாம்..

இங்கிலாந்தின் சால்ஃபோர்டை சேர்ந்தவர் டார்சி.. இவர் ஒரு டீச்சர்.. 24 வயதாகிறது.. இவருக்கு 21 வயதாக இருந்தபோது, இவரது காலர்போன்-ல் (collarbone) ஒரு மச்சம் இருந்துள்ளது.. அது பெரிதாகிக்கொண்டே வந்துள்ளது.. அத்துடன் கருமையாகவும் மாற துவங்கி உள்ளது.. அதற்கு பிறகு டாக்டர்களிடம் சென்று பார்த்ததில், தோல் புற்றுநோய், அதாவது ஸ்கின் கேன்சர் என்று ரிசல்ட் வந்தது.. ஆபத்தான ஸ்கின் கேன்சரான மெலனோமா இருந்ததையடுத்து, டார்சி சிகிச்சையும் எடுத்து கொண்டாராம்.

பெரிய மச்சம்: அதனால், மச்சம் சாதாரண இயல்பு நிலையிலேயே இருந்தால் பரவாயில்லை, அதே மச்சம் பெரிதாக கொண்டே போகக்கூடாது, உடனடியாக டாக்டரை அணுக வேண்டும் என்கிறார்கள். அதாவது, மச்சங்கள் கரடுமுரடான முனைகள் இல்லாமலும், வழுவழுப்பாகவும் குவிந்த வடிவிலும் இருந்தாலோ, 3 முதல் 6 மி.மீ விட்டத்தில் இருந்தாலோ, அளவிலும் நிறத்திலும் வடிவத்திலும் மாறாமல் அப்படியே இருந்தாலோ, அவை ஆபத்தில்லாத மச்சங்கள் என்று எடுத்துக்கொள்ளலாம்.

ஆனால், மச்சங்களில் ஏதேனும் மாற்றங்களை உணர்ந்தால், அதை மட்டும் அலட்சியப்படுத்தக்கூடாது. சருமத்தில் திடீரென மச்சம் போல தோன்றினாலும், கூட அலட்சியப்படுத்தக்கூடாது.. ஆண்களுக்கு நெஞ்சு மற்றும் முதுகுப் பகுதியிலும், பெண்களுக்கு கால்களின் கீழ்ப்பகுதியிலும் இந்த அறிகுறிகள் தெரியும் என்கிறார்கள் டாக்டர்கள்.

சிகிச்சை: சிலருக்கு அழகை கொடுக்கும் இதே மச்சம் சிலருக்கு அழகை கெடுக்கவும் காரணமாகிவிடுகிறது.. அதனால்தான், மச்சங்களை லேஸர் முறையை பயன்படுத்தி நீக்கும் முறைகள் அதிகமாகிவிட்டது.. ஆனால், இந்த Radio frequency முறை இதற்கு தகுந்தது கிடையாது என்கிறார்கள்.

வேண்டுமானால், முறையான பிளாஸ்டிக் சர்ஜனிடம் சென்று மச்சங்களை அகற்றி கொள்ளலாம்.. ஒருவேளை மச்சங்களை சரிவர முழுமையாக நீக்காமல்விட்டால், அந்த இடத்தில் காயங்கள், அரிப்புகளும் கிளம்பலாம்.. இதுவே சரும புற்றுநோய் வரவும் காரணமாக அமைந்துவிடும் என்கிறார்கள்.

எளிய வைத்தியம்: சிலர் இதற்கு எளிமையான வீட்டு வைத்தியத்தையும் சொல்கிறார்கள்.. அதாவது, வாழைப்பழத்தோலையும் மச்சத்தை நீக்க பயன்படுத்தலாம்.. காரணம், வாழைப்பழத்தோலில் ஆக்சாலிக் அமிலம், அஸ்கார்பிக் அமிலம் என அடங்கியிருப்பதால், சருமத்தில் தேவையற்ற இந்த தோல் நிறமியை வெளியேற்ற உதவுகிறது.. வாழைப்பழத்தோலை நறுக்கி, மச்சம் உள்ள இடத்தில் கட்டிவிட்டு, மறுநாள் காலை எடுத்துவிடலாம்.

பூண்டு பற்களையும் இடித்து சாறுடன் மச்சம் மீது வைத்து மெல்லிய சுத்தமான வெள்ளைத்துணியால் ஒட்டி வைத்து, மறுநாள் காலை எடுத்துவிடலாம். இதையும் தினமும் செய்தால் பலன் தெரியுமாம். அல்லது ஆப்பிள் சீடர் வினிகரை பருத்தி பஞ்சில் நனைத்து மச்சம் இருக்கும் இடத்தில் வைத்து, பஞ்சு கீழே விழாமல் இருக்க அதன் மேல் டேப் ஒட்டிவிட வேண்டும்.. 5 அல்லது 6 மணி நேரம் வரை வைத்திருந்து பிறகு டேப் நீக்கிவிட்டால், மச்சம் மறைந்துவிடும் என்கிறார்கள்.

பேக்கிங் சோடாவையும் மச்சத்தை நீக்க பயன்படுத்தலாம்.. இரவில் தூங்க செல்லும்முன்பு, அரை டீஸ்பூன் பேக்கிங் சோடாவில், விளக்கெண்ணெய் சேர்த்து பேஸ்ட் போல கலந்து, மச்சம் மீது தடவிவிட்டு, அதற்கு மேல் "பேண்ட் எய்ட்" போட்டுவிடலாம்.. பிறகு மறுநாள் காலை எடுத்துவிடலாம்.. இப்படி தொடர்ந்து செய்தாலும் பலன் கிடைக்குமாம்.

டாக்டர்கள் அட்வைஸ்: பொதுவான தகவல்களின் அடிப்படையில், எத்தனையோ மருத்துவ குறிப்புகள் இணையத்தில் சொல்லப்பட்டாலும், அவைகளை எல்லாம், மருத்துவ ஆலோசனையைப் பெற்றே, கடைப்பிடிக்க வேண்டும் என்பதே உண்மை. அதேசமயம், மச்சம் சற்று பெரிதாவது போல தெரிந்தாலும், உடனடியாக டாக்டரை சந்திப்பது நல்லது என்கிறார்கள். காரணம், எல்லா மச்சங்களையும் அழகு என்று நினைத்துக் கடந்துபோக முடியாதே..!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+