"கருணைக்கிழங்கு".. கருணை காட்டும் கிழங்கு.. ஒரே அதிசயமா இருக்கே.. "இவங்க" மட்டும் இதை தொட்டுடாதீங்க
சென்னை: மண்ணுக்கு அடியில் விளையக்கூடிய காய்கறிகள் எல்லாமே உடலுக்கு தீங்கு என்று ஒதுக்கிவிடுகிறார்கள்.. அதில், இந்த கருணைக்கிழங்கும் ஒன்று.. ஆனால், எல்லாவற்றையுமே இப்படி தவிர்க்க தேவையில்லை என்கிறார்கள்.
கிழங்கில் சிறந்தது கருணை என்பார்கள் பெரியவர்கள்.. இதன் மருத்துவ குணம் தெரிந்ததால்தான், அன்றைய காலங்களில் வாரத்துக்கு 3 முறையாவது இந்த கிழங்கை சமைத்துவிடுவார்களாம். இந்த கருணைக்கிழங்கில் உள்ள மருத்துவ குணங்களை பார்ப்போம்.

மூலநோய்: மூலநோயால் பாதிக்கப்பட்டவர்கள், அதை முற்றிலும் குணப்படுத்த விரும்பினால், கருணைக் கிழங்கை தொடர்ந்து சாப்பிட்டு வர நிவாரணம் கிடைக்கும். மூல நோய்க்கு மிகச்சிறந்த மருத்துவ உணவாக இருந்துவருகிறது இந்த கருணை..
பொதுவாக, சர்க்கரை நோய் உள்ளவர்கள் எல்லாவகையான கிழங்குகளையும் தவிர்க்க வேண்டும்... ஆனாலும், இந்த கருணைக்கிழங்கு மட்டும் சிறிதளவு எடுத்துக் கொள்ளலாம் என்கிறார்கள்.. அதேபோல, முடக்குவாதம் உள்ளவர்களும், கருணைக்கிழங்கு மட்டும் எடுத்துக் கொள்ளலாம் என்பார்கள்.. முடக்குவாதம் உள்ளவர்கள், வாரம் 2 முறை இதை சாப்பிட்டு வந்தால், நோய் குணமாகும்... இந்த கிழங்கு, சுலபமாக ஜீரணமாவது என்பதால், பெரியவர்கள் தாராளமாக சாப்பிடலாம்.
ஆஸ்துமா: ஆனால், ஆஸ்துமா இருப்பவர்கள் இந்த கிழங்கை தவிர்க்க வேண்டும்.. காரணம், கருணைக்கிழங்கு, உடலை குளிரச் செய்யும் உணவாகும்.. அதேபோல, சர்க்கரை நோயாளிகள், இதய பாதிப்பு உள்ளவர்கள், ரத்த அழுத்தம் உள்ளவர்கள் கிழங்குகள் சாப்பிடுவதில் கவனமாக இருக்க வேண்டியது அவசியம்.. டாக்டர்களிடம் ஆலோசனை பெற்று, அதற்கேற்றபடி கிழங்குகளை சாப்பிடுவது நல்லது.. ஒவ்வாமை இருப்பவர்களும் டாக்டரை அணுகி ஆலோசனை பெற்றுக்கொள்வது நல்லது.
கருணை கிழங்கை கொண்டு மாதவிலக்கு பிரச்னைக்கான மருந்து தயாரிக்கிறார்கள்.. வேகவைத்து மசித்த கருணைக்கிழங்கு, ஒரு ஸ்பூன் அளவுக்கு எடுத்துக் கொண்டு, இதனுடன் வெல்லம் சேர்த்து கலந்து மாதவிலக்கு முன்பு சாப்பிட்டுவர கைகால் வலி இடுப்பு வலி, வயிற்று வலி, தலைவலி போன்றவை வராமல் இருக்குமாம். எனவே, பெண்கள் இதை உணவில் எடுத்துக்கொள்வதால், மாதவிலக்குக்கு முன்பு ஏற்படும் பிரச்னைகள் கட்டாயம் நீங்கும்..
மாதவிலக்கு: வலியுடன் கூடிய மாதவிலக்கு, அதிகப்படியான ரத்தபோக்கை தடுக்கிறது. உடலில் உள்ள அனைத்து பாகங்களுக்கும் பலத்தை தருகிறது. பெண்களின் வெள்ளைப்பாடு தொந்தரவுக்கு சிறந்த மருந்தாகவும் பயன்படுகிறது. பெண்களின் ஹார்மோன் பிரச்னைகளைக் கூட கட்டுப்படுத்தும். முக்கியமாக, 40 வயதுக்கு மேல் வரும் மெனோபாஸ் பிரச்சனையின் போது, பெண்களின் ஈஸ்ட்ரோஜன் அளவை இது அதிகப்படுத்துகிறது.
உடல் எடையை குறைக்க விரும்புவர்கள், இந்த கருணைக்கிழங்கை தாராளமாக சாப்பிடலாம். குடலில் கிருமி சேராமல் தடுத்து, கொழுப்பு அதிகமாக சேர்வதை குறைக்கிறது இந்த கருணைக்கிழங்கு..
கொழுப்பு: "குண்டுடல் கொடுக்கும் உருளைக்கிழங்கு, குண்டுடல் குறைக்கும் கருணைக்கிழங்கு" என்றே ஒரு பொன்மொழி இருக்கிறது.. அந்த அளவுக்கு கொழுப்பு சத்தை கரைக்க கூடியது அதாவது, கொழுப்பு சத்து ரத்தநாளங்களில் படிவதை கருணை கிழங்கு தடுக்கிறது... நச்சுக்களையும் வெளியேற்றும் நல்மருந்தாக இருப்பதால், உடல் எடை குறைப்பவர்களுக்கு அருமருந்தாக விளங்குகிறது.
வேகவைத்து அரைத்து மசித்த கருணை கிழங்கு, ஒரு ஸ்பூன் எடுத்துக்கொண்டு, அதில் சிறிது நீர் கலந்து, சோம்பு, தனியா சேர்ந்த பொடி ஒரு ஸ்பூன் சேர்க்கவும். இதனுடன் சிறிது பனங்கற்கண்டு சேர்த்து கொதிக்க வைக்கவும். இதை வடிகட்டி குடித்துவந்தால், கொழுப்பு கரையும் என்கிறார்கள்.. உயர் ரத்த அழுத்தமும் குறைகிறதாம்
மசித்த கிழங்கு: மசித்த கிழங்கை ஒரு ஸ்பூன் எடுத்துக்கொண்டு, 2 ஸ்பூன் தயிர் சேர்த்து கலந்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டுவர நெஞ்செரிச்சல், அல்சர் குணமாவதுடன், மலச்சிக்கலும் தீருமாம்.
அதேபோல, உடல் எடை அதிகமாகி, இதனால் மூட்டுவலி உட்பட கோளாறுகளால் அவதிப்படுவோர், தினசரி அவசியம் சாப்பிட வேண்டியது கருணைக்கிழங்கு. கல்லீரலையும் சிறப்பாக செயல்பட வைக்கிறது.. மேலும், உயர் ரத்த அழுத்தத்தை குறைக்க பயன்படுகிறது. மாங்கனீஸ், பொட்டாசியம், இரும்பு உட்பட சத்துகள் இந்த கருணையில் உள்ளதால், கபம், வாதம், ரத்த மூலம் ஆகியவை குணப்படுத்தப்படுகின்றன..
பசியை தூண்டிவிடுகிறது.. இரைப்பைக்கும் பலம் சேர்க்கிறது. சித்தாவிலும் சரி, ஆயுர்வேத மருத்துவத்திலும் சரி, கருணைக் கிழங்கு லேகியம் ரொம்ப பிரபலம்..
எப்படி சமைக்க வேண்டும்: கருணையின் தோலை சீவும்போதே, கைகளில் நமைச்சலை தரக்கூடியது.. கருணைக்கிழங்கு நறுக்குவதற்கு முன்பு, கைகளில் எண்ணெய்யை தடவிக்கொண்டு சீவ வேண்டும் என்கிறார்கள்.. மேலும், இந்த கிழங்கை நன்றாக வேக வைத்து, தோலை உரித்து, பிறகு, புளி சேர்த்து சமைத்தால், அதிலுள்ள காரல் நீங்கிவிடும்.. அரிப்பும் இருக்காது... அல்லது அரிசி கழுவிய நீரில், கருணைக்கிழங்கை வேக வைத்தாலும், நமைச்சல் கட்டுப்படும். இந்த கிழங்கை சமைக்கும்போது, புளிக்கு பதிலாக சிலர் மோர் பயன்படுத்துவார்கள்.
வைட்டமின் "சி', ஆன்ட்டி ஆக்சிடென்ட்டுகள் இதில் அதிகம் உள்ளன... அல்சரை குணப்படுத்தக்கூடியது.. ஜீரண மண்டல உறுப்புக்கள் சரியாக வேலை செய்ய வைக்க கருணை கிழங்கு உதவுகிறது. கருணைக்கிழங்கு சாப்பிடுவதால், கபம், வாதம், ரத்த மூலம் ஆகியவை குணமாகின்றன. பசியை தூண்டி, இரைப்பைக்கு பலம் சேர்க்கும். கருணைக்கிழங்கில் இருக்கும் அற்புத நன்மைகள், காய்ச்சலை போக்கும் தன்மை கொண்டவை
தவிர்க்க முடியாதது: அனைத்து விதமான நோய்களில் இருந்தும் கருணைக்கிழங்கு காக்க வல்லது என்பதால்தான், இதனை கருணைக் கிழங்கு என்கிறோம்.. எனவே, விலக்கிவைத்துவிட வேண்டாம்..
-
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு












Click it and Unblock the Notifications