"நாட்டுக்கோழி".. நாட்டுக்கோழிக்குழம்புல இதை மறந்துடாதீங்க.. "அந்த" பிரச்சனை இருப்போருக்கு அருமருந்து
சென்னை: நாட்டுக்கோழியை அவ்வளவு எளிதாக நம்மால் ஒதுக்கி தள்ளிவிட முடியாது.. காரணம், அவ்வளவும் மருத்துவ குணங்கள் நிரம்பி கிடக்கும் உயிரினம் அது.!
நாட்டுக்கோழி 200 நாட்கள் சேர்ந்து வளர வேண்டியதை, பிராய்லர் கோழிகள் 45 நாட்களில் வளர்கிறதென்றால் அதன் வளர்ச்சி வித்தியாசம் அதிர வைக்கிறது..
ஹார்மோன் ஊசிகள் மூலம் வளர்ப்பதுடன், சூரிய ஒளியே படாத கூண்டுக்குள் அடைக்கப்பட்டிருக்கின்றன. இதனால் அந்த கோழிகளுக்கு கால்சியம் கிடைக்கப் பெறுவதில்லை. கொழுப்புச் சத்து கூடுகிறது..

அதாவது, 100 கிராம் நாட்டுக்கோழியில் 4 கிராம் கொழுப்புதான் இருக்கிறது. ஆனால், 100 கிராம் பிராய்லரில் 23 கிராம் கொழுப்பு இருக்கிறதாம்.. 100 கிராம் பிராய்லரில் 16 கிராம் புரதமும், இதுவே 100 கிராம் நாட்டுக்கோழியில் 21 கிராம் புரதமும் இருக்கிறதாம்.. எந்த உணவு கொழுப்பு குறைவாகவும், புரதம் அதிகமாகவும் இருக்கிறதோ, அதுவே சிறந்த உணவு என்கிறார்கள்.. அந்த அடிப்படையில்தான், நாட்டுக்கோழியை சிறந்த உணவில் சேர்க்கிறார்கள்.
பலன்கள்: அந்தவகையில் இதன் பலன்களும் ஏராளம்.. முன்பெல்லாம் வீடுகளில் "கோழி அடித்து குழம்பு வைப்பது" என்றுதான் சொல்வார்கள்.. அதற்கு காரணம் இந்த நாட்டுக்கோழிகள்தான். உறவினர்களை விருந்தோம்பலுக்கும்சரி, நொந்துபோன உடல்நலிவுக்கும் சரி, இந்த நாட்டுக்கோழி அருமருந்தாகிறது.
சுவாச நோய்களுக்கு நாட்டுக் கோழி சிறந்த மருந்து.. அதனால்தான், சளி, இருமல் இருந்தாலும், உடனே நாட்டுக்கோழியை பிச்சுப்போட்டு, மிளகு சேர்த்து, ரசம் வைத்துவிடுவார்கள் அந்த காலத்து பெரியவர்கள். நாட்டுக்கோழி ரசம், நாட்டுக்கோழிக் குழம்பு வைத்து, குழைய குழைய சாதத்துடன், இவைகளை கலந்து சாப்பிட்டு வந்தார்கள்.
உடலுக்கு தெம்பு தருவது இந்த நாட்டுக்கோழி.. தசைகளுக்கு உறுதி தருபவை.. நரம்புகளுக்கு உரத்தை தருபவை.. காமத்தைத் தூண்டும் உணவு பட்டியலில் நாட்டுக் கோழிக்கு முக்கிய இடமுண்டு என்கிறார்கள்.
அஜீரணக்கோளாறு: நாட்டுக்கோழி சமையல், உடலுக்கு சூடு கொடுக்கும் குணம் உண்டு.. அதனால், பருவகாலத்துக்கு ஏற்றபடி, இந்த கோழியை சமைத்து சாப்பிட வேண்டும்.. முக்கியமாக குளிர்காலத்தில் இந்த கோழியை உணவில் சேர்த்து கொள்ளலாம்.. ஆனால், அதிகமாகச் சாப்பிட்டால் வயிற்றுப்போக்கு ஏற்பட்டுவிடும்.. சிலருக்கு அஜீரணமும் உண்டாகும்.
நாட்டுக்கோழி சமைப்பதானால், அதற்கான மசாலாக்களை வீட்டிலேயே தயாரித்து பயன்படுத்த வேண்டும்.. இன்னும் ஒருபடிமேலே போய், அம்மியில் அரைத்து குழம்பு வைத்தால், அமோக ருசியாக இருக்கும்.
நாட்டுக்கோழியை போலவே அதன முட்டைகளும் சத்து நிறைந்தவையே.. இதன் முட்டைகளில் புரதச்சத்து அதிகம் உள்ளது.. இந்த முட்டை தினமும் சாப்பிட்டு வந்தால், புரத சத்து குறைபாடு நீங்குவதுடன், கண்கள் சம்பந்தமான குறைபாடுகளும் காணாமல் போகும்... எலும்புகள் உறுதியாகும். இதில், கொழுப்பு சத்து அதிகம் என்றாலும், ரத்தத்தில் கொலஸ்ட்ரால் அளவை உயர்த்தாது. மேலும், கொலஸ்ட்ரால் அளவு சரியான அளவில் இருக்க விரும்புவார்கள் தாராளமாக இந்த நாட்டுக்கோழி முட்டையை சாப்பிடலாம்.
பலம்கூடும்: எலும்புகள் உடைந்து சிகிச்சையில் இருப்பவர்களுக்கும், இந்த நாட்டு முட்டை அருமருந்தாகிறது.. உடைந்த எலும்புகள் சீக்கிரத்திலேயே ஒன்றுகூடும்...
நாட்டுக்கோழி முட்டை பெண்களுக்கு மிகவும் நல்லது.. மெலனின் புரத சத்து அதிகம் உள்ளதால், தலைமுடி மற்றும் நகங்கள் ஆரோக்கியமாக இருக்கும். கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு தேவைப்படும் அனைத்து வகையான சத்துக்களும் இந்த நாட்டுக்கோழி முட்டையில் உள்ளது.. இதிலுள்ள புரதம், கால்சியம் கர்ப்பிணி பெண்களுக்கும், வயிற்றிலுள்ள குழந்தைகக்கும் தேவையான ஊட்ட சத்தை தருகிறது.
ஆரோக்கியம்: பெண்களை போலவே ஆண்களுக்கும் இந்த நாட்டுக்கோழி முட்டை மிகவும் பயன்தருகிறது.. நரம்பு தளர்ச்சியை போக்குகிறது.. மலட்டு தன்மையையும் நீக்கி ஆரோக்கியமான குழந்தை பெற உதவுகிறதாம்..
பிறந்து சில நாட்களிலேயே, ஹார்மோன் ஊசிகள் மூலம் வளர்ந்து, உடம்பெல்லாம் நோய்களை அடக்கிக்கொண்டு, எங்குமே நகர முடியாமல் கிடக்கும் பிராய்லர் கோழிகளைவிட, கிராமங்களின் வீதிகளிலும், வீடுகளிலும், வயல்வெளிகளிலும், சிதறி கிடக்கும் தானியங்களை தின்றுவிட்டு, உற்சாகமாக சுற்றித்திரியும் நாட்டுக்கோழிகள் எவ்வளவோ மேல்...!!












Click it and Unblock the Notifications