ஆசனவாய் பகுதியில் அரிப்பு ஏற்படுகிறதா? அசால்ட்டா எடுத்துகாதீங்க! பின்விளைவுகள் அதிகமாகும்
சென்னை: ஆசனவாய் பகுதியில் அரிப்பு ஏற்படுகிறதா, இதற்கெல்லாம் என்ன காரணம் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
வாழ்க்கை மாற்றத்தால் மனிதனுக்கு சாப்பிடுவது முதல் மலம் கழித்தல் வரை அனைத்திலுமே பிரச்சினைதான். ஒன்று சரியாக சாப்பிட முடியாமல் வயிறு உப்புசமாக இருத்தல், ஜீரணமாகாமல் இருத்தல் உள்ளிட்ட பிரச்சினை ஏற்படுகிறது.
இல்லாவிட்டால் போனா போயிகிட்டே இருக்கு. இல்லாட்டி முக்கினாலும் கூட ஆட்டுப்புழுக்கைதான் வருகிறது. இதற்கெல்லாம் என்ன காரணம் வாழ்க்கை முறைதான். அவ்வாறு பெரும்பாலானோருக்கு உடல் உபாதைகள் ஏற்படும் போது பொதுவாக பலருக்கும் ஏற்படுவது என்ன தெரியுமா.
ஆசனவாய் பகுதியில் எரிச்சல் அல்லது நமிச்சல் ஏற்படுகிறது. அதுவும் பொது இடங்களில் அரிப்பு ஏற்பட்டால் நெளிந்தபடியே பாத்ரூமை தேடி ஓடும் நிலை ஏற்படுகிறது. இதனால் அனைவருக்கும் சங்கடம் ஏற்படுகிறது. இதை கவனிக்காமல் விட்டுவிட்டால் பிரச்சினை ஏற்பட வாய்ப்பிருக்கிறது.

ஆசனவாய் பகுதியில் ஏற்படும் அரிப்பிற்கு ப்ரூரிடஸ் அனி என அழைக்கிறார்கள். ஒரு சில காரணங்களால் இது ஏற்படுகிறது. குறிப்பாக மூலம், வயிற்றுபோக்கு, நோய் தொற்றுகள் இருந்தால் ஆசனவாய் பகுதியில் எரிச்சலை கொடுக்கும். இந்த தொற்று தீவிரமாவதை சில அறிகுறிகள் மூலம் தெரிந்து கொள்ளலாம். ஆசனவாய் பகுதியில் தீவிரமான அரிப்பு இருக்கும்.
வீக்கம், எரிச்சல் ஆகியவை இருந்தால் நீங்கள் மருத்துவரிடம் செல்ல வேண்டும் என்பதுதான் அந்த அறிகுறிகளின் அர்த்தம். மேலும் அந்த பகுதியில் புண் ஏற்பட்டிருந்தால் அலட்சியமாக இருந்துவிடாதீர்கள். ஆசனவாய் பகுதியில் அரிப்பு என்பது அதிக வெப்பம், அதிக ஈரப்பதமான காலநிலையில் ஏற்படும்.
வயிற்றுப்போக்கு, சுகாதாரமற்ற கழிப்பிடம், ரசாயன பொருட்களை பயன்படுத்துதல், உள்ளாடைகளுக்கு உபயோகப்படுத்தும் சோப்பின் தரம் ஆகியவற்றால் ஏற்படலாம். உடலை எப்போதும் குளிர்ச்சியாக வைத்திருக்க வேண்டும், ஆசனவாய் பகுதியை ஈரப்பதம் இல்லாமல் வைத்திருக்க வேண்டும். உடலுறவு மூலமும் தொற்றுகள் பரவுவதால் அரிப்பு ஏற்படலாம். எனவே குழந்தை பேறுக்கு முயற்சிக்காத போது உடலுறவுக்கு பிறகு அந்தரங்க உறுப்பையும் ஆசனவாய் பகுதியையும் தண்ணீரால் சுத்தப்படுத்த வேண்டும்.
அது போல் மலம் கழிக்கும் போது ரத்தம் வந்தால் உடனே மருத்துவமனைக்கு செல்ல வேண்டும். நாளாக நாளாக மலம் கட்டிக் கொண்டு சிரமப்பட்டு போக வேண்டிய நிலை இருந்தாலும் மருத்துவரின் ஆலோசனை பெறுவது நல்லது. சுய மருத்துவம் எதையும் செய்யக் கூடாது. அதே வேளையில் உடலுக்கு குளிர்ச்சியை கொடுக்கும் காய்கறிகள், பழங்களை சாப்பிடலாம்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications