Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மழை காலம் நெருங்கிடுச்சு.. உடனே இதை பண்ணுங்க.. தலைமை செயலாளர் போட்ட ஆர்டர்.. மக்களுக்கு எச்சரிக்கை!

Subscribe to Oneindia Tamil

சென்னை; தமிழ்நாட்டில் மழைக்காலம் நெருங்கி வரும் நிலையில் டெங்கு மற்றும் தொற்று நோய்த்தடுப்பு நடவடிக்கைகள் குறித்து துறை சார்ந்த அலுவலர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் பல முக்கியமான அறிவிப்புகள் வெளியிடப்பட்டு உள்ளன.

தமிழ்நாட்டில் டெங்கு மற்றும் தொற்று நோய்கள் பரவாமல் தடுக்க தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினின் அறிவுறுத்தலின்படி பல்வேறு நடவடிக்கைகள் தீவிரமாக எடுக்கப்பட்டு வருகின்றன.இதன் படி தமிழக அரசு சுகாதாரத்துறை மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் போன்ற பல்வேறு துறைகளுடன் ஒருங்கிணைந்து கொசு ஒழிப்பு, விழிப்புணர்வு ஏற்படுத்துதல், காய்ச்சல் கண்டறிதல், காய்ச்சல் கண்ட இடங்களில் உடனடி தடுப்பு நடவடிக்கைகைளை மேற்கொள்ளுதல், மருத்துவ முகாம்கள் நடத்துதல் போன்ற தொடர்நடவடிக்கைகளின் காரணமாக தமிழகத்தில் டெங்கு மற்றும் தொற்று நோய்கள் கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது.

Health: Tamil Nadu government important order to curbing Dengue fever ahead of monsoon

இருப்பினும் தற்போது தமிழகத்தில் அவ்வப்போது விட்டுவிட்டு மழை பொழிவதால் டெங்கு போன்ற தொற்றுநோய்கள் பரவுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளதால் தொற்றுநோய்கள் பரவலை தடுக்க மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்து துறை சார்ந்த அலுவலர்கள் அடங்கிய ஒருங்கிணைந்த ஆலோசனைக் கூட்டம் 12.09.2023 இன்று தலைமைச் செயலர் திரு.சிவ் தாஸ் மீனா இ.ஆ.ப., அவர்கள்_தலைமையில் நடைபெற்றது. இதில் அரசுத் துறையை சார்ந்த செயலாளர்கள், துறை சார்ந்த இயக்குநர்கள் கலந்துகொண்டு ஆலோசனை வழங்கினர்.

தமிழகத்தில் மொத்தம் 2972 அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளிலிருந்து தினசரி காய்சல் கண்டவர்கள் அறிக்கை பெறப்பட்டு, கிராம, நகர வாரியாக பட்டியல் தயார் செய்து ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு நோய் தடுப்பு பணிகளை மேடற்கொள்ள அன்றே அனுப்பப்பட்டு வருகிறது.

டெங்கு காய்ச்சலை தடுக்க உள்ளாட்சி அமைப்புகளுடன் ஒருங்கிணைந்து கிராமம் மற்றும் நகர்ப்புறங்களில் கொசுப்புழு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள சுமார் 21307 தினசரி தற்காலிக பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டு கொசுப்புழு தடுப்பு பணிகளை அன்றாடம் மேற்கொண்டு வருகின்றனர்.

தென்மேற்கு பருவமழை காரணமாக டெங்குக் காய்ச்சலை பரப்பும் கொசுக்கள்
உற்பத்தியாவதால் தடுப்பு நடவடிக்கைகளை மாவட்ட அளவில் துரிதப்படுத்த நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது.

ஏடிஸ் கொசுக்களில் டெங்குவைரஸ் உள்ளதா என பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, அதன் படி அப்பகுதிகளில் டெங்கு பாதிப்பு உண்டாகும் முன்பே மாவட்ட அளவில் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்குத் தேவையான உயிர்காக்கும் மருந்துகள், இரத்த அணுக்கள், பரிசோதனைக் கருவிகள் இரத்தக்கூறுகள் மற்றும்
இரத்தம் ஆகியவை போதிய அளவில் இருப்பில் வைக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு மாவட்டத்திலும் வட்டார அளவிலான துரித செயல்பாட்டு குழு இயங்கி வருகிறது. எந்தப் பகுதியில் 3-க்கும் மேற்பட்ட நபர்களுக்கு காய்ச்சல் இருப்பது கண்டறியப்பட்டால், அப்பகுதியில் உடனடியாக காய்ச்சல் ஏற்படுவதற்கான காரணத்தைத் கண்டறிந்து, அதை முற்றிலும் ஒழிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
பொது சுகாதாரத்துறையினரோடு இணைந்து உள்ளாட்சி அமைப்புகள், டயர், பிளாஸ்டிக்கப்புகள், தேங்காய் சிரட்டை போன்ற தேவையற்ற கொசு உற்பத்தியாகும் பொருட்களை அகற்றும் பணியினை மேற்கொண்டு வருகின்றனர்.
பொது கட்டிடங்கள், அரசு அலுவலகங்கள், உணவகங்கள், பூங்காக்கள், திரையரங்குகள், திருமணமண்டபங்கள், கல்விநிலையங்கள், தொழிற்சாலைகள் ஆகியவற்றை பார்வையிட்டு கொசு உற்பத்தியாகும் இடங்களைக் கண்டறிந்து அவற்றை அகற்றும் பணி நடைபெற்று வருகின்றன.
இந்திய மருத்து முறை மருந்துகளான நிலவேம்பு குடிநீர் அரசு மருத்துவமனைகள் மற்றும் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களில் வழங்கப்பட்டு வருகின்றது.
காய்ச்சல் ஏற்பட்டவுடன் பொது மக்கள் மருத்துவமனையை அணுகுமாறும் .தாங்களாகவே எந்த மருந்தும் உட்கொள்ளக் கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டு வருகின்றனர். மற்றும் கடைகளில் பொது மக்களுக்கு (உரிய) மருத்துவரின் பரிந்துரையின்றி மருந்துகள் வழங்கக் கூடாது என்று மருந்து கட்டுப்பாட்டுத் துறையின் மூலம் அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

கொசு உற்பத்தியை தடுக்க 16005 எண்ணிக்கையில் புகை அடிக்கும் இயந்திரங்களும், பூச்சிக் கொல்லி மருந்துகளான பைரித்திரம் 66,889லி, மாலத்தியான் 1.28.721லி மற்றும் டெமிபாஸ் 49.593லி கையிருப்பில் உள்ளது.

அனைத்து மாவட்டங்களிலும் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவர்களுக்கு காய்ச்சல் சிகிச்சை குறித்த சிறப்புப் பயிற்சி மருத்துவ வல்லுநர்களால் அளிக்கப்பட்டு வருகிறது. மழைக் காலங்களில் கொசு புழுக்கள், நீர்த்தேக்கங்களில் உற்பத்தியாகி டெங்கு, மலேரியா போன்ற நோய்கள் பரவாமல் இருக்க கொசுப்புழு உற்பத்தியாகும் இடங்களை அடியோடு அகற்றிடவும், பூச்சிக்கொல்லி மருந்துகள் தெளிக்கும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன.

குடிநீர் மாசுபடாமல் தடுக்க, பாதுகாப்பான குடிநீர், போதிய அளவு குளோரின் கலந்து விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. காய்ச்சல் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உடைந்த குடிநீர் குழாய்களைக் கண்டறிந்து உடனடியாக சரிசெய்யப்பட்டு வருகிறது. காய்ச்சல் கண்ட பகுதிகளில் தற்காலிக மருத்துவ முகாம்களில் மருத்துவ குழுக்கள் அமைக்கப்பட்டு தேவையான சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது. எதிர் வரும் வடகிழக்கு பருவ மழையின் போது தொற்றுநோய் பரவாமல் தடுக்க அரசு மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் தீவிர நடவடிக்கை எடுத்து வந்த போதிலும், பொது மக்களும் தங்கள் வீடுகளைச் சுற்றி கொசுக்கள் தேங்கா வண்ணமும், குடிநீர் மாசுபடாமல் இருக்கவும் போதிய ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+