இறால் மீன் வாங்கறீங்களா.. அங்கே "தலையை" பார்த்தீங்களா.. மறந்தும்கூட இதை செய்யாதீங்க.. அற்புத இறால்
சென்னை: மீன்வகைகளிலேயே இறால் மீன்களுக்கு ஒரு தனிஇடம் உண்டு.. தனி சுவையும் உண்டு.. தனி முக்கியத்துவமும் உண்டு.. ஏன் தெரியுமா? நல்ல இறால் என்பதை எப்படி பார்த்து வாங்க வேண்டும் தெரியுமா?
இறால் மீனில் உள்ள சத்துக்கள் அபரிமிதமானவை.. கனிமச்சத்தின் அளவு அதிகமாக உள்ளது. ஹீமோகுளோபினில் ஆக்ஸிஜன் கலக்கும் செயலில் முக்கிய பங்கு வகிக்கிறது இந்த கனிமம்.

அதிக சத்து: கூடுதல் இரும்புச்சத்து உடம்பில் ஏறும்போது, தசைகளுக்கு கூடுதல் அளவிலான ஆக்ஸிஜன் செல்லக்கூடும். இறால் மீனை குழந்தைகள் சாப்பிட்டு வந்தால், மூளைக்கு செல்லும் ஆக்ஸிஜனின் அளவும் அதிகரித்து ஞாபக சக்தி அதிகரிக்கும்,
இறாலில் அயோடின் சத்து நிறைய உள்ளதால், உடலில் தைராய்டு ஹார்மோன்கள் சுரக்க பேருதவி புரிகின்றன.. இந்த ஹார்மோன்கள் குழந்தை பருவத்திலும், கர்ப்பமாக இருக்கும் நேரத்திலும், மூளையின் வளர்ச்சிக்காக தேவைப்படுகிறது. இறாலில் புரதம், கால்சியம், பொட்டாசியம் மற்றும் பல வைட்டமின்கள் உள்ளன. பல வகை புற்றுநோய்களில் இருந்து காப்பதுடன், நுரையீரல் புற்றுநோய்க்கு எதிராக போராடும்.
எப்படி வாங்குவது: இறால் வாங்கும்போது, எப்போதுமே அதன் தலையை சரிபார்க்க வேண்டும் என்கிறார்கள்.. இறால் தலை சுத்தமாகவும், வலுவாகவும், உறுதியாகவும் இருந்தால், அது ஃபிரஷ்ஷான இறால் என தெரிந்து கொள்ளலாம்.
அதேபோல, இறாலின் ஷெல் போன்ற ஓடு பகுதியும் உறுதியாகவும், கடினமாகவும் இருக்க வேண்டும். மென்மையான ஓடுகள் இருந்தால், அல்லது தளர்வான கால்கள் இருந்தால், அல்லது மெல்லிய அமைப்பை கொண்டிருந்தால், அவை பழைய இறால்கள் என அறிந்துய கொள்ளலாம். அதன் வாசனையே இறாலின் தன்மையை காட்டித்தந்துவிடும்.. மீன் போன்ற வாசனை இருந்தால் அவற்றை தவிர்த்து விடலாம்.

சுத்தம் செய்யும் முறை: எந்த கடல் உணவாக இருந்தாலும் நன்றாக சுத்தம் செய்ய வேண்டும்.. கடல் மீன்களால் நிறைய அலர்ஜிகள் ஏற்படுவது, அவைகளை சரியாக சுத்தம் செய்யாததால்தான் என்கிறார்கள். அதிலும் இந்த இறாலில் உள்ள நரம்புகளை சுத்தம் செய்யாமல் சாப்பிடும்போது, குடலில் செரிமானம் பாதிப்பு, அலர்ஜி, மூச்சுத்திணறல், சுவாசிப்பதில் சிரமம் இப்படி பல உடல் நலப்பிரச்சனைகள் வரக்கூடும்..
இறால்களை தண்ணீரை நன்றாக கழுவி எடுத்துக் கொண்டு, கத்தி அல்லது நமது கைகளாலே இறாலின் தலைப்பகுதியை துண்டிக்க வேண்டும். பிறகு வால் பகுதியையும் கையிலேயே பிய்த்து எடுக்கலாம்.
வெளிப்புற ஓடுகள்: அதாவது, முதலில், இறாலை அதன் கால்களால் கீழ்நோக்கி பிடித்து, இறாலின் வெளிப்புற ஓட்டை அகற்ற வேண்டும்.. பிறகு, அதன் ஓட்டை தலையின் மேல் இழுக்க முயற்சிக்கவும்.. இப்போது உள்ளே இருக்கும் மொத்த கழிவுகளுடன் சேர்த்து தலை பகுதியை அகற்றிவிடவேண்டும்.. இப்போது, தலைக்கு கீழே கால்களை அகற்ற வேண்டும்.. பிறகு, வால் மேலுள்ள ஓட்டையும், அதற்கு கீழுள்ள கால்களையும் நிக்க வேண்டும்.
இறால்களின் வெளிப்புற ஓட்டை அகற்றிய பிறகு, இறாலை முழுவதுமாக கழுவவும்... ஒரு கத்தியை பயன்படுத்தி அவற்றை நீளமாக வெட்ட வேண்டும்.. அங்குள்ள நரம்பு மற்றும் கருப்பு பகுதியை அகற்றி, கடைசியாக ஒருமுறை, குளிர்ந்த நீரில் ஒரு துளி உப்பு, மஞ்சள் சேர்த்து நன்றாக கழுவி எடுத்துவிடலாம்..
கருப்பு நூல்கள்: இந்த கருப்பு நூல் போல இருக்கும் நரம்பு பகுதியை சரியாக அகற்றாமல் சமைத்து சாப்பிடும்போது, ஒவ்வாமை, தொண்டை அடைப்பு, சுவாசிப்பதில் சிரமம் ஏற்பட்டு மூச்சுத்திணறல் போன்ற பாதிப்புகள் ஏற்படக்கூடும் என்று எச்சரிக்கிறார்கள் நிபுணர்கள்.
இந்த நரம்புகளை பிரித்தெடுக்கும்போது கவனமாக எடுக்க வேண்டும்.. இல்லாவிட்டால், இறாலில் பாதி நரம்புகள் தங்கிவிடும். இது இறால் சமைத்து சாப்பிடும்போது கசப்பை தந்துவிடும்.. அத்துடன் நிறைய கேடுகளையும் கொண்டுவந்துவிடும்
இறால் தலை: வெட்டியெறியப்படும் இறால் தலையிலும் நிறைய சத்துக்கள் உள்ளன.. அதனால் இதை வைத்து சமையல் செய்வார்கள்.. சிலர் பஜ்ஜி போல செய்து சாப்பிடுவார்கள். சிலர், தூக்கி எறியப்படும், இந்த தலை, வால், ஓடு இவைகளை எல்லாம் சேர்த்து சூப் வைத்தும் சாப்பிடுவார்கள்.












Click it and Unblock the Notifications