சிக்குன் குனியா+ டெங்கு+ பன்றி காய்ச்சல்= சீசனல் சுவாச பாதை வைரஸ்! வேகமா சுத்திகிட்டுருக்கு! உஷார்
சென்னை: பருவகால சுவாச பாதை வைரஸால் தமிழகத்தில் பலர் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இந்த வைரஸின் அறிகுறிகள் என்ன என்பதை தெரிந்து கொள்ளலாம். அது போல் அபாய அறிகுறிகள் குறித்தும் தெரிந்து கொள்ளுங்கள்.
இதுகுறித்து டாக்டர் பரூக் அப்துல்லா தனது பேஸ்புக் பக்கத்தில் கூறியிருப்பதாவது: மக்களே இப்ப நம்ம ஊர்கள்ல சீசனல் சுவாசப் பாதை வைரஸ் ஒன்னு சுத்திட்ருக்கு. காய்ச்சல் வேணுமா? இருக்கு... மூக்கடைப்பு மூக்கு ஒழுகணுமா?அதுவும் இருக்கு... நாற்பது பேர் சேர்ந்து ரூம் போட்டு அடிச்ச மாதிரி வலி வேணுமா? கண்டிப்பா இருக்கு...

வறட்டு இருமலும் இல்லாம , சளி இருமலும் இல்லாம ரெண்டுக்கும் நடுல ஒரு வகை இருமல் வேணுமா? அதுவும் இருக்கு... எச் 1 என் 1 ஆ இருக்கலாம்.. கொரோனாவோட லேட்டஸ்ட் வெர்ஷன் - எக்ஸ் ஈ சி ஆ இருக்கலாம்.. ஆனா கொஞ்சம் அறிகுறிகள் பலமாக வெளிப்படுகிறது.
சிலருக்கு டெங்கு போன்று தட்டணுக்கள் குறைகிறது. ஆனால் டெங்கு பாசிடிவ் வருவதில்லை. சுவாசப் பாதை மூலம் பரவும் வைரஸ் தொற்றாக இருப்பதால் இருமும் போதும் தும்மும் போதும் குழந்தைகளிடையே பள்ளிகளில் பரவி வீடுகளில் இருக்கும் முதியவர்களுக்கும் தொற்றுப் பரவுகிறது. காய்ச்சல் இருந்தால் பிள்ளைகளை வீடுகளில் தனிமைப்படுத்தி வைப்போம்.
காய்ச்சல் விட்டு இரண்டு நாட்கள் வரை பிறருக்குப் பரவும் தன்மை இருக்கும். முகக்கவசம் அணிவித்து பள்ளிகளுக்கு அனுப்பலாம். முதியோர்கள் மற்றும் இணை நோய்கள் இருப்பவர்கள் , கூட்டமான இடங்கள், அத்தியாவசியமற்ற பயணங்கள் ஆகியவற்றை தவிர்ப்பது நல்லது. வெளியிடங்களில் முகக்கவசம் அணிவது நல்லது , பாராசிட்டமால் மாத்திரைக்கு/ டானிக்குக்கு கேட்கும் அளவில் காய்ச்சல் இருப்பின் - பெரிய பிரச்சனை ஏற்படுத்தாது. சுவாசப்பாதை தொற்று என்று கொள்க .
பாராசிட்டமாலுக்கு அடங்காத காய்ச்சல் 102 டிகிரி ஃபேரன்ஹீட்டுக்கு மேல் இருப்பின் டெங்கு, பன்றிக் காய்ச்சல் போன்றவற்றை மனதில் கொள்க. பன்றிக் காய்ச்சலில் தீவிர காய்ச்சலுடன் கூட மூச்சுத் திணறல் / மூச்சு விடுவதில் சிரமம் இருக்கும். டெங்கு மற்றும் சிக்குன் குனியாவில் தீவிர காய்ச்சலுடன் எலும்பு மூட்டுகளில் எலும்பு முறிவு ஏற்பட்டது போல தீவிர வலி இருக்கும்.
காய்ச்சல் அறிகுறியை உதாசீனப்படுத்தாமல் வீட்டிலேயே சுய மருத்துவம் செய்து கொண்டிருக்காமல் மருத்துவரை கலந்தாலோசித்து சிகிச்சை பெறவும். காய்ச்சல் அடிக்கும் போது நீர்ச்சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்ளவும். ஓ.ஆர்.எஸ் எனும் உப்புக் கரைசல் திரவத்தைப் பருகவும். 20 கிராம் ஓ ஆர் எஸ் பாக்கெட் வாங்கி அதை ஒரு லிட்டர் நீரில் கலந்து பருகி வரவும்.
இது போன்ற வைரஸ் தொற்றுக்கு உள்ளாகும் போது நல்ல ஓய்வு தேவை. எனவே பயணங்களை ஒத்தி வைத்து விட்டு நன்றாக ஒன்றிரண்டு நாட்கள் ஓய்வு எடுக்கவும்.
அபாய அறிகுறிகளை அறிந்து கொள்க
- மூன்று நாட்களுக்கு மேல் விடாத காய்ச்சல்
- மூன்று நாட்கள் அடித்த ஜூரம் திடீரென்று நின்று , பாதம் உள்ளங்கை குளிர்ந்து போதல்
- உண்ண பருக இயலாமை
- வாந்தி வயிற்றுப்போக்கு இருப்பது
- மலம் கருப்பாக செல்லுதல்
- மலத்துடன் ரத்தம் வெளியேறுதல்
- பல் ஈறுகளில் ரத்தக்கசிவு
- திடீரென வயிறு உப்புதல்/ வயிற்று வலி ஏற்படுதல்
- அதீத உடல் சோர்வு
- மயக்கம்
- மூச்சு விடுவதில் சிரமம் / மூச்சுத் திணறல்
- காய்ச்சலுடன் வலிப்பு
போன்ற அறிகுறிகள் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவமனையில் தங்கி சிகிச்சை எடுக்க வேண்டும் என்பதை கவனத்தில் கொள்க... கொஞ்சம் கவனம் தேவை... இவ்வாறு டாக்டர் பரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார்.
-
பாமகவுக்கு 18 தொகுதி, அமமுகவுக்கு 9, பாஜக+ 40.. 167 தொகுதிகளில் அதிமுக போட்டி? இறுதியான சீட் ஷேரிங்? -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி யாருக்கெல்லாம் உறுதி? இந்த ஒரு தப்பு மட்டும் செஞ்சுடாதீங்க -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2!












Click it and Unblock the Notifications