சிறகடிக்க ஆசை: மீண்டும் அதே கதை.. மனோஜ் செய்த சத்தியம்.. முத்து கொடுத்த அதிர்ச்சி ! மாஸ் காட்டிய ஸ்ருதி

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியின் சிறகடிக்க ஆசை சீரியலில் இன்றைய ஜூலை ஒன்றாம் தேதிக்கான எபிசோடில் மனோஜ், முத்து, ரோகிணி, சத்யா - ரேகா திருமணம் என ஒரே நேரத்தில் பல சம்பவங்கள் நடந்ததால், அடுத்த எபிசோடின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. அதே நேரத்தில் மனோஜ் மீண்டும் மீண்டும் கடன்காரனாக சிக்கிக் கொண்டே இருக்க அவருக்காக முத்து தான் எப்போதும் தியாகி மாறிக் கொண்டிருக்கிறார்.

சிறகடிக்க ஆசை சீரியல் அப்டேட்

அதாவது ரோகிணியிடம் இருந்து டைவர்ஸ் வாங்க வேண்டும் என்றால், முதலில் அவரும் மனோஜ்க்காக பைனான்சியரிடம் கொடுத்த 5 லட்சம் ரூபாயை திருப்பிக் கொடுக்க வேண்டும் என்ற கண்டிஷன் மனோஜுக்கு பெரிய தலைவலியாக மாறியுள்ளது. ஜெயிலில் இருந்தபோது தன்னை வெளியே எடுக்க ரோகிணி செலவு செய்த பணத்தை திருப்பி கொடுத்தால் மட்டுமே டைவர்ஸ் பேப்பரில் கையெழுத்து போடுவேன் என்று ரோகிணி உறுதியாக சொல்லிவிட்டதால், அந்த பணத்தை எப்படியாவது ஏற்பாடு செய்ய மனோஜ் தீவிரமாக முயற்சி செய்து வருகிறார்.

Siragadikka Aasai serial Vijay TV

இதற்கிடையில், விஜயா வழக்கம்போல முத்து - மீனாவிடம் உதவி கேட்கிறார். ஆனால் இந்த முறை முத்து நேராகவே மறுத்துவிடுகிறார். "நாங்க வாங்கின கடனையே இன்னும் கட்ட முடியாமல் தவிக்கிறோம்... இதுல 5 லட்சம் எங்கிருந்து?" என்று வெளிப்படையாக சொல்லிவிடுகிறார்.

மனோஜ் சொன்ன விஷயம்

அந்த நேரத்தில் வீட்டுக்குள் வரும் மனோஜ், "எனக்காக யாரும் பணம் தர வேண்டாம். நானே பார்த்துக்கறேன்" என்று சொல்கிறார். ஆனால் முத்துவுக்கு அதில் நம்பிக்கையே வரவில்லை.

"இதை நான் சொன்னா நம்புவாங்க... நீ சொன்னா எப்படி நம்புறது?" என்று மனோஜை நேராக கேள்வி கேட்கிறார். அதுமட்டுமல்லாமல், "எங்கயாவது மீண்டும் கடன் வாங்கி எல்லாரையும் பிரச்சனையில் மாட்டிடாத" என்று எச்சரிக்கிறார்.

இன்றைய எபிசோடு

இதையடுத்து முத்துவின் சந்தேகத்தை போக்குவதற்காக, "நான் எந்த தப்பும் செய்ய மாட்டேன்" என்று தன் தலையில் அடித்து மனோஜ் சத்தியம் செய்கிறார். ஆனாலும் அந்த சத்தியத்தைக் கூட முத்து முழுமையாக நம்பாதது போலவே தெரிகிறது. இதனால் மனோஜ் உண்மையிலேயே நேர்மையாக மாறிவிட்டாரா... இல்லை மீண்டும் ஏதாவது திட்டம் போடுகிறாரா என்ற சந்தேகம் ரசிகர்களுக்கும் வந்திருக்கிறது.

மறுபக்கம், சத்யா - ரேகா திருமண செலவுக்காக முத்துவும் மீனாவும் கவலையில் இருக்கிறார்கள். அந்த நேரத்தில் ரவியும் ஸ்ருதியும் வந்து ஒரு லட்சம் ரூபாய் கொடுத்து இன்ப அதிர்ச்சி கொடுக்கிறார்கள்.

ஸ்ருதி ரவியின் பெருந்தன்மை

"இந்த கல்யாணம் நல்லபடியாக நடக்கணும்... இந்த பணத்தை அதுக்கு பயன்படுத்திக்கோங்க. லோன் கட்ட வேண்டியிருந்தாலும் நாங்க மாதம் மாதம் உதவுறோம்" என்று இருவரும் சொன்னதும், முத்துவுக்கும் மீனாவுக்கும் பெரிய ஆறுதலாக மாறுகிறது.

இந்த காட்சி ரசிகர்களிடமும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. "எப்பவும் சண்டை மட்டும் இல்லாம, குடும்பத்துக்காக இப்படி நின்று உதவுறது தான் உண்மையான உறவு" என்று பலரும் பாராட்டி வருகின்றனர்.

Siragadikka Aasai serial Vijay TV

அடுத்த காதல் ஜோடி

இதற்குப் பிறகு முத்துவும் மீனாவும் வழக்கம்போல ஸ்போக்கன் இங்கிலீஷ் கிளாசுக்கு போகிறார்கள். அங்கேயும் ஒரு சின்ன ட்விஸ்ட் காத்திருக்கிறது. காதல் பற்றி இங்கிலீஷில் பேச சொல்லிய டீச்சர் ஸ்வேதாவிடம், மிஷ்ரா திடீரென தனது காதலை வெளிப்படுத்திவிடுகிறார். இதை எதிர்பார்க்காத ஸ்வேதா அதிர்ச்சியடைந்து, கோபமாக அங்கிருந்து வெளியேறுகிறார்.

கடைசியாக முத்து பாட்டி நாச்சியார் வீட்டில் சத்யா - ரேகா திருமண வேலைகள் மும்முரமாக நடந்து கொண்டிருக்கும் காட்சிகளுடன் இன்றைய எபிசோடு முடிகிறது.

ஆனால் இன்னும் ஒரு பெரிய கேள்வி மட்டும் ரசிகர்கள் மனதில் இருக்கிறது. மனோஜ் உண்மையிலேயே 5 லட்சம் ரூபாயை நேர்மையான வழியில் ஏற்பாடு செய்யப் போகிறாரா? இல்லை மீண்டும் ஏதாவது பிரச்சனையில் சிக்கப் போகிறாரா? அதேபோல், பல தடைகளை தாண்டி நடக்க இருக்கும் சத்யா - ரேகா திருமணம் எந்த பிரச்சனையும் இல்லாமல் நடக்குமா? என்ற எதிர்பார்ப்புடன் ரசிகர்கள் அடுத்த எபிசோடுக்கு காத்திருக்கிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+