மீனுடன் கலந்த ரகசியம்.. கருவாடு சமாச்சாரம் வேற இருக்கு.. இதெல்லாம் நோட் பண்ணுங்க.. மிஸ் பண்ணாதீங்க
சென்னை: உடல்நலன் கருதி பல்வேறு விதிமுறைகளை நம் முன்னோர்கள் விதித்திருக்கிறார்கள்.. அறிவியல் பூர்வமாக எதையும் நிரூபிக்கப்படவில்லை என்றாலும், எந்த உணவுடன், எதை சேர்த்தால் நன்மைகள் இருமடங்காகும் என்பதை அறிந்து வைத்திருக்கிறார்கள்..
உணவு தொடர்பான கட்டுக்கதைகளை தவிர்த்துவிட்டு, அதிலுள்ள சத்துக்கள் முழுமையாக நமக்கு கிடைக்கும்வகையில், உணவுகளை எடுத்துக் கொள்ளலாம். அல்லது மருத்துவர்களிடம் கேட்டும் அந்த சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொள்ளலாம்.
உணவுகள்: பாலில் இருந்து பெறப்படும் தயிரில் வைட்டமின் பி2 மற்றும் வைட்டமின் பி12, பொட்டாசியம், கால்ஷியம் உள்ளிட்ட சத்துக்கள் நிறைந்து காணப்படுகின்றன... இந்த சத்துக்கள் குறிப்பிட்ட உணவுகளுடன் சேர்த்து சாப்பிடும்போது, தொந்தரவுகளை தந்துவிடும் என்கிறார்கள்.. அதுவும், அசைவ உணவுகளுடன் சேர்த்து சாப்பிடும்போது நிறைய உபாதைகள் வந்துவிடும் என்பதால்தான், அவைகளை சேர்த்து சாப்பிடக்கூடாது என்கிறார்கள்.
தயிர்: தயிர் + மீன் இவைகளையும் சேர்த்து சாப்பிடக்கூடாது என்பார்கள்.. செரிமானத்தை மந்தப்படுத்தும் தன்மை தயிருக்கு உண்டு... அப்படிப்பட்ட தயிரை, சத்து அதிகமான மீனுடன் சேர்த்து சாப்பிடும்போது செரிமானம் மேலும் மந்தமடையும்.. இதனால் சத்துக்கள் எதுவும் நமக்கு முழுமையாக கிடைக்காமலேயே போய்விடும்.. மீன், தயிர் இரண்டையும் தனித்தனியாக சாப்பிட்டால், மொத்த சத்துக்களும் நமக்கு வீணாகாமல் கிடைக்குமாம்.

தயிர் + கீரையும் சேர்த்து சாப்பிடக்கூடாது என்பார்கள்.. சிலர் தயிர் + கருவாடு சேர்த்து சாப்பிடுவார்கள்.. இதனால் செரிமான கோளாறு ஏற்படும்.. தயிரும் மீனும், அல்லது தயிரும் கருவாடும் என சேர்த்து சாப்பிடுவதால், செரிமான கோளளாறு ஏற்படும் என்பதே உண்மை.. மற்ற கட்டுக்கதைகள் எதுவும் இல்லை என்கிறார்கள்.
அஜீரணம்: மாம்பழம் + தயிரும் சேர்த்து சாப்பிடக்கூடாது என்பார்கள். இதற்கு காரணம், மாம்பழம் உடலுக்கு சூடு.. தயிருடன் சேர்த்து சாப்பிடும்போது, செரிமான பிரச்சனை வரலாம்.. எப்பவாவது சாப்பிட்டால் பரவாயில்லை.. தினமும் சாப்பிட்டால்தான் நிச்சயம் அஜீரணம் ஏற்படும்..
மீன் + முள்ளங்கியை சேர்த்து சாப்பிடக்கூடாது என்பார்கள்.. அப்படி சாப்பிட்டால், சளி, மலசிக்கல் போன்ற உடல் உபாதைகள் உண்டாக சில வாய்ப்புகள் உண்டு... நுரையீரல் அல்லது சுவாச பாதிப்புகளுக்காக துளசி கேப்ஸ்யூல் அல்லது துளசி சாறு அருந்தியிருந்தால், அடுத்த அரை மணி நேரத்திற்கு பால் அருந்தக் கூடாதாம். தேன் சாப்பிட்ட பிறகு இனிப்பு சார்ந்த உணவுகளோ சாப்பிடக் கூடாது... வாழைப்பழத்தைத் தயிர், மோருடன் கலந்து சாப்பிடக்கூடாது... கோதுமையை நல்லெண்ணெயுடன் சமைத்துச் சாப்பிடக்கூடாது.
கருவாடு: மீன், கருவாடு சாப்பிட்டதுமே, பால், தயிர் சாப்பிட்டால், "வெண் மேகம்" போன்ற நோய்கள் வர வாய்ப்பு உள்ளது. இதனால் சுவாச சம்பந்தப்பட்ட கோளாறுகள் உண்டாகக் கூடும்.. உணவுப்பொருட்களை வைத்து சில கட்டுக்கதைகள் திணிக்கப்பட்டாலும், அவைகள் உடலுக்கு எதிர்மறை விளைவுகளை உண்டு பண்ணும் என்பதே பிரதான காரணம். அல்லது சத்துக்கண் வீணாகிவிடும். இதையே தனித்தனியாக சாப்பிட்டால், சத்துக்கள் 2 மடங்காக நமக்கு கிடைக்கும்.
உதாரணமாக, பழங்களை நாம் எப்போது சாப்பிட்டாலும், தனியேதான் சாப்பிட வேண்டும்.. சாப்பாட்டுடன் கலந்து சாப்பிடக்கூடாது. அதன் தாதுச்சத்து உணவுடன் கலந்து பலனற்றுப் போய்விடும். ஒன்றிற்கும் மேற்பட்ட எதிரெதிர் குணங்கள் கொண்ட 2 உணவுப் பொருட்கள் பெற்றிருந்தால் அதை சாப்பிடக்கூடாது.. தேன் + நெய்யை எடுத்துக் கொண்டால், எதிரெதிர் உணவுப்பொருட்கள்தான்..
என்ன காரணம்: பிரியாணிக்கு வைக்கப்படும் தயிர் வெங்காயமும் கூட தவறுதான் என்கிறார்கள் டாக்டர்கள்.. காரணம், தயிர் குளிர்ச்சியை தரக்கூடியது, வெங்காயம் சூட்டை கிளப்பிவிடக்கூடியது.. எதிரெதிர் குணங்களை கொண்டதால், இவைகளை சேர்த்து சாப்பிடுவது அஜீரணத்தை தருமாம்.. அதேபோல, மட்டன், சிக்கன் பிரியாணி செய்யும்போது, அதிலும் தயிரை சேர்த்து சமைக்கக்கூடாது என்கிறார்கள்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications