ஒரே "இலை"யில் ஓராயிரம் ஆச்சரியம்.. சர்க்கரை நோயாளிகளின் "இனிப்பு ரசம்" இதான்.. இலைய விட்றாதீங்க
சென்னை: பீட்ரூட் கிழங்குகளைவிட, அதன் இலைகளில்தான் மருத்துவ குணங்கள் நிறைய உள்ளன என்பது பலருக்கும் தெரியாது.. இந்த இலைகள் மருந்தாகவும், அழகுபொருளாகவும், பயன்படுகிறது.
பீட்ரூட் இலையில், மெக்னீசியம், சோடியம், பொட்டாசியம், போரான், கால்சியம், இரும்பு, பாஸ்பரஸ், துத்தநாகம், பீட்டைன், வைட்டமின் C, நிறைய வைட்டமின்களும், கனிமங்களும் அடங்கியுள்ளன..
சுருக்கமாக சொன்னால், பீட்ரூட்டில் என்னென்ன சத்துக்கள் உண்டோ, அத்தனையும் அதன் இலைகளிலும் இருப்பதுதான் இதன் சிறப்பம்சமாகும்.. அத்துடன் இலைகளை பொடியாக நறுக்ககூடாது என்றும் சொல்கிறார்கள்.

சர்க்கரை நோயாளிகள்: பீட்ரூட் இனிப்பாக இருந்தாலும், இதன் இலைகள் ரத்த சர்க்கரையை குறைக்கின்றன என்பது ஆச்சரியமான உண்மை.. கல்லீரலின் கொழுப்பையும் கரைக்கின்றன. ரத்த ஓட்டம் சீராகிறது. செரிமான கோளாறுகளை நீக்குகிறது.. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து தரக்கூடியது.. குறைவான கலோரி உணவான இதை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.
பீட்ரூட் கீரையை வைத்து, சாலட், பொரியல், ஜாம், ஊறுகாய், சூப் இப்படி நிறைய உணவு பொருட்களை செய்யலாம்.. இந்த இலைகளை பராத்தாவில் சேர்த்து சமைப்பார்கள்.. இந்த பீட்ரூட் இலையில் சிலர் ரசம் வைப்பார்கள்.. பீட்ரூட்டை தோல் எடுத்துவிட்டு, துண்டு துண்டாக நறுக்கி குக்கரில் 4 டம்ளர் தண்ணீர் சேர்த்து 3 விசில் வைத்து எடுத்து கொள்ள வேண்டும்.
ரசப்பொடி: அதன் இலைகளை கழுவி தனியாக நறுக்கி கொள்ள வேண்டும். இப்போது குக்கரில், ரசப்பொடி, தக்காளி, நசுக்கிய பூண்டு, தேவையான அளவு உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து கலக்க வேண்டும். தனியாக, ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை, பெருங்காய தூள், சீரகம், காய்ந்த மிளகாயை போட்டு தாளித்து, பீட்ரூட் இலையையும் போட்டு வதக்க வேண்டும்.. இதற்கு பிறகு, வாணலியில் பீட்ரூட் கலவையை ஊத்தி கொதிக்க வைத்து இறக்கிடவேண்டும்.
சிலர் இந்த பீட்ரூட் இலையில் துவையல் செய்வார்கள்.. ஒரு வாணலில் எண்ணெய் ஊற்றி, உளுத்தம்பருப்பு, வெங்காயம், மிளகாய், சேர்த்து வதக்க வேண்டும். சிறிது புளி, மற்றும் சுத்தம் செய்து வைத்திருக்கும் பீட்ரூட் இலைகளை சேர்த்து சில நிமிடங்கள் கிளறிவிட்டு இறக்கிவிட வேண்டும், ஆறியதும், உப்பு சேர்த்து அரைக்க விடும். பிறகு, இன்னொரு வாணலியில் எண்ணெயில், உளுத்தம்பருப்பு, கடுகு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து கொட்டினால் துவையல் ரெடி.
கீரை மசியல்: வழக்கமாக கீரை மசியல் செய்வது போல, இந்த பீட்ரூட் இலைகளை வைத்தும் மசியல் செய்யலாம்.. ஒரு வாணலியில் எண்ணெய் வைத்து, கடுகு, உளுந்து, மிளகு, சீரகம், காய்ந்த மிளகாய், பெருங்காயத்தூள் சேர்த்து தாளித்து, பிறகு பூண்டு சேர்த்து நன்றாக வதக்கி, ஒரு கிண்ணத்தில் எடுத்து வைத்து கொள்ளவேண்டும்.
அதே வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு வெங்காயம், பச்சை மிளகாய், தக்காளிவை சேர்த்து வதக்கி, பிறகு சிறிது புளி, சுத்தம் செய்து வைத்திருக்கும் பீட்ரூட் கீரையை சேர்த்து நன்றாக வதக்கி இறக்கிவிட வேண்டும்.. இவை எல்லாம் ஆறியதும் மிக்ஸியில் போட்டு மசித்து எடுக்கவும். இதற்கு தண்ணீர் சேர்க்க தேவையில்லை. அப்படியே சாதத்துடன் இந்த கீரை மசியலை பிசைந்து சாப்பிடலாம்.
நம்முடைய புற அழகுக்கும் பீட்ரூட் இலை நிறைய விஷயங்களில் பயன்படுகிறது.. பீட்ரூட் இலைகளை கொதிக்கும் நீரில் போட்டு, தண்ணீர் பாதியாக குறையும் வரை கொதிக்க விட்டு, பிறகு, நீரை வடிகட்டி விட்டு, இலைகளை மட்டும் மிக்ஸியில் போட்டு நன்கு அரைத்து எடுத்து கொள்ள வேண்டும்.
அதிக பலன்: அதில், 1 ஸ்பூன் ஹென்னா சேர்த்து கலந்து, உள்ளந்தலையில் படும்படி தடவி 20-25 நிமிடம் ஊற வைத்துவிட்டு குளித்தால், முடி கொட்டுவது நிற்கும். குறைந்தது 4 முறையாவது இதை செய்ய வேண்டுமாம். ஆக மொத்தம் பீட்ரூட் வாங்கும்போது, இலைகளுடன் சேர்த்தே வாங்குங்கள்.. பலனை அள்ளுங்கள்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications