அதிக சூடாக டீ, காஃபி குடித்தால் இவ்ளோ பாதிப்புகளா? கேன்சர் கூட வருமா? ஷாக் கொடுக்கும் ஆய்வாளர்கள்!

அதிக சூடாக டீ, காஃபியை தொடர்ந்து குடித்தால் கேன்சர் உள்ளிட்ட பாதிப்புகள் கூட வரும் ரிஸ்க் இருப்பதாக மருத்துவ ஆய்வில் சொல்லப்பட்டுள்ளது.

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிக சூடாக டீ, காஃபியை தொடர்ந்து குடித்தால் உடல் நலனில் என்ன மாதிரியான பாதிப்புகள் ஏற்படும் என்பது குறித்து மருத்துவ ஆய்வு ஒன்று பட்டியலிட்டுள்ளது. தொடர்ச்சியாக 60 டிகிரி செல்சியஸிற்கு மேலாக சூடான பானங்களை அருந்தினால் கேன்சர் உள்ளிட்ட பாதிப்புகள் கூட வரும் ரிஸ்க் இருக்கிறதாம். அந்த ஆய்வில் சொல்லப்பட்ட விவரங்களை இங்கே பார்க்கலாம்.

காலையில் விழித்ததும் பலருக்கும் டீயோ..காஃபியோ குடிக்காவிட்டால் எந்த வேலையும் ஓடாது. அன்றைய தினம் முழுவதும் எதையோ மிஸ் பண்ணிட்டோம் என்ற உணர்வு கூட பலருக்கும் இருக்கும்.

அதுவும் பல பேச்சுலர்களுக்கு எல்லாம் டீ தான் காலை உணவு என்று கூட சொல்லலாம். காலையில் நேராக டீக்கடைக்கு போய் சூடாக ஒரு டீ-யையும் பஜ்ஜி, போண்டா என எதையாவது கடித்து விட்டு சில நாட்களில் காலை உணவையே ஸ்கிப் செய்து விடக் கூடிய நபர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். சாப்பாட்டை மிஸ் பண்ணினால் கூட டீயை மிஸ் பண்ண தவறுவதில்லை.

அதிக சூடாக அருந்தினால்..

அதிக சூடாக அருந்தினால்..

அலுவலக வேலையில் இருப்பவர்கள் கூட காலை மாலையும் ஒரு சின்ன டீ பிரேக் எடுத்துக் கொண்டால் தான் புத்துணர்ச்சியுடன் வேலை பார்க்க முடிவதாக சிலாகித்துக் கொள்வதுண்டு. இப்படி ஆவி பறக்க நாம் அருந்தும் டீ, காஃபியை அதிக சூடாக அருந்தினால் பல உடல் நல பாதிப்புகளும் வரக்கூடியதாக திடுக்கிட வைக்க்கும் ஒரு மருத்துவ ஆய்வு வெளியாகியுள்ளது. டீ, காஃபியை 60 டிகிரி செல்சியஸிற்கு மேலாக குடித்தால் கேன்சர் போன்ற பாதிப்புகளும் ஏற்படும் அபாயம் இருப்பதாக அந்த ஆய்வு எச்சரித்துள்ளது.

புற்றுநோய் ஏற்படும் அபாயம்

புற்றுநோய் ஏற்படும் அபாயம்

சர்வதேச மெடிக்கல் ஜர்னலில் டீ, காஃபி அதிக சூடாக குடிப்பதால் ஏற்படும் பாதிப்புகள் பற்றிய ஆய்வு முடிவு வெளியாகியுள்ளது. அதில், எந்த ஒரு பானத்தையும் அதீத சூடாக அதாவது 60 டிகிரி செல்சியஸ் மேலான வெப்ப நிலையில் 700 மி.லிட்டருக்கும் மேலாக தினமும் அருந்தும் பட்சத்தில் உணவுக்குழாய் புற்றுநோய் ஏற்படும் அபாயம் 90 சதவீதம் இருப்பதாக ஆய்வில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள்ளது. உணவுக்குழாயில் செல்கள் அசாதாரண முறையில் கட்டுப்பாடு இன்றி வளரும் போது உணவுக்குழாய் புற்றுநோய் ஏற்படுவதுண்டு.

ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆய்வுகள்

ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆய்வுகள்

அதிக சூடான பானங்களின் பட்டியலில் தற்போது டீ, காஃபியும் அடங்கும் என்று உலக சுகாதார அமைப்பும் கூறியிருக்கிறது. உலக சுகாதார அமைப்பின் IARC எனப்படும் புற்றுநோய் பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபடும் அமைப்பு 10 நாடுகளில் இருந்து 23 விஞ்ஞானிகளுடன் இணைந்து அதிக சூடான பானத்திற்கும் கேன்சருக்கும் உண்டான தொடர்பு பற்றி ஆய்வு செய்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆய்வுகளை மதிப்பாய்வு செய்துள்ளது.

டேஸ்ட் பட்ஸ் பாதிக்கப்படக்கூடும்

டேஸ்ட் பட்ஸ் பாதிக்கப்படக்கூடும்

இது மட்டும் இல்லையாம்... அதிக சூடாக அதிகப்படியாக டீ, காஃபி குடித்தால் நமது நாக்கில் உள்ள சுவை உணர்வுகளும் காட்டும் டேஸ்ட் பட்ஸ் பாதிக்கப்படக்கூடும். நமது நாக்கில் உள்ள மிகவும் சென்சிட்டிவ் ஆன டேஸ்ட் பட்ஸ்கள் சூடாக பானம் அருந்தும் போது பிற செல்களை போலவே பாதிப்பு அடையுமாம். தொடர்ந்து சூடான பானங்களை அருந்தும் போது நமது நாக்கில் உள்ள சுவை மொட்டுக்கள் நிரந்தரமாக பாதிப்பு அடையவும் வாய்ப்பு இருக்கிறதாம். அதிக சூடாக அருந்தினால் உதடுகள் கூட பாதிப்புக்கு உள்ளாகுமாம். உதடுகள் அதிக சூட்டால் பாதிக்கப்பட்டு கருமையாகக் கூட மாறும் என்கிறது ஆய்வு. தொடர்ந்து அதிக சூடாக பானங்களை குடிப்பது நெஞ்சு எரிச்சலுக்கு வழி வகுக்குமாம்.

எது அதீத சூடு

எது அதீத சூடு

வழக்கமாக மிதமான சூட்டுடன் காபி, டீ குடிப்பவர்கள் எல்லாம் அச்சப்பட வேண்டியது இல்லை. தினமும் 700 மில்லி மீட்டருக்கும் மேலாக 60 (140 டிகிரி பாரன்ஹீட்) டிகிரி செல்சியம் மற்றும் அதற்கும் மேலான வெப்பத்துடன் பானங்களை தொடர்ந்து அருந்தினால்தான் உணவுக்குழாய் புற்று நோய்க்கான ரிஸ்க் அதிகம் இருப்பதாக ஈரானை சேர்ந்த ஆய்வு தெரிவித்துள்ளது. உணவுக்குழாய் மூலமாகத்தான் நாம் உண்ணும் உணவுகள், திரவ உணவுகள் ஆகியவை நமது வயிறை சென்றடையும். உணவுக்குழாயில் கட்டி வளரும் போது அல்லது செல்கள் வளர்ச்சியில் மாறும் போது புற்று நோய் ஏற்படுகிறது.

உணவுக்குழாய் புற்றுநோய்க்கான(esophageal) அறிகுறிகள்

உணவுக்குழாய் புற்றுநோய்க்கான(esophageal) அறிகுறிகள்

* தொடர் இருமல்.
* அஜீரணம் அல்லது நெஞ்சு எரிச்சல்.
* குரல் வளம் பாதிப்பு.
* உடல் எடை இழப்பு.
* பசி போதிய அளவு எடுக்காதது.
* உணவுக்குழாயில் இரத்தக் கசிவு.

உள்ளிட்ட பல காரணிகள் இதற்கான அறிகுறிகள் என சொல்லப்படுகின்றன. எனினும் இந்த அறிகுறிகள் இருப்பதால் மட்டுமே அச்சப்படுவது அவசியம் அற்றது என்று சொல்லும் மருத்துவ நிபுணர்கள் சந்தேகம் இருந்தால் மருத்துவரிடம் அணுகி விளக்கம் பெறுவதே பெஸ்ட் என்கிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+